சமையல் எரிவாயுவின் விலைகள் குறைந்த அளவிலேயே அதிகரித்துள்ளன - அமைச்சர் பந்துல
சமையல் எரிவாயுவின் விலைகள் கடந்த வருட விலை அதிகரிப்போடு ஒப்பிடுகையில் மிகவும் குறைந்த விகிதத்திலேயே அதிகரித்துள்ளதாக வர்த்தக, நுகர்வோர் விவகார அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்தார். அதன் அடிப்படையில் ஷெல் காஸின் விலை கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் 313 ரூபா குறைவாகவும் லாப் காஸின் விலை 383 ரூபா குறைவாகவும் விற்பனை செய்யப்படுவதாகவும் அவர் கூறினார். சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பு தொடர்பாக செய்தியாளர்களுக்கு விளக்கமளிக்கும் மாநாடு நேற்று அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இங்கு அமைச்சர் தொடர்ந்தும் விளக்கமளிக்கையில்; நீதிமன்றத்தின் உத்தரவின் படி உலக சந்தையில் ஏற்படுகின்ற விலை மாற்றங்களுக்கு ஏற்ப இரண்டு மாதங்களுக்கு ஒரு தடவை இவ்வாறு காஸ் விலை தீர்மானிக்கப்படுகிறது. இவ்விலை நிர்ணயத்தின் அடிப்படையில் சமையலுக்காக பாவிக்கப்படும் எரிவாயுவின் விலையை அதிகரிக்கவோ அல்லது குறைக்கவோ அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதன் அடிப்படையிலேயே ஷெல் காஸின் விலை 103 ரூபாவினாலும் லாப் காஸின் விலை 69 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளன. எனவே ஷெல் காஸ் சிலிண்டர் ஒன்றின் விலை தற்போது 1550 ரூபாவிற்கும் லாப் காஸ் சிலிண்டர் ஒன்று 1476 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படுகின்றன.
0 Response to "சமையல் எரிவாயுவின் விலைகள் குறைந்த அளவிலேயே அதிகரித்துள்ளன - அமைச்சர் பந்துல"
แสดงความคิดเห็น