மன்னாரில் வடிகால் அமைப்பு : பாதைகள் மூடப்பட்டதால் வாகன நெரிசல் அதிகரிப்பு
மன்னாரில் தற்போது இடம்பெற்று வரும் வீதி மற்றும் வடிகால் அமைப்பு அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் காரணமாக முக்கியமான பாதைகள் மூடப்பட்டுள்ளன.
இதனால் மன்னாரில் போக்குவரத்துக்கள் தொடர்ச்சியாகப் பாதிப்படைந்து வருவதாகத் தெரிவிக்கபப்டுகிறது. ஏ 14 நெடுஞ்சலை பணிகள் இடம்பெற்று வருவதால் மன்னார் நகரின் பிரதான பாதைகள் மூடப்பட்டுள்ளன.
அதேவேளை, நகர வடிகால் அமைப்பு வேலைகள் இடம்பெற்று வருவதாலும் பிரதான பாதைகள் பல மூடப்பட்டுள்ளன.
மேற்படி வீதிகள் தொடர்ந்து மூடப்பட்டு வருவதால் வாகன நெரிசல்கள் ஏற்படுகின்றன. வாகன விபத்துக்களும் அடிக்கடி இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.








0 Response to "மன்னாரில் வடிகால் அமைப்பு : பாதைகள் மூடப்பட்டதால் வாகன நெரிசல் அதிகரிப்பு"
แสดงความคิดเห็น