jkr

பிரியாமணியின் பாய்பிரண்ட் யார்?


ஒரு நடிகையுடன் ஒருவரை இணைத்து வதந்தி கிளம்புவது வழக்கம். இப்படித்தான் இதற்கு முன்பெல்லாம் வதந்திகள் வரும். ஆனால் பிரியாமணியுடன் மூன்று நடிகர்களை இணைத்து இப்போது வதந்தி கிளம்பி வருகிறது.

பிரியாமணி நடிக்கும் படங்களை விட அவர் குறித்த வதந்திகள்தான் இப்போதெல்லாம் நிறைய வருகிறது.

தமிழ் நடிகர் விஷால், தெலுங்கு நடிகர் தருண், மலையாள நடிகர் பிருத்விராஜ் என மொழிக்கு ஒருவராக மூன்று நடிகர்களுடன் பிரியாமணியை இணைத்து காதல் வதந்திகள் ரெக்கை கட்டிப் பறந்து கொண்டிருக்கின்றன.

விஷாலுடன் அவரை இணைத்து ஒரு பக்கம் பேசிக் கொண்டிருக்க, மறுபக்கம் தருணின் நெருங்கிய தோழி பிரியா மணி என்கிறார்கள். அதேசமயம், பிருத்விராஜுடன் இணைத்து நீண்ட காலமாகவே வதந்திகள் வந்தபடி உள்ளன.

ஆனால் எல்லா வதந்திகளையும் சிரித்தபடி கேஷுவலாக எதிர்கொள்கிறார் பிரியா மணி. அனைவருமே எனக்கு நல்ல நண்பர்கள். அதிலும், பிருத்விராஜின் அம்மாவும், எனது அம்மாவும் நீண்ட கால தோழிகள். எனவே எனக்கு சிறு வயதிலிருந்தே பிருத்விராஜை நன்றாகத் தெரியும். இருவரும் ஒன்றாகவும் நடித்துள்ளோம், அவ்வளவுதான் என்று கூறி சிரிக்கிறார்.

ஆனால் தருண், பிரியாமணிக்கு ஒரு கார் வாங்கிக் கொடுத்திருப்பதாக ஒரு சீரியஸான வதந்தி தெலுங்கு த்
திரையுலகில் வேகமாக வலம் வந்து கொண்டிருக்கிறது.

எந்த 'வீரனைப்' பார்த்து 'எனக்கு ஒன்ன ரொம்பப் பிடிக்குண்டா' என்று நிஜமாக சொல்லப் போகிறாரோ முத்தழகி..!
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "பிரியாமணியின் பாய்பிரண்ட் யார்?"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates