சரத் பொன்சேகாவின் ராஜிநாமா ஏற்றுக்கொள்ளப்படும்?

கூட்டுப் படைகளின் தலைமை அதிகாரி ஜெனரல் சரத் பொன்சேகா, தேர்தலில் போட்டியிடுவது குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன. இந்நிலையில், அவரது ராஜிநாமா கடிதத்தை வழங்கினால், அதற்கான மறுமொழியை துரிதமாக வழங்குவதற்கு ஜனாதிபதி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சிரேஷ்ட அமைச்சர்கள் சிலருடன் கலந்துரையாடும்போது பேசுகையில், தனது உயரதிகாரிகளுக்கு இதுதொடர்பாக அறிவுறுத்தியுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
மக்கள் நலனுக்காக, தமது சீருடையை அகற்றிக்கொள்வதற்கு தாம் எப்போதும் தயாராக உள்ளதாக ஜெனரல் சரத்பொன்சேகா அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.







0 Response to "சரத் பொன்சேகாவின் ராஜிநாமா ஏற்றுக்கொள்ளப்படும்?"
แสดงความคิดเห็น