jkr

30வருட பிரபாவும் 3மாத KPயும் LTTE ஒருபார்வை!


1983 ஆண்டின்பின்னர் 2002 ஆண்டு வரையில் இலங்கை இராணுவத்திற்கெதிராக பல வெற்றிகளை பெற்ற புலிகள் இயக்கம் தனது இராணுவ சமநிலையை தெளிவுபடுத்தி நோர்வேயின் அனுசரணையுடன் இலங்கை அரசுடன் ஒருசம அரசாக நிமிர்ந்துநின்றதைக்கண்டு உலகத்தமிழினமே மெய்சிலிர்த்து நின்றது. 2002 தொடக்கம் 2004 ஆண்டுவரையில் பலகட்டப்பேச்சுவார்த்தைகளை தாங்கள்தான் தமிழர்களின் ஏகப்பிரதிநிதிகள் என்ற அடிப்படையில் புலிகளின் மேல்மட்டத் தலைவர்கள் மட்டுமே பேச்சுவார்த்தைகளை அரசுடன் நடத்தி மெதுவாக வழுவிச் சென்றுகொண்டிருந்தனர்.இக்காலகட்டங்களில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளிலும் மக்களால்தெரிவுசெய்யப்பட்டு பாராளமன்றத்தில் அங்கம்வகித்த தமிழ்தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினரும் கலந்துகொள்ள புலிகள் அனுமதிக்கவில்லை என்பதனை யாவரும் மறந்திருக்கமாட்டீர்கள். பேச்சுவார்த்தை ஒருபுறம் நடந்துகொண்டிருக்க வன்னியாட்சியிலே மாவீரர் துயிலும் இல்லங்களையும்,வங்கர்களும் நீர்த்தடாகங்களும் ஆயுதத் தொழிற்சாலைகளையுமே கட்டிய டுவுவுநு தமிழீழத்திற்கான எந்தவொரு பொருளாதார மேம்பாட்டிற்காகவும் ஒருசிறிதேனும் செயற்படவில்லையேயென தமிழினம் ஏங்கி நின்றது.
வெளிநாடுகளில் நடைபெற்ற ஒவ்வொரு சுற்றுப்பேச்சுவார்த்தைகளின் போதும் இராணுவ கெலிக்கொப்ரர்களில் இலங்கை அரசின் கடவுச்சீட்டுடன் உலகை வலம் வந்த புலித்தளபதிகள் அதிநவீன ஆயுதத்தளபாடங்களை வாங்குவதிலும் தங்கள் கடல்கடந்த வருமானத்தை பெருக்கிக் கொள்வதிலுமே அதிகவனம் செலுத்தியமையை தமிழீழக்கனவில் மிதந்த அப்பாவி தமிழர்களுக்கு விளங்காமல் போய்விட்டது.
இக்காலகட்த்தில்தான் தமிழ் மக்கள் தமிழீழம் எனப்போராடப்புறப்பட்ட புலிகளியக்கம் வழிமாறிச் செல்வதையும் தமிழ்மக்களின் எதிர்கால அரசியல் மற்றும் அவர்களின் சமூகமேன்பாட்டிற்கான எந்தவொரு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் வன்னித்தலைமை எடுக்கமுன்வராத நிலையில் கிழக்குமாகாணம் கருணா அம்மானின் கட்டுப்பாட்டில் தனியாகப்பிரிந்து புலித்தலைiமையின்கீழ் போராட்டத்தை தொடர மன்றாடிக்கேட்கப்பட்டபோது தழச்செல்வன் தமிழேந்தி பொட்டம்மான் போன்ற பச்சோந்தி பிரதேசவாதிகளால் கருணாவின் தனித்துவம் சாணாக்கியம் அவரின் இராணுவ இராஜதந்திரங்களை பற்றியும் தரக்குறைவாக LTTE யின் தலைவருக்கும் உலகத்தமிழருக்கும் விதந்துரைக்கப்பட்டன.
இவ்வாறாக பிழையான தகவல்களை வழங்கி தேசியத்தலைவரை வழிநடத்தியதை எண்ணி எண்ணி புலம்பெயர்ந்த தமிழினத்தோடு ஈழத்தின் மூலைமுடுக்குளில் வாழும் சாதாரணதமிழனும் தன்தலைவனின் உயிரை ஓயாத அலைகளின்போது காப்பாற்றியவரும் புலிகளின் மரபுவழிபோராட்டத்தின் முன்னோடித் தளபதியாக திகழ்ந்தவருமான கருணா அம்மானை எடைபோட முடியாமல்போனதையிட்டு கலங்கிக் கண்ணீர்வடிக்கின்றது.
இதன் விளைவாக புலிகள் இயக்கம் இரண்டாகப் பிளவுபட்ட கிழக்குமாகாணத்த்தை தன்கட்டுபாட்டில் சுமார்6000 போராளிகளுடன் தனியாகப்பிரிந்து உலக தமிழ்மக்களுக்கு மட்டுமன்றி இலங்கைஅரசாங்கம் உட்பட பல அரசாங்கங்களுக்கும் ஒருபாரிய அதிர்ச்சியை ஏறபடுத்தினார் கருணா அம்மான். அன்றுதொடக்கம் இன்றுவரையில் அவரின் தெளிவான சிந்தனையோட்டத்தால் இலங்கை அரசாங்கமும் குறிப்பாக கிழக்கு மாகாணமும் ஒருசிறந்த எதிர்காலத்தை நோக்கி நடைபோடத் தொடங்கியுள்ளது.
மாவிலாறில் மண்ணையள்ளித் தன்தலையில் போட்டுக்கொண்ட புலிகளுக்கு மன்னாரை இராணுவம் கைப்பற்றியபோது புத்திசாலித்தனமாக தாங்கள் பின்வாங்குவதாக தங்களையும் அவர்களை நம்பியோர்களையும் சமாதானப் படுத்திக்கொண்டார்கள். தொடர்ந்து கிளிநொச்சியை இராணுவம் கைப்பற்றிய பின்னும் அதுபிசாசுகளின் பிரதேசமெனவும் மகிந்த பகல்கனவு காண்கிறார் என வங்கறுக்குள் இருந்த வன்னித்தலைவனின் கனவுகள் புதுமாத்தளனில் மண்டியிடும் வரையில் தெளிவாகவில்லை.
வான்படை,இராணுவம்,கடற்புலிகள்,தற்கொலைப்படை,உந்துருளி படையணி, புலனாய்வுத்துறை, நீதித்துறை,காவல்பிரிவு எனப்பல கட்டமைப்புகளைக் கொண்டு தமிழர்களையும் உலகத்தையும் ஒருமாய வலைக்குள் வைத்திருந்து LTTE யை இறுதியாக ஒரு காகித கப்பலாக தங்கள் புத்திசாதுர்யமான இராணுவவலைக்குள் புதுமாத்தளனில் வைத்து புலித்தலைமகள்யாவும் ஒருநொடிப்பொழுதிலே இராணுவத்தால் அடித்துச்கொல்லப்பட்டதை நினைக்கும்போது வெட்கித் தலைகுனிய வேண்டிய நிலையில் நம்மவர்கள் நிலைகுலைந்து போயுள்ளனர்.
இவ்வாறாக, கடந்த 30வருடங்களாக தமிழர் ஈழத்திற்கான போராட்டம் என்ற கறுப்புப்போர்வைக்குள் அப்பாவித் தமிழர்களை அடக்கி அமுக்கிக்கொண்டு இருட்டு அறைக்குள் கறுப்பு பூனையைத் தேடிய பிரபாகரன் மூன்று சதுரஅடிநிலத்துக்குள் அண்ணாந்து படுத்திருக்கும் காட்சி உலகத்தமிழரை ஒருகணம் திக்குமுக்காட வைத்தது தங்கள் கண்முன்னாலேயே தமிழீழம் என்னும் ஆகாயக்கோட்டை வெடித்துச் சிதறுவதைக்கண்டனர்.
இவ்வருடம் மேமாதம் 18ந்திகிவரை மட்டக்களப்பான் துரோகி காட்டிக் கொடுத்தவன் என்றெல்லாம் வசைபாடிய புலம்பெயர்ந்த தமிழினம் இறுதியாக கருணா தனியாகப்பிரிந்து போயிருந்தாலும் பறவாயில்லை தன்னுடன் ஆறாயிரம் பேரையும் அல்லாவா கூட்டிச்சென்றுவிட்டான் என ஆவெண்ட வாய் மூடாமல் பிதற்றத் தொடங்கி விட்டார்கள்.
1983ஆண்டுவரையில் தென்கிழக்காசவிலே அறிவுமிக்கதும் ஆரோக்கியதுமான சமூகமாக வாழ்ந்த தமிழ்மக்கள் தொடர்ச்சியாக மந்தைகளாக மேய்க்கபட்டு வன்னிக்குள் முடக்கப்பட்டு ஒருகொடூரமான இராணுவக்கட்டமைப்பிற்குள் புலிகள் அவர்களை அடிமைப்படுத்தி வைத்திருந்தனர். அதன்தொடர்ச்சியாக இன்று அவர்களை இராணுவத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து முட்கம்பிவேலிக்குள் தள்ளிய பெருமையும் புலிகள் இயக்கத்தையே சாரும். 1979 களில இலங்கையில் தமிழீழம் என்ற மண்ணாசையில் எதிரிகள் துரோகிகள் என கொலைப்பட்டியலைத் தொடங்கிவைத்து பெண்ணாசை கொண்டு ஊர்மளாதேவியில் பாண்டிபசாரில் தொடர்ந்து பயணித்து சகோதரக்கொலைகளில் தமிழினத்தை அழித்து பொன்னாசையினால் புலம்பெயர்ந்தவர்களிடமும் அப்பாவி பொதுமக்களிடமும் போதைப்பொருள் வர்த்தகம் மூலமாகவும் கப்பம் வசூலிக்கப்பட்டு 30 வருடங்களில் வங்குறோத்தாகிப்போனது தமிழீழம் என்ற கற்பனை கலந்த கனவு.
தமிழீழம் என்னுகின்ற றேட்-மார்க்கை வைத்துக் கொண்டு தமிழினத்தையே கபளீகரம் செய்த தேசியத்தலைவரும் சூரியகுமாரனுமான மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் இறந்த உடலைக்கண்டதன் பின்னர் ய+ன்மாதத்தில் தன்னைத்தானே தலைவர் என்று அறிமுகம் செய்து கொண்ட KP அண்ணனும் தமிழினத்தை வைத்து வியாபாரத்தை ஆரம்பித்தார். தமிழர்களுக்கிடையிலான வழமையான போட்டிகள் பூசல்களுக்கும் மத்தியில் அவர் ஒருமாத்திற்குள் உலகப்புலிகளை தன்னுடன் இணைத்துக்கொண்டார். அதற்கு முதற்கட்டமாக வினாயகமூர்த்தி உருத்திரகுமார், தவப்பிரகாசம் (தவா) இளையதம்பி, டேவிட் பூபாலப்பிள்ளை (PD) போன்றவர்கள்ளுட்பட கிழக்கிலே தப்பியிருந்த தயாமாஸ்ரர் போன்றவர்களை தன்தலைமைக்கு பக்கபலமாக ஆக்கிக்கொண்டார். தனது செயற்பாட்டிற்கு சட்டரீதியாக உருத்திரமூர்;தியையும், கருத்துக்களை பரப்புவதற்கு P னு யையும் பணவருவாயை பெற்றுக்கொள்வதற்காக தவா இளையதம்பியையும் கொண்ட நாடுகடந்ததமிழீழம் என்ற புதியகற்பனை கலந்தகனவை வெளிப்படுத்தினார் KP அவர்கள்.
பலஉலகநாடுகளின் எதிர்ப்பையும் மற்றும் பல பொருளாதார நெருக்கடிகளையும் மிகச்சாதுர்யமாக சமாளித்துக்கொண்டு சிறந்த இராணுவநடவடிக்கை மூலமும் மிகநுட்பமான புலனாய்வுத்துறை மூலமும் சாணக்கியமிக்க ராஐபக்ச சகோதர்களின் மிகக்கர்ச்சிதமானதும் நிதானமானதுமான நடவடிக்கைளாலும் புலிகளின் உலகளாவிய வலைப்பின்னல்கள் யாவும் மிகத்தீவிரமாக கண்காணிக்கப்பட்டு அவற்றை அழித்தொழிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
ஆயுதக்கொள்வனவிலும் கள்ளக்கடத்தல் போதைப்பொருள் வியாபாரத்திலுமே தேர்ச்சிபெற்ற KP அவர்களால் தனது தலைவரின் தமிழீழக்கனவிற்கான அரசியல் மற்றும் புத்திசாலித்தனமான காய்நகர்த்தல்களைப்பற்றி அறிந்து வைத்திருக்கவில்லைப்போலும். அதன்பயனாகவே நாடுகடந்த தமிழீழத்தின் தலைவாராக தன்னை அறிவித்து 3 மாதத்துள் மாண்புமிகு இலங்கைத்திருநாட்டில் மண்டியிட்டு தனது கடந்த 30வருடகால தகவல்களையெல்லாம் வாந்தி யெடுத்துக்கொண்டிருக்கின்றார்.
இதன்பெறுபேறாக உள்நாட்டு வெளிநாட்டு புலித்தொடர்பாடல்களை வைத்திருந்த பலரை கைதுசெய்வது பற்றி அந்த நாடுகளுடன் பேரம்பேசப்படுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இவ்வாறாக LTTE யின் உலகநாடுகளிலுள்ள சகலமட்டத்திலும் சண்டித்தனம்காட்டித்திரியும் புலிபினாமிகளின் அவர்களதுகுடும்ப நலனுக்காகவும் உயர்விற்காகவும் உங்கள் உழைப்பையும் நேரத்தையும் வீணடிக்காமல். ஓட்டுமொத்தமாக ஒரு இலங்கைத்திருநாட்டில் நாம் 1977 இற்கு முன்புவாழ்ந்த நிலைக்கு சிங்களமக்களுடனும் முசுலீம் மக்களுடனும் சேர்ந்து வாழ்வதுடன் நமது சிதைந்து போன தேசத்தையும் உருக்குலைந்து போயுள்ள தமிழ் பண்பாடு கலாச்சாரம் கல்வி போன்றவற்றையும் கடடியெழுப்ப முன்வருவோமாக.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

புலிக் கொடிகள் பிடிக்கப்படும் போராட்டங்களில் கலந்து கொள்வதில்லை.:பூநகரி மண்ணின் மைந்தன் விமலேஸ்வரனுக்கு சமர்பணம்


கனடாவில் வெளிவரும் பத்திரிகை ஒன்றில் வெளிவந்த செய்தி இது. சற்று ஆழமாக வாசித்துப் பார்த்தால் ‘கொடி’ என்ற சொல்லின் முழுமையான அர்த்தத்தை புரிந்து கொள்ளக் கூடியதாக இருந்தது. ஆமாம் புலிகளின் கொடியை பிடிக்கும் எந்தப் போராட்டத்திலும் என்று சொல்வதைவிட, புலிகளின் தாகம் தமிழீழத்தாயகம் என்பதை அழித்து விட்டு தமிழரின் தேசியக் கொடி என பிரகடனப்படுத்திய கொடியை பிடிக்கும் நிகழ்வுகளைத்தான் அவர்கள் குறிப்பிடுகின்றார்கள் என்பதை யாவரும் மிக இலகுவாக இனம் காண முடியும்.
இந்த முடிவை எடுத்து பகிரங்கமாக பத்திரிகை மூலம் பிரகடனப்படுத்தியிருப்பவர்கள் பூநகரி அபிவிருத்திச் சங்கம் (கனடா). முதலில் அவர்களுக்கு ஒரு சபாஷ். மிகச்சரியான முடிவை எடுத்திருப்பதற்காக மட்டுமல்ல அதனை பத்திரிகை வாயிலாக துணிச்சலாக வெளியிட்டமைக்காகவும். கூடவே அதற்கான காரண காரியத்தையும் தெளிவாக கூறியிருக்கினறனர் ‘கடந்தகாலங்களின் போராட்டங்களில் பின்பற்றிய முறைமைகளை உலக அரசுகள் ஏற்க மறுத்துள்ளன’. புலிக் கொடியையும். பிரபாகரனின் படத்தையும் முன்னிலைப்படுத்தி தமிழ் மக்களின் அவலங்களைப்பற்றி போராட்டங்கள் நடத்தியமை விழலுக்கு இறைத்த நீராகிற்று என்று உணர்ந்திருக்கின்றனர். அதன் வெளிப்பாடே ‘கொடி’ தவிர்ப்பும், பதாகைகளை மாற்ற முற்பட்ட தீர்மானங்களும், அதற்கான செயற்பாடுகளும். நாம் அறிந்தவரை பூநகரி மக்கள்தான் முதன் முதலாக இது போன்ற முடிவை எடுத்து பகிரங்கப்படுத்தியிருக்கின்றார்கள்.
யாழ் குடாநாட்டையும் ஏனைய இலங்கையின் பகுதிகளையும் இணைக்கும் இரண்டாவது முக்கியத்துவம் வாய்ந்த சங்குப்பிட்டி பூநகரியில்தான் உள்ளது. போராட்ட காலங்களில் ஆனையிறவை தவிர்த்து பாதுகாப்பாக மக்கள் பயணித்த பிரதேசங்களை கொண்டதும் இதே பூநகரிதான். பூநகரி ‘மொட்டைக்கருப்பன்;’ என்ற தமிழரின் பிரதான உணவு அரிசி மூலம் உலகெங்கும் பெயர் நிலை நாட்ட காரணமானதும் இதே பூநகரிதான். அந்த அளவிற்கு தரம் மிக்க நெல்லை விளைவித்த பூமி இது. இப் பூமியைப்பற்றி, பூநகரி இலங்கை இராணுவத்திடம் வீழ்ந்தவுடன் பிரபாகரன் சொன்னார் ‘பூநகரி வளமற்ற இடம். இது எமக்கு முக்கிய இடம் இல்லை’ என்று. இதற்கான ‘பழி’ வாங்கலைத்தான் இன்று பூநகரி மக்கள் எடுத்துள்ளனரோ என்று எண்ணத் தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை. இராணுவக் கேந்;திர நிலையமாக எடுத்து நோக்கினாலும் பிரபாகரன் அறிக்கை அவர்; இராணுவ விடயங்களிலும் எவ்வளவு முட்டாள் என்று எதிர்வு கூறி நிற்கின்றது.
இன்னும் ஒரு சிறப்பும் இவ் பூநகரி மண்ணிற்கு உள்ளது. ஆமாம் நம்புங்கள் பிரபாகரனுக்கு பெண் மதிவதனி கிடைக்க இவ் மண்ணின் மைந்தன் ஒருவன்தான் காரணம். 83 கலவரத்தை தொடர்ந்து இடம் பெயர்ந்து வந்துள்ள பேராதனியா, கொழும்பு பல்கலைக்கழக தமிழ் மாணவர்கள் யாழ் பல்கலைக்கழகத்தில் அணிதிரண்டு தமக்கான கல்விகளை யாழ் பல்கலைக்கழகத்தில் தொடர ஆவன செய்ய வேண்டும், தான் இனி தென்னிலங்கையில் உள்ள பல்கலைக் கழகங்களுக்கு திரும்பிப் போவதில்லை போன்ற விடயங்களை முன்னிறுத்தி போராட்டங்களை முன்னெடுக்க தீர்மானித்தனர். இதற்கான தலமையை யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தயாராக இருக்கவில்லை முழுவேகத்துடன் செயற்படவில்லை. இப்படியான சூழல்களில் யாழ் பல்கலைக்கழகத்தில் ‘யுஉவழைn உழஅஅவைல’ என்று ஒன்று பல்கலைக்கழக மாணவர்சங்கத்திற்கு மாற்றாக தெரிவு செய்யப்பட்டு போராட்டங்களை முன்னெடுத்து செல்வது அன்றைய நிகழ்வுகளில் ஒன்று. அன்றைய காலகட்டத்தில் அமைக்கப்பட்ட ‘யுஉவழைn உழஅஅவைல’ இன் தலைவன் விமலேஸ்வரன் பூநகரியின் மைந்தன். மிகவும் சிறப்பாகவும், சரியாகவும், போர்க் குணாம்சத்துடனும் அப் போராட்டத்தை ஒரு வெகுஜனப் போராட்டமாக முன்னெடுத்ததில் விமலேஜ்வரனின் பங்கு மகத்தானது.
மாதக்கணக்கில் வௌ;வேறு வடிவங்களில் முன்னேறிய இவ் வெகுஜனப் போராட்டத்தின் உச்சக்கட்டமாக சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இதில் 3 பெண்களும் 4 ஆண்களும் கலந்து கொண்டனர். இப் போராளிகளின் பட்டியலை விமலேஸ்வரன் தலைமையில் உள்ள ‘யுஉவழைn உழஅஅவைல’ இறுதி முடிவு செய்தது. இதில் ஒருத்திதான் பிரபாகரனால் கடத்தப்பட்டு காந்தர்வ மணம் புரியப்பட்ட மதிவதனி. போராட்டக் குழுத்தலைவன் விமலேஸ்வரனின் போராட்டக் குழுவில் மதிவதனி உள்ளடகப்பட்டதன் உண்மை நிகழ்வு இதுவே. இந் நிகழ்வை பூநகரியின் மைந்தன் விமலேஸ்வரன் பிரபாகரனுக்கு ‘பெண்’ கொடுத்ததாக கூறலாம்தானே.இவ் கடத்தல் நிகழ்வு ஒரு சீரிய எழுச்சி கண்டு வந்த ஒரு வெகுஜனப் போராட்டத்தை திடீரென மழுங்கடித்து சாகப்பண்ணிய பெருமை அன்றைய ‘அரை நிர்வாண யாழ்ப்பாணத்தலைவர்’ கிட்டு தலைவரின் வழிநடத்தலில் செய்து முடித்தான். இப் உண்ணாவிரதிகளைக் கடத்தி வெகுஜனப் போராட்டத்தை சாகடித்த புலிகளை சகல பல்கலைக்கழக மாணவர்களும் விமர்சித்தனர், கண்டனம் தெரிவித்தனர். இதன் பலன் தலைமறைவாக வாழ வேண்டிய நிலை ஏற்பட்டது விமலேஸ்வரனுக்கு. பின்பு ‘அகண்ட இந்திய விஸ்தரிப்பு வாதம்’ புகழ் திருநாவுக்கரசு போன்றவர்களின் ஆலோசனைப்படி புலிகளின் ‘ஆசீர்வாதத்துடன்’ பல்கலைக்கழகம் திரும்பிய விமலேஸ்வரன் சட்டநாதர் கோவிலடியில் வஞ்சகமாக புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
உண்ணாவிரதப் போராட்ட உறுப்பினராக மதிவதனி கலந்து கொள்ளாவிட்டால் இன்று மதிவதனி எம்மத்தியில் வாழ்ந்திருப்பார். புங்குடுதீவின் சனத் தொகையில் நிச்சமாக ஒருவர்அதிகமாக இருந்திருப்பார். இச்சம்பவத்தையும் சீர்தூக்கிப் பார்த்துத்தானோ பூநகரிமக்கள் புலிப்பினாமிகளுக்கு சம்மட்டி அடி கொடுக்க புறப்பட்டு ‘கொடி’ பிடிப்பதில்லை என்ற முடிவெடுத்து பத்திரிகையில் அறிக்கை விட்டுள்ளார்களோ? கூட்டத்தில் கலந்து கொண்ட உருத்திரகுமாரனை சில கிழமைகளுக்கு முன்பு அமெரிக்காவில் சென்று ‘தரிசனம்’ பெற்று விசுவாசம் தெரிவித்து வந்த பூநகரியான் என்று தன்னைத்தானே அழைப்பவனுக்கு இது வெளிச்சம் என்று கூறமுடியவில்லை. குமாரசூரியர் காலம் தொடக்கம் 90 களின் முற்பகுதி வரைக்கும் தொலைபேசி இணைப்பை ஏற்படுத்துவதில் ‘கடமை’ ‘கண்ணியம்’ ‘கட்டுப்பாடு’ என்றிருந்து, விடுலையைப் போராட்டத்தை விலக்கி வைத்திருந்த ‘புதிய’ வானொலி ‘ஆய்வாளருக்கு’ எங்கே தெரியப் போகின்றது மக்கள் போராளி விமலேஸ்வரன்பற்றி.
பூநகரி மக்களின் ‘கொடி தவிர்ப்பு’ மாதிரியான முடிவுகளை, செயற்பாடுகளை வெளிநாடுகளில் உள்ள பல ஊர் சங்கங்கள், பொது அமைப்புக்கள் புலிகள் ‘பலமாக’ இருந்த காலங்களிலேயே எடுத்திருந்தும் அவற்றை பகிரங்கமாக வெளிப்படுத்தாமல் இரகசியச் செயற்பாட்டின் மூலம் நடைமுறைப்படுத்தி வந்தனர். அவர்களின் விபரம் எம்மிடம் இருப்பினும் புலிகளின் ஆயுதக் கலாச்சாரத்தின் ‘எச்ச சொச்சங்கள்’ இன் பயப்பிராந்தி இன்னும் ஒரு தரப்பு மக்களை விட்டு நீக்கிவிடாதவிடத்து அவற்றை நாம் பகிரங்கப்படுத்த விரும்பவில்லை. ‘நாடுகடந்த தமிழ் ஈழம்’ என்ற உத்தேச விடயத்தில் இணைந்துள்ள வெளிநாட்டு அமைப்புக்கள் எவையென உருத்திரகுமாரன் பத்திரிகை அறிக்கையில் வெளியிட்டு செய்த ‘காட்டிக் கொடுப்புக்களையும்., புத்தி சாதுர்சியமற்ற செயற்பாடுகளையும் நாம் ஊர்ச் சங்கங்களின் பெயர் பட்டியலை வெளியிட்டு செய்யப் போவதில்லை.
கிளிநொச்சி வீழ்ந்து பிரபாகரன் முழந்தாள் இட்டு இலங்கை அரசாங்கத்திடம் நந்திக்கடல் ஓரம் மட்டியிடுவதற்கு முதல்வரை வெளிநாடுகளில் நடைபெற்ற கவனஈர்ப்பு, மனிதச்சங்கிலி, உண்ணாவிரதம். வண்டிகட்டி வாஷிங்ரன் போன நிகழ்வு வரைக்கும் இப் போராட்டங்களில் இணைந்திருந்த பொதுமக்களில் பலர் போர் சூழலில் சிக்குண்டு மரணித்துக் கொண்டிருந்த தமது உறவுகளுக்காகவே இப் போராட்டங்களில் இணைந்திருந்தனர். இப் பொதுமக்களின் உண்மையான உணர்வுகளையும், உழைப்புக்களையும், போராட்ட வலுக்களையும் தாங்கிய கொடிகளும் (புலிக் கொடி), பதாகைகளும் (தமிழ் ஈழம்), தனிநபர் புகைப்படமும் (பிரபாகரன்) நாசப்படுத்திவிட்டது, வீணாக்கிவிட்டன.
இவ் நிகழ்வுகள் நடைபெறும் போதெல்லாம் நாம் பல கட்டுரைகள், ஆய்வுகள், செய்திகளில் சொல்லி இருந்தோம், போர் முனையில் புலிகளினால் சிறைப்பிடிக்கப்பட்டு மனிதக் கேடயங்களாகப் தடுத்து வைக்கப்பட்டுள்ள மக்களின் பிரச்சனையை முன்னிறுத்தி இலங்கை அரசு, புலிகளுக்கு எதிராக போராடுங்கள் நிச்சயமாக சர்வதேச சமூகம் எங்களைத் திரும்பிப்பார்க்கும். போர் நிறுத்தம் ஏற்படும் பொது மக்கள் காப்பாற்றப்படுவார்கள் புலிகள் ஆயுதத்தை ஓப்படைத்து போர் கேடயங்களாக உள்ள மக்களை விடுவிக்கப்படுவார்கள். இதன் மூலமே எம்மக்கள் காப்பாற்றப்படுவார்கள் என்று. யாரும் கேட்கவில்லை.
இவ்வாறு செய்திருந்தால் இன்று விசுவமடு தொடங்கி நந்திக்கடலில் முடிந்த இறுதிச் மனித கொலைச் சங்காரத்தில் (பொதுமக்கள் மரணம் இக்காலகட்டத்திலேயே தினம் நூறு என்ற கணக்கை ஆரம்பிக்க தொடங்கியது) பல ஆயிரம் பொது மக்களும், புலிகளும் ஏன் சில வேளைகளில் புலித் தலைவன் பிரபாவும் காப்பாற்றப்பட்டு இருப்பார்கள். கூடவே 3 இலட்சம் மக்கள் முள்ளுக்கம்பியிற்கு பின்னால் தவித்திருக்கமாட்டார்கள். ஒன்று இரண்டு அல்ல பல கட்டுரைகளில், பல கட்டுரையாளர்கள் எச்சரித்தே வந்தனர். எல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்காகிப் போகின. கூடவே இக்கட்டுரையாளர்கள் வழமைபோல் புலிகளாலும் புலிப்பினாமிகளாலும் துரோகிகள் ஆக்கப்பட்டனர். அன்று ‘உள்ளுக்கு வரவிட்டு அடிப்பார் மேதகு’ ‘கிளிநொச்சி இன்னும் ஒரு லெனின் கிராட்’ என ‘அரசியல் ஆய்வுரை’ வறங்கிய யாரும் இன்று தலை மறைவு, இன்னும் ஒரு அருளம்பலத்தைத் தேடி ஓடிவிட்டனரோ?
இனிவரும் நாட்களின் இன்னும் பல சங்கங்கள் தமது ‘கொடி தவிர்ப்பு’ பிரகடனத்தை உலகெங்கும் பகிரங்கப்படுத்துவர். வெளிநாடுகளில் ஏற்பட்டுள்ள ‘ஜனநாக சூழலை’ அவர்கள் சுவாசிக்கத் தொடங்கிவிட்டார்கள். இவ் ‘பிராணாயம்’ எடரெங்கும் பரவி எம் வாழ்வை ஆரோக்கியமானதாக உறுதிப்படுத்தும். மக்கள் போராளி, பூநகரி மண்ணின் மைந்தன் விமலேஸ்வரனுக்கு இது சமர்பணம்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

தமிழக மீனவர்களை குறிவைக்கும் இலங்கை கடற்படை: புலிகள் ஆதரவு மீண்டும் தலைதூக்கும் 'அபாயம்'


முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி மறைவுக்கு முன், தமிழக கடலோர கிராமங்களில், தீவிர விடுதலைப் புலிகள் ஆதரவும், பாசமும், தமிழக மீனவர்களிடையே இருந்து வந்தது. ராஜிவ் காந்தியின் கொடுமையான மரணத்திற்கு பிறகு, பெரும்பாலான தமிழக கடலோர மீனவ கிராமங்களில், விடுதலைப் புலிகள் ஆதரவு குறைந்து போனது.மீனவர்கள், விடுதலைப் புலிகளை தங்கள் இனமாகவும், உறவாகவும் கருதி செய்து கொண்டிருந்த உதவிகளும் குறைந்தன.கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் படகுகள் ஒன்றிரண்டு, எல்லை தாண்டும் நிலையில் மட்டுமே, இலங்கை கடற்படை தாக்குதலுக்கும், நடவடிக்கைக்கும் ஆளாகின.இலங்கை கடற்படை, விடுதலைப் புலிகளை அழிக்கவும், கட்டுப்படுத்தவும், தாக்குதலை சமாளிக்கவும் முழு மூச்சில் இருந்ததால், தமிழக மீனவர்கள் மீது கவனம் திரும்பவில்லை.தற்போது, விடுதலைப் புலிகள் பெருமளவில் ஒழிக்கப்பட்ட நிலையில், பிரபாகரன் மரணத்திற்கு பின், கடல் பகுதிகளில் விடுதலைப் புலிகள் நடமாட்டம் முற்றிலும் இல்லை. கடற்புலிகள் நடமாட்டத்தாலும், தாக்குதலாலும் பாதிப்பிற்குள்ளான இலங்கை அரசு, கடற்படையை பலப்படுத்தி, பாதுகாப்பு நடவடிக்கை என்ற பெயரில் முழு சுதந்திரத்தை கடற்படைக்கு வழங்கியது.தற்போது, புலிகளின் நடமாட்டம் இல்லாமலிருந்தும், கடலில் வலம் வரும் தமிழக மீனவர்களை, இலங்கை கடற்படையினர், எதிரிகளாக நினைத்து தாக்குவது தொடர்கிறது.இலங்கை கடற்படை - விடுதலைப் புலிகள் மோதல் திசை மாறி, தமிழக மீனவர்கள் - இலங்கை கடற்படை மோதலாக உருமாறி வருகிறது. இலங்கை கடற்படையின் அத்துமீறலால், தமிழக மீனவர்கள், விடுதலைப் புலிகள் தங்களுக்கு அரணாக இருந்து வந்ததாக நினைத்து, மீண்டும் புலிகள் மீது இரக்கமும், பாசமும், பரிவும் காட்டத் துவங்கியுள்ளனர்.இதன் காரணமாக, தமிழக கடலோர மீனவ கிராமங்கள் மற்றும் அதைச் சார்ந்த நகரங்களில், பிரபாகரன் ஆதரவு பெருகி வருவதும், இதற்கு சில புலி ஆதரவு பிரமுகர்கள், அரசியல்வாதிகள் உரமேற்றி வருவதும், மறைமுகமாக தொடங்கியுள்ளது. இலங்கை கடற்படை அட்டூழியத்தை மத்திய, மாநில அரசுகள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வராவிட்டால், மீண்டும், தமிழக கடலோரங்களில் இருந்து விடுதலைப் புலிகள் ஆதரவு எழும் அபாயம் உள்ளது.ஓய்வெடுக்கும்உளவுத்துறை: இலங்கை ராணுவத்திற்கும், விடுதலைப் புலிகளுக்கும் மோதல் நடந்து கொண்டிருந்த போது, தமிழக மீனவ கிராமங்களில் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த ஐ.பி., கியூ பிரிவு மற்றும் எஸ்.பி.சி.ஐ.டி., போலீசார், விடுதலைப் புலிகள் ஒழிப்பிற்கு பிறகு, தங்கள் வேலை முடிந்து விட்டதாக, மீனவ கிராமங்களில் தொடர்பை துண்டித்து விட்டனர்.வி.ஐ.பி.,களின் வருகையை மட்டும் அரசுக்கு தெரிவிப்பதோடு கடமை முடிந்து விட்டதாக எண்ணி, தலையெடுக்கும் தலைவலியைப் பற்றி சிந்திக்காமல், "ஹாயாக' ஓய்வெடுத்துக் கொண்டுள்ளனர். அதிகாரிகள் உளவுத்துறையினரை தட்டி எழுப்ப வேண்டியது மிகவும் அவசியம்.
-நமது சிறப்பு நிருபர்- தினமலர்
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

இடைத்தங்கல் முகாம்களில் ஊடுறுவியுள்ள புலி உறுப்பினர்களை இனம் காண்பதில் சிக்கல் :


இடைத்தங்கல் முகாம்களில் ஊடுறுவியுள்ள தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களை இனம் காண்பதில் சிக்கல் நிலை உருவாகியுள்ளதென பாதுகாப்புத் தரப்பினர் தெரிவிக்கின்றனர்.தற்கொலைப் போராளிகள், புலனாய்வுப் பிரிவினர் உள்ளிட்ட பல்வேறு மட்டத்திலான விடுதலைப் புலி உறுப்பினர்கள் முகாம் மக்களுடன் மக்களாக வாழ்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களினால் அப்பாவி மக்களுக்கு அச்சறுத்தல் ஏற்பட்டுள்ளதாக புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாரியளவு முகாம்களில் பெருந்தொகை மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளதனால் புலி உறுப்பினர்களை கண்டு பிடிப்பதில் சிக்கல் நிலை உருவாகியுள்ளதென சுட்டிக்காட்டப்படுகிறது.
சிறு சிறு முகாம்களாக காணப்பட்டால் புலி உறுப்பினர்களை கண்டு பிடிக்கக் கூடிய சந்தர்ப்பம் ஏற்படும் என தெரிவிக்கப்படுகிறது.
பிரபாகரனின் பெற்றோர் கூட பொதுமக்களுடன் கலந்து முகாம்களில் தஞ்சமடைந்துள்ளமை கவனிக்கப்பட வேண்டிய விடயமாகும் என சுட்டிக்காட்டப்படுகிறது.
முகாம்களில் ஊடுறுவியுள்ள விடுதலைப் புலி உறுப்பினர்களினால் மக்கள் சிக்கல்களை எதிர்நோக்கி வருவதாக பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

புலிகளின் சார்ள்ஸ் அன்ரனி படைப்பிரிவைச் சேர்ந்த முக்கியஸ்தர் கைது


தமிழீழ விடுதலைப் புலிகளின் சார்ள்ஸ் அன்ரனி படைப் பிரிவைச் சேர்ந்த முக்கியஸ்தர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் கடந்த 19 ஆண்டு காலமாக அங்கம் வகித்து வந்த சிரேஸ்ட தலைவர் ஒருவரே இவ்வாறு கல்கிஸ்ஸ பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த விடுதலைப் புலி உறுப்பினர் வெளிநாடு செல்வதற்காக கல்கிஸ்ஸ விடுதி ஒன்றில் தங்கியிருந்த போது கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை இராணுவத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட ஏழு முக்கிய தாக்குதல்களை இவர் வழிநடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட நபரின் உடலில் பல இடங்களில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் இருப்பதாகக் குறிப்பிடப்படுகிறது
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

புல்மோட்டை இடைத்தங்கல் முகாம் மக்கள் துயரங்களுக்கு மத்தியில்


இலங்கையின் வடக்கே யுத்த காலத்தில் இடம்பெயர்ந்து திருகோணமலை மாவட்டம் புல்மோட்டை இடைத்தங்கல் முகாம்களில் தங்கியிருப்பவர்களைப் பார்வையிட தற்போது இராணுவத்தினரால் உறவினர்களுக்கு அனுமதியளிக்கப்பப்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
போர்க்காலத்தில் கடல் வழியாக புல்மோட்டையை வந்தடைந்த சுமார் 6000 பேர் இரண்டு நலன்பரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
கடந்த காலங்களில் இந்த நிலையங்களில் தங்கியிருப்பவர்களைப் பார்வையிட தங்களுக்கு அனுமதியளிக்கப்படவில்லை என்று கூறும் உறவினர்கள் தற்போது அனுமதியளிக்கப்படுவதாகத் தெரிவிக்கின்றனர்.
அங்கு சென்று தனது மகனைப் பார்வையிட்டு மட்டக்களப்பு திரும்பிய தாயொருவர் அந்த நிலையத்தில் தங்கியிருப்பவர்கள் பலவேறு சிரமங்களை எதிர் நோக்குவதை தன்னால் அறிய முடிந்ததாகக் கூறுகின்றார்.
வவுனியா இடைத்தங்கல் முகாம்கள் பற்றியே பலரும் ஆர்வம் காட்டுவதாக தனது கவலையை வெளிப்படுத்தியுள்ள அவர், புல்மோட்டை நலன்புரி நிலையம் தொடர்பாக எவரும் அக்கறை கொள்வதாக இல்லை என்றும் வருத்தம் தெரிவித்தார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

தமிழிசைக்கு என்று ஒரு அகராதி


அகர வரிசையில் வரிசைப்படுத்தப்பட்டுள்ள இசைச் சொற்களை கொண்டு தமிழ் மொழியில் ஒரு அகராதி வெளிவருகிறது.
தமிழிசைக்கான சொற்களை தேர்ந்தெடுத்து இந்த அகராதி தொகுக்கப்பட்டுள்ளதாக அதை தொகுத்துள்ள ஓய்வு பெற்ற தமிழக அரசு அதிகாரியான நா. மம்மது தமிழோசையிடம் தெரிவித்தார்.
தொல்காப்பியம், சங்க இலக்கியம் தொடங்கி இன்று வரையுள்ள தமிழிசை நூல்களில் இருந்து சொற்களை தேர்தெடுத்து, அகர வரிசைப்படுத்தி அதற்கான பொருளுடன் இந்த அகராதி தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகிறார்.
இந்த அகராதியின் முதல் பதிப்பில் ஐயாயிரத்துக்கும் மேலான பதிவுகள் இடம் பெற்றுள்ளதாகவும், இந்த இசை அகராதி ஒரு துறை அகராதி என்றும் மம்மது அவர்கள் தெரிவிக்கிறார். பழங்கால தமிழிசை முதல் தற்காலத்தில் பாடப்பட்டு வரும் கர்நாடக இசை பாடல்கள் தொடர்பான சொற்களும் பதங்களும் அந்த அகராதியில் இருப்பதாகவும் அவர் மேலும் கூறுகிறார்.
தமிழ் சொற்கள் மட்டுமே இந்த அகராதியில் தலைச் சொற்களாக படைக்கப்பட்டுள்ளன என்றும் அவர் சுட்டிக் காட்டுகிறார்.
தமிழிசைக்கான இந்த அகராதி இசை பயில்பவர்களுக்கு மட்டுமல்லாமல், பயிற்றுனர்களுக்கும் இசை ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளவர்கள் உட்பட பலருக்கு இது உதவியாக இருக்கும் என்று அவர் கருத்து வெளியிடுகிறார்.
பண் களஞ்சியமாக வெளிவரவுள்ள அடுத்த பதிப்பு பண்களை வைத்து தொகுத்த அகராதியாக இருக்கும் என்றும் அவர் கூறுகிறார்.news from bbc
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

ஜப்பானில் புதிய அரசியல் மாற்றம் - பொருளாதார வளர்ச்சிக்கான அறிகுறிகள்


புதிய அரசியல் சகாப்தத்துக்குள் பிரவேசிக்கும் ஜப்பானில் பொருளாதார மீட்சிக்கான மேலும் பல அறிகுறிகள் தென்படத் தொடங்கியுள்ளன.
கடந்த காலாண்டின் மொத்த உற்பத்தியில் கைத்தொழில் துறை ஜூலை மாதத்தில் இரண்டு வீத அதிகரிப்பைக் காட்டியுள்ளது..
அதிக நிதியை செலவிடுவதன் மூலம் சமூக நல விடயங்களை ஊக்குவித்தல் உள்ளிட்ட தனது மறுசீரமைப்பு நிகழ்ச்சி நிரலை முன்னெடுக்கவுள்ள ஜப்பான் ஜனநாயகக் கட்சிக்கு இந்த புதிய பொருளாதார நிலைமை மிக சார்பானதாக அமையும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது..
அசைக்க முடியாத பழமைவாத ஆட்சியென வர்ணிக்கப்பட்ட அரைநூற்றாண்டு கால நிர்வாகத்தை முடிவுக்கு கொண்டுவரும் விதமாக ஜப்பான் ஜனநாயகக் கட்சி கடந்த ஞாயிறு நடைபெற்ற தேர்தல்களில் மாபெரும் வெற்றியைப் பெற்றது.
அடுத்த பிரதமர் யுக்கியோ ஹட்டோயமா புதிய அரசாங்கத்தை அமைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார். new from bbc
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றம் தொடர்பான 5 நாள் மாநாடு - ஜெனிவாவில் ஆரம்பம்


ஐக்கிய நாடுகள் சபையின் அங்கத்துவ நாடுகளின் பிரதிநிதிகள், காலநிலை மாற்றம் தொடர்பான 5 நாள் மாநாட்டில் கலந்து கொள்ளும் முகமாக இன்று திங்கட்கிழமை ஜெனிவாவில் கூடினர். வெள்ளம், வரட்சி போன்ற காலநிலை மாற்றம் தொடர்பான பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுக்கு உதவுவதற்கான வழிமுறைகள் குறித்து இந்த உலக காலநிலை மாற்ற மாநாட்டில் கவனம் செலுத்தப்படவுள்ளது. சுனாமிகள் மற்றும் சூறாவளிகள் என்பன தாக்குவதற்கு முன்பே அது தொடர்பான எச்சரிக்கைகளை அனைவரும் பெறக்கூடிய வகையில் உலகளாவிய கட்டமைப்பொன்றை ஏற்படுத்துவதையும் இந்த மாநாடு நோக்கõகக் கொண்டுள்ளது. பூகோள வெப்பமாதலை குறைப்பதற்கு அத்தியாவசியமான எரிபொருள் பாவனை மற்றும் பச்சை இல்ல வாயு வெளியீடுகளை குறைத்தல் தொடர்பில் இந்த மாநாட்டில் கவனம் செலுத்தப்படமாட்டாது எனவும், அதற்குப் பதிலாக காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு எவ்வாறு உதவுவது என்பது குறித்து இதன்போது ஆராயப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. பல அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள், இயற்கை அனர்த்தங்கள் தொடர்பில் முன்கூட்டியே தகவல்களைப் பெற்றுக் கொள்வதில் எதிர்கொண்டுள்ள குறைபாடுகளே பாரிய அழிவுகளுக்கு வித்திடுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பச்சை இல்ல வாயு வெளியீடுகளை குறைப்பது தொடர்பான 1997 ஆம் ஆண்டு கயோடோ உடன்படிக்கை குறித்து எதிர்வரும் டிசம்பர் மாதம் டென்மார்கில் நடைபெறவுள்ள உச்சி மாநாட்டில் கவனம் செலுத்தப்படவுள்ளது.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

தோட்டத்தொழிலாளர்களுக்கு 500 ரூபா சம்பளம் வழங்குவதற்கு முதலாளிமார் சம்மேளனம் மறுப்பு


பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வேதன உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தை, தோட்ட முதலாளிமார் சம்மேளனத்துக்கும் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்களுக்கும் இடையில் இன்று கொட்டகலை காங்கிரஸ் தொழில் நுட்ப நிறுவனத்தில் இடம்பெற்றது. அதன்போது, தொழிற்சங்கங்கள் முன்வைத்த 500 ரூபா தினசரி சம்பள உயர்வு கோரிக்கையை முதலாளிமார் சம்மேளனம் ஏற்றுக் கொள்ள மறுத்ததை அடுத்து, தொழிற்சங்கப் போராட்டத்தை முன்னெடுக்கத் தீர்மானித்து ஆறுமுகன் தொண்டமானின் ஊடகப் பேச்சாளர் ஏ.பி. சக்திவேல் தெரிவித்துள்ளார். இன்றைய பேச்சுவார்த்தையில் முதலாளிமார் சம்மேளனத்தின் பிரதிநிதிகள் மற்றும் இ.தொ.கா. சார்பில் அதன் பொதுச் செயலாளரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான், இ.தொ.கா. தலைவரும் பிரதியமைச்சருமான முத்துசிவலிங்கம், பிரதியமைமச்சர் எஸ். ஜெகதீஸ்வரன், தேசிய அமைப்பாளர் ஆர். யோகராஜன் ஆகியோரும் இ.தே.தோ.தொ. சங்கத்தின் சார்பில் அதன் பொதுச் செயலாளர் கே. வேலாயுதம் மற்றும் பெருந்தோட்டத் தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவர் எஸ். ராமநாதன் ஆகியோர் கலந்து கொண்டார்கள். பேச்சுவார்த்தையின் போது தொழிற்சங்கங்களால் முன்வைக்கப்பட்ட 500 ரூபா தினசரி சம்பளக் கோரிக்கையை முதலாளிமார் சம்மேளனம் ஏற்றுக் கொள்வதில் இழுபறிநிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து எதிர்வரும் தீபாவளிப் பண்டிகைக்கு முன்னர் சம்பள உயர்வுக்கான தீர்க்கமான முடிவு முதலாளிமார் சம்மேளனத்தால் முன்வைக்கப்படாவிட்டால் தொழிற்சங்கப் போராட்டத்தில் இறங்குவதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

உறவினர்களைப் பார்வையிடுவதற்கு வருகை தருவோரும் அகதிகளாகப் பதிவு


தமிழக முகாம்களில் வாழும் உறவினர்களைப் பார்வையிடுவதற்காக மூன்று மாத கால விசாவில் வருகை தரும் இலங்கைத் தமிழர்களையும் அகதிகளாகப் பதிவு செய் வதனால், அவர்கள் தாயகம் திரும்ப முற்படும் போது, புதிய சிக்கலை எதிர்நோக்க வேண்டியுள்ளது. இலங்கையில் போர் முடிவுக்கு வந்துள்ள நிலையில், தமிழக முகாம்களில் உள்ள இலங்கை அகதிகளைப் பார்வையிடுவதற்கு அவர்களின் உறவினர்கள் மூன்று மாத கால விசாவில் வருவது அதிகரித்துள்ளது. இந்நிலையில், அவ்வாறு வருவோர் முகாமிலேயே தங்குவதால், அவர்களையும் அகதிகளாக மண்டபம் தனித்துணை ஆட்சியர் அலுவலக அதிகாரிகள் பதிவு செய்கின்றனர். அவர்களுக்கும் அகதிப் பதிவெண், தனி வீடு, குடும்ப அட்டை மற்றும் அடையாள அட்டை வழங்கப்படுகின்றன. இவர்கள் விசா காலம் முடியும் முன்பே இலங்கை செல்ல விரும்பினால், முகாம் பொலிஸார், கியூ பிரிவு பொலிஸார், தனித்துணை ஆட்சியர், சென்னை அகதிகள் மறுவாழ்வுத் துறை அதிகாரி ஆகியோரின் சான்றிதழ்கள் பெறவேண்டும். இந்தச் சான்றிதழ்களைப் பெற குறைந்தது ஒரு மாதம் தேவைப்படும். இதனால், அவர்கள் முறையான அனுமதியின்றி படகில் இலங்கைக்குச் செல்வது அதிகரித்துள்ளது. எனவே, விசாவில் வருபவர்களின் கடவுச்சீட்டு விபரங்களைத் தனியாகப் பதிவுசெய்தால், இப் பிரச்சினையைத் தீர்க்கலாம் என அகதிகள் கூறுகின்றனர். இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், அகதிகளைப் பார்க்க வரும் உறவினர்கள் முகாமில் 10 நாட்கள் வரை தங்கலாம். அதற்கும் மேல் தங்குபவர்களை அகதிகளாகப் பதிவுசெய்ய வேண்டியிருக்கிறது என்றனர்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

புலி முக்கியஸ்தர் குமரன் பத்மநாதனிடம் இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு தொடர்பான விசாரணைகளை நடாத்துவதற்கு இந்தியக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தீர்மானித்துள்ளனர். பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்குச் சதியின் பின்னணி குறித்து விசாரித்து வரும் விசாரணைக் குழு இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். ராஜீவ் காந்தியின் கொலைக்கான சதித் திட்டத்தை உருவாக்கியதில் பத்மநாதனிற்கும் பெரும் பங்கு உள்ளதாகவும் கொலைத் திட்டத்தை நிறைவேற்றுவதற்கான நிதி திரட்டுவதிலும் நிதி விநியோக நடவடிக்கைகளை மேற்கொண்டதிலும் பத்மநாதனிற்கு முக்கிய பொறுப்புள்ளதாகவும் இந்திய குற்றப் புலனாய்வுப் பொலிசார் கருதுகின்றனர். அதேவேளை குமரன் பத்மநாதன் தேடப்பட்டு வரும் பயங்கரவாதி எனச் சர்வதேசப் பொலிசாரால் அறிவிக்கப்பட்டு தேடப்பட்டு வந்ததும் தெரிந்ததே. புலிகளுக்கு ஆயுதங்கள் வாங்குவதற்கும் நிதி திரட்டுவதற்கும் சர்வதேச அளவில் இரு அமைப்புகள் செயற்பட்டு வந்துள்ளன. குமரன் பத்மநாதன் தலைமையில் ஒரு அமைப்பும் அய்யன்னா பிரிவும் புலிகளின் சர்வதேச தொடர்புகளுக்கு மூளையாகச் செயற்பட்டு வந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதிலுமுள்ள தமிழர்களிடம் நிதி திரட்டிப் புலிகளுக்கு ஆயுதங்களை வாங்கி அனுப்பி வந்ததாகவும் விசாரணைகளின் மூலம் தெரிய வந்துள்ளது. இந்நிலையில் குமரன் பத்மநாதன் கைது செய்யப்பட்டுள்ளமையால் அவரிடம் ராஜீவ் கொலை சதித் திட்டம் மற்றும் நிதி ஆதாரம் குறித்து விசாரிப்பதற்கு இந்தியாவின் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தீர்மானித்துள்ளனர். இதற்காக இலங்கை அரசிடம் அனுமதி கோருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இந்தியத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

செயலாளர் நாயகம் தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் ஆற்றிய உரை.


தேசிய காங்கிரஸ் கட்சியின் தேசிய மாநாடு அக்கரைப்பற்று பொது விளையாட்டு மைதானத்தில் இடம் பெற்றபோது அதில் விசேட அதிதியாக பங்குகொண்டு ஈபிடிபி செயலாளர் நாயகம் தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் ஆற்றிய உரை. சமாதானத்தின் காவலன் ஜனநாயகத்தின் நாயகன் மாண்புமிகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்களே! சமூகங்களுக்கிடையிலான உறவிற்கு கை கொடுத்து நிற்கும் எமதினிய சகோதரர் அதாவுல்லா அவர்களே! அவரது கட்சியின் உறுப்பினர்களே! மத்திய மற்றும் மாகாண அமைச்சர்களே! அரசியல் கட்சிகளின் தலைவர்களே! மக்கள் பணியை சுமந்து நிற்கும் கட்சியின் தொண்டர்களே! அனைவருக்கும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் சார்பாக எமது வணக்கங்கள். அஸ்ஸல்லாமு அலைக்கும். இஸ்லாம் என்பது ஒரு அரபிச்சொல்! அதன் தமிழ் அர்த்தம் அமைதியை அடைவதற்கான நெறி என்று சொல்லப்படுகின்றது. எமது தேசத்தில் அமைதியையும் சமாதானத்தையும் அடைவதற்காக எமது சகோதர மக்களாகிய இஸ்லாமிய மக்களை நீதி நெறியின் வழி நின்று இன்று வழி நடத்தி வந்திருப்பவர் எமது சகோதரர் அதாவுல்லா அவர்கள். கௌரவ ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்கள் முன்னெடுத்து வருகின்ற சமாதானத்திற்கான பயணத்தில் இறுதிவரை தோள் கொடுத்து வந்த சகோதரர் அதாவுல்லா அவர்கள் எமது தேசத்தில் அமைதியையும் சமாதானத்தையும் உருவாக்கும் இந்த புனித இலட்சிய பயணத்தின் வெற்றிக்காக பெரும் பங்கை ஆற்றியிருக்கின்றார். நீங்கள் விரும்பும் புனித மெக்காவிற்கான பயணம் எந்தளவிற்கு புனிதமானதோ அதே அளவிற்கு சமாதானத்திற்கான பயணமும் புனிதமானது என்றே நான் கருதுகின்றேன். ஆகவேதான் எமது சகோதர மக்களாகிய உங்களது பிரதிநிதியாக யாழ்ப்பாணத்திற்கு வந்து நடந்து முடிந்த எமது யாழ். மாநகர தேர்தலின் வெற்றிக்காக சகோதரர் அதாவுல்லா அவர்களும் அர்ப்பண உணர்வுகளோடு உழைத்திருக்கின்றார். பாராளுமன்றத்தில் அவர் ஆற்றிய உரைகளிலும் பத்திரிகை அறிக்கைகளிலும் அவரது கருத்துக்களை நான் அவதானித்திருக்கின்றேன். அவர் மேடைகளில் பேசும்போது அவரது பேச்சாற்றலை கண்டிருக்கின்றேன். ஓட்டுமொத்த தமிழ் பேசும் மக்களின் மீதும் அவர் கொண்டிருக்கும் நேசத்தை அவரது கருத்தில் கண்டிருக்கின்றேன். இன மத சமூக ஐக்கியத்திற்கான விருப்பங்களை அவரது நடைமுறையில் கண்டிருக்கின்றேன். யாழ். குடாநாட்டில் அவர் பேசிய கருத்துக்களை எமது மக்களே என்னிடம் பல தடவைகள் வியந்து பாராட்டியிருக்கின்றார்கள். எமது இலங்கைத்தீவில் வாழுகின்ற அனைத்து இன மத சமூக மக்களாலும் மரியாதைக்குரியவராக போற்றிப்புகழப்படுகின்ற ஒருவர் மக்களாகிய உங்களை வழி நடத்திச் செல்லுகின்ற ஒரு தலைவராக உங்களுக்குக் கிடைத்திருக்கின்றார். அதை நினைத்து நீங்கள் அவரை மகிழ்ந்து பாராட்ட வேண்டும். கடந்துபோன எமது தேசத்தின் வரலாறு இரத்தத்தினால் எழுதப்பட்டிருக்கின்றது. யுத்தத்தினால் எமது தேசம் சிதைக்கப்பட்டிருந்தது. யுத்தத்தில் இருந்தும் இரத்தத்தில் இருந்தும் எமது தேசத்தை நாம் அனைவரும் ஒன்று திரண்டு மீட்டிருக்கின்றோம். யுத்தம் ஓய்ந்து விட்டது. இரத்தம் நின்று விட்டது. ஆனாலும் இனித்தான் எமக்கு முன்பாக பாரிய வரலாற்றுக் கடமைகள் யாவும் பாரிய சுமைகளாக எழுந்து நிற்கப்போகின்றன. எமது இலங்கைத்தீவில் அனைத்து இன மத சமூக மக்களும் சரிநிகர் சமனாக வாழும் புதியதொரு சூழலை நாம் கட்டியெழுப்ப வேண்டும். அதற்கு தேவையானது நடைமுறைச்சாத்தியமான ஒரு அரசியல் தீர்வு என்றுதான் நான் நம்புகின்றேன். இன்று கிழக்கு மாகாணத்தில் ஒரு மாகாண சபை ஆட்சி நிறுவப்பட்டிருக்கின்றது. அதுபோல் வடக்கிலும் ஒரு மாகாண சபை ஆட்சி என்பது உருவாக்கப்பட வேண்டும். அதற்குரிய அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும். இதிலிருந்து தொடங்கி ஐக்கிய இலங்கைக்குள் சமாதான சக வாழ்வும் சம உரிமையும் என்ற எமது இறுதி இலக்கு நோக்கி நாம் நகர வேண்டும். இத்தகைய சூழலில்தான் தேசிய காங்கிரஸ் கட்சியின் இந்த வருடாந்த மாநாடு இன்று நடந்து கொண்டிருக்கின்றது. எமது எண்ணங்கள் யாவையும் எமது ஜனாதிபதி அவர்கள் ஈடேற்றி வைப்பார் என்ற நம்பிக்கை எமக்குண்டு. நம்பிக்கைதான் வாழ்க்கை. வுhழ்க்கைதான் நம்பிக்கை. இந்த இரண்டையும் பிரித்துப்பார்க்க முடியாது. கொடுங்கள்! பெற்றுக்கொள்வீர்கள். இதுதான் நாம் கடைப்பிடிக்க வேண்டிய தத்துவம். மக்களாகிய நீங்கள் அதாவுல்லா போன்ற அரும்பெரும் தலைவர்களுக்கு உங்களது ஆதரவை கொடுக்க வேண்டும். அவ்வாறு கொடுக்கும்போது நிம்மதியான வாழ்வினை நீங்கள் பெற்றுக்கொள்வீர்கள். அதுபோன்று எமது இனிய சகோதரர் அதாவுல்லா அவர்களும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்களது அரசாங்கத்திற்கு தொடர்ந்தும் ஆதரவினை கொடுக்க வேண்டும். இதனால் அவர் மக்களாகிய உங்களுக்கு பெற்றுக்கொடுக்க வேண்டிய அனைத்தையும் பெற்றுக்கொடுப்பார் என்றே நான் நம்புகின்றேன். கடந்த கால எதிர்ப்பு அரசியலால் யாரும் எதையும் சாதிக்க முடிந்திருக்கவில்லை. ஆதனால் எமது மக்களுக்கு அழிவுகளை மட்டுமே அவர்கள் ஏற்படுத்தியிருக்கின்றார்கள். இந்த அனுபவங்களில் இருந்துதான் இணக்க அரசியல் நிலைப்பாட்டை நாம் எமது விருப்பங்களாக ஏற்றுக்கொண்டிருக்கின்றோம். புலிகளின் தலைமையின் பிரச்சினை வேறு. தமிழ் பேசும் மக்களின் பிரச்சினை வேறு. இரண்டையும் பிரித்துப்பார்த்து தனது கடமைகளை ஆற்றும் ஜனாதிபதி ஒருவரை நாம் பெற்றிருக்கின்றோம். புலித்தலைமையின் பிரச்சினைகள் அவர்கள் விரும்பியது போலவே முடிந்து விட்டது. ஆனாலும் தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வை ஜனாதிபதி அவர்கள் தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றார். அதற்கு ஆதரவாகவும் உந்து சக்தியாகவும் நாம் அனைவரும் இருக்க வேண்டும் என்றே விரும்புகின்றேன். இன மத சமூக முரண்பாடுகளை களைந்து அனைத்து இன மத சமூக மக்களுக்குமான உறவுப்பாலமாக அனைத்து தலைவர்களும் தொடர்ந்தும் உழைப்பதற்கு முன்வர வேண்டுமென நான் எதிர்பார்க்கின்றேன். ஏமதினிய சகோதரர் அதாவுல்லா அவர்களின் உறுதியான தலைமையினை ஏற்று மக்களாகிய நீங்கள் நிரந்தரமான மகிழ்ச்சிக்காகவும் நிரந்தரமான அமைதிக்காகவும் எமது தேசத்தின் உயர்ச்சிக்காகவும் அணி திரண்டு நிற்பீர்கள் என்ற நம்பிக்கையோடு இந்த வருடாந்த மாநாட்டை வாழ்த்தி வணங்கி உங்களிடமிருந்து விடைபெற்றுக் கொள்ளுகின்றேன். அஸ்ஸல்லாமு அலைக்கும். நன்றி நேசமுடன் தோழர் டக்ளஸ் தேவானந்தா செயலாளர் நாயகம் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி ஈபிடிபி
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

வடக்கின் வசந்தம் 180 நாள் வேலைத்திட்டம் - ஐந்து மாவட்டங்களிலும் மீளாய்வுக்கூட்டம் இடம்பெற்றது.


ஜனாதிபதியின் மஹிந்த சிந்தனைக்கமைய வடமாகாணத்தின் ஐந்து நிர்வாக மாவட்டங்களான யாழ்ப்பாணம் வவுனியா மன்னார் கிளிநொச்சி முல்லைத்தீவு ஆகியவற்றில் மேற்கொள்ளப்படும் வடக்கின் வசந்தம் 180 நாள் வேலைத்திட்ட மீளாய்வுக்கூட்டங்கள் திட்டமிட்டபடி இடம்பெற்றுள்ளன. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுடன் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் வடக்கின் விசேட செயலணித் தலைவருமான பஷில் ராஜபக்ஷ வடமாகாண ஆளுனர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி ஆகியோரும் மேற்படி மீளாய்வுக் கூட்டங்களில் முக்கிய அதிதிகளாகப் பங்குகொண்டனர். மன்னார் வவுனியா மாவட்டங்களுக்கான மீளாய்வுக் கூட்டங்கள் கடந்த 25ம் திகதியும் வவுனியா கச்சேரியில் இடம்பெற்றன. கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களுக்கான மீளாய்வுக் கூட்டங்கள் கடந்த 26ம் திகதி இடம்பெற்றன. இதேவேளை யாழ். மாவட்ட மீளாய்வுக் கூட்டம் 27ம் திகதி வியாழக்கிழமை யாழ். பொதுநூலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது. அந்தந்த மாவட்டங்களின் இடம்பெற்ற மேற்படி 180 நாள் வேலைத்திட்ட அனைத்து மீளாய்வுக்கூட்டங்களிலும் குறிப்பிட்ட மாவட்டங்களின் கட்டளைத்தளபதிகள் அரசாங்க அதிபர்கள் பொலிஸ் உயரதிகாரிகள் சம்பந்தப்பட்ட அனைத்து அரச திணைக்கள மற்றும் சபைகளின் தலைவர்கள் பணிப்பாளர்கள் அனைவரும் பங்குகொண்டனர். மீள்குடியேற்ற நடவடிக்கைகள், விவசாயம் பொதுவசதிகள் உள்ளிட்ட வீடமைப்பு மின்விநியோகம் பொதுப்போக்குவரத்து கல்வி சுகாதாரம் என்பவற்றுடன் ஏனைய அனைத்து விடயங்களும் விரிவாக மீளாய்வு செய்யப்பட்ட அதேவேளை வடக்கின் வசந்தம் 180 நாள் துரித வேலைத்திட்டமும் விஷேடமாக கலந்துரையாடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

வவுனியாவிலிருந்து இவ்வாரம் மேலும் 2 ஆயிரத்து ஐநூறு குடும்பங்கள் யாழில் மீள்குடியேற்றப்படவுள்ளனர். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை.


அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் தொடர் நடவடிக்கை காரணமாக யாழ்ப்பாணத்தை நிரந்தர வதிவிடமாகக்கொண்ட 2 ஆயிரத்து ஐநூறு குடும்பங்களைச் சேர்ந்த 7 ஆயிரத்து 685 பேர் இவ்வாரம் மீளக்குடியமர்த்தப்படவுள்ளனர். வவுனியா நலன்புரி கிராமங்களில் யாழ். மாவட்டத்தை நிரந்தர வதிவிடமாகக் கொண்ட 15 ஆயிரத்து 167 குடும்பங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதில் யாழ். செயலகம் ஊடாக வதிவிடம் அடையாளம் காணப்பட்டு உறுதிப்படுத்தப்பட்டவர்கள் கட்டம் கட்டமாக மீள்குடியேற்றப்பட்டு வருகின்றனர். அந்தவகையில் இவ்வாரம் மேற்கண்ட மீள்குடியேற்றம் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வவுனியா மன்னார் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களை நிரந்தர வதிவிடமாகக்கொண்ட மேலும் 3 ஆயிரத்து 525 பேர் அந்தந்த மாவட்டங்களில் இவ்வாரம் குடியமர்த்தப்படவுள்ளனர். மற்றொருபுறம் வன்னியில் மீள்குடியேற்றம் செய்வதற்கு ஏற்றவகையில் அடிப்படை வசதிகளுடன் 35 கிராமங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

கொலம்பிய ஜனாதிபதி பன்றிக் காய்ச்சலினால் பாதிப்பு


கொலம்பிய ஜனாதிபதி அல்வாரோ யூரிப் பன்றிக் காய்ச்சல் நோயினால் பீடிக்கப்பட்டுள்ளதாக அவரது பேச்சாளர் அறிவித்துள்ளார்.ஜனாதிபதி அல்வாரோவிற்கு அவரது இல்லத்தில் வைத்து சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாகவும், அவர் தமது கடமைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதகாவும் கொலம்பிய அரச வட்டாரங்கள் தெரிவித்துள்ளன..ஆர்ஜன்டீனாவில் நடைபெற்ற தென் அமெரிக்க நாடுகளது தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு நாடு திரும்பிய போது அவருக்கு பன்றிக் காய்ச்சல் வைரஸ் தொற்றியிருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது..கொலம்பியாவில் மொத்தமாக 621 பேர் பன்றிக் காய்ச்சல் நோயினால் பீடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

ஈராக்கிலிருந்து வெளியேற அமெரிக்கப் படைகள் ஆயத்தம்


ஈராக் அரசுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி, இன்னும் ஓராண்டுக் காலத்திற்குள் வெளியேற வேண்டிய அமெரிக்கப் படைகள், அதற்கான பணியைத் தாம் ஆரம்பித்திவிட்டதாக அதன் தளபதிகளில் ஒருவர் தெரிவித்துள்ளார். ஈராக்கில் மறைத்து வைக்கப்பட்டுள்ள பேரழிவு ஆயுதங்களை வெளிக்கொணரப் போவதாகக் கூறியே அந்நாட்டின் மீது 2003ஆம் ஆண்டு மார்ச் மாதம் அமெரிக்கா படையெடுத்தது. தனது நிலையில் இருந்து மாறிய அமெரிக்க அதிபர் ஜோர்ஜ் புஷ், ஈராக்கில் ஜனநாயகத்தை நிலைநிறுத்துவதே தங்கள் நோக்கம் என்று கூறினார். அமெரிக்கப் படைகளிடம் பிடிப்பட்ட அந்நாட்டு அதிபர் சதாம் உசேன் நீதிமன்ற விசாரணை நடத்தப்பட்டுத் தூக்கிலிடப்பட்டார்.ஈராக்கின் எண்ணெய்க் கிணறுகளைக் கைப்பற்றி, அவற்றை நிரந்தரமாக அமெரிக்காவின் பிடியில் கொண்டு வர அமெரிக்கா மேற்கொண்ட முயற்சியை, அதன் துணையுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய அரசே முறியடித்துவிட்டது. அதே நேரத்தில் ஈராக்கில் நிலைபெற்ற அமெரிக்க படைகள் மீது அந்நாட்டு தீ்விரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வந்தனர்.ஈராக்கில் தீவிரவாதத்தை ஒழிப்பதாகக் கூறி அமெரிக்கா கடந்த ஆறரை ஆண்டுகளாக நடத்திய தாக்குதல்களில் 12 லட்சம் ஈராக்கியர்களே கொல்லப்பட்டனர். அமெரிக்கப் படையினர் 4,000 பேருக்கு மேல் பலியாகினர். இந்த நிலையில் அந்நாட்டில் இருந்து 2010ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31ஆம் திகதிக்குள் வெளியேறுவது என்று அமெரிக்க அரசு, ஈராக் அரசுடன் ஒப்பந்தம் செய்து கொண்டது.அதன்படி, தனது படையணிகளைத் திரும்பப் பெறும் நடவடிக்கையைத் தாம் தொடங்கிவிட்டதாக அமெரிக்கப் படைத் தளபதிகளில் ஒருவர் தெரிவித்துள்ளார்.ராடார்களில் இருந்து கனரக வாகனங்கள் மற்றும் ஆயுதங்கள் என்று 15 லட்சம் போர்க் கருவிகள் உட்பட ஒரு பெரும் படையை அங்கிருந்து மீண்டும் அமெரிக்கா கொண்டு செல்ல, பல நூற்றுக்கணக்கான கோடி டொலர்கள் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

புனானைக்கட்டுவனில் காணாமல் போன பெண் கோப்பாயில் சடலமாக மீட்பு


கடந்த இரு நாட்களின் பின்னர் புனானைக்கட்டுவன் பகுதியில் காணாமல் போன பெண் ஒருவர் இன்று காலை கோப்பாயில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இன்று காலை வீதி வழியாகச் சென்ற பொதுமக்கள் தெரிவித்த தகவலின் அடிப்படையில் இவரது சடலம் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது. அடையாளம் காண்பதற்காகவும், பிரேத பரிசோதனை நடத்தவும் சடலம் யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

அம்பாறையில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் தடுக்கப்பட்டது


அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்றில் தமிழ் அரசியல் கட்சியொன்றின் காரியாலயம் திறப்பதற்கு ஒரு குழுவினர் இன்று காலை மேற் கொண்ட எதிர்ப்பு நடவடிக்கை காரணமாக ஓரிரு மணித்தியாலங்கள் பதட்ட நிலை காணப்பட்டது. இருப்பினும் பொலிசார் மேற்கொண்ட உடனடி நடவடிக்கை காரணமாக நிலமை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது.தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் அம்பாறை மாவட்ட காரியாலயம் அடுத்த சில நாட்களில் அக்கரைபற்றில் திறப்பதற்குரிய ஏற்பாடுகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இக்காரியாலயம் அமையவிருக்கும் கட்டிடத்திற்கு முன்பாக இன்று காலை கூடிய ஒரு குழுவினர் குறித்த அரசியல் கட்சிக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.இக்காரியாலயத்தைத் திறக்க பொலிசார் அனுமதிக்கக் கூடாது என்ற கோரிக்கையையும் அவர்கள் முன்வைத்ததாகவும் கூறப்படுகின்றது.இந்த எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் காரியாலயத்திற்குள் நுழைய முற்பட்ட வேளை, பொலிசாரால் ஆகாய வேட்டுக்கள் தீர்த்து அவர்களின் முயற்சியைத் தடுத்து நிறுத்தினர். எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் காரியாலயத்தை நோக்கிக் கற்களை வீசியதால் 3 ஜன்னல் கண்ணாடிகள் சேதமடைந்தன. கடந்த 21ஆம் திகதி இக்காரியாலய கட்டிடத்திற்குள் நுழைந்த ஒரு குழுவினர் பொது மக்கள் தங்குமிடத்திற்குத் தீ வைத்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

நீர்கொழும்பு மாணவருக்கு சென்னையில் நடந்த அறுவை சிகிச்சை


நீர்கொழும்பைச் சேர்ந்த 15 வயது பள்ளி மாணவர் ரிசிதரனுக்கு பிறவியிலேயே வலது கண் பகுதியில் கருப்பு நிறத்தில் மருவும் ரோமங்களும் அதிக அளவில் காணப்பட்டன. உடல், உள ரீதியாகப் பாதிக்கப்பட்ட இவருக்கு அண்மையில் சென்னை குலோபல் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை ஒன்று நடத்தப்பட்டது. இந்த அறுவை சிகிச்சை பற்றி மருத்துவர் இரவீந்திர மோகன் கூறுகையில், "கண்களில் அதிக அளவுக்கு ரோமங்கள் லட்சத்தில் ஒருவருக்குத்தான் வளரும். ஆனால் இதுபோன்று ஆரம்பத்திலேயே இதனை இவ்வாறு சத்திரசிகிச்சை மூலம் அகற்றாவிட்டால், புற்று நோய் போன்றவை ஏற்பட வாய்ப்பு உண்டாகும். இதுபோன்ற குறை உள்ளவர்கள் மனரீதியான தொந்தரவுகளுக்கு உள்ளாகின்றனர். இந்த அறுவை சிகிச்சையை செய்ய சுமார் 4 மணி நேரம் தேவைப்பட்டது. இன்னும் மூன்று மாதங்களில் மற்றவர்களைப் போல் இயல்பான முக தோற்றத்தை இவர் பெற முடியும்" என்றார். "பல மருத்துவமனைகளை அணுகியும் எவ்வித பயனும் எமக்குக் கிடைக்கவில்லை. கடந்த முறை சென்னை சென்றபோது குலோபல் மருத்துவமனையைப் பற்றிக் கேள்விப்பட்டு சிகிச்சைக்காக வந்தோம். இங்குள்ள மருத்துவர்களின் உண்மையான ஒத்துழைப்பின் மூலமாக எனக்கு நீண்ட நாட்களாக இருந்து வந்த மன அழுத்தத்திலிருந்து விடுதலை அளித்த குலோபல் மருத்துவமனைக்கு எனது மனமார்ந்த நன்றிகள்" என்கிறார் ரிசிதரன்
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

பத்திரிகையாளர் திஸ்ஸநாயகத்துக்கு 20 வருட சிறை


மூத்த பத்திரிகையாளர் ஜே.எஸ்.திஸ்ஸநாயகத்துக்கு கொழும்பு மேல்நீதிமன்றம் இன்று இருபது வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது.
திஸ்ஸநாயகத்துக்கு எதிராக கொழும்பு மேல்நீதிமன்றத்தில் சட்டமா அதிபரினால் தொடரப்பட்டிருந்த வழக்கில் அவருக்கு எதிரான மூன்று குற்றச்சாட்டுக்களில் அவர் குற்றவாளியென மேல்நீதிமன்றம் தீர்மானித்தது.
பயங்கரவாத தடுப்புச்சட்டம் கீழ் மற்றும் அவசரகால சட்டம் ஆகியவற்றின் விதிகளின் கீழ் சட்டமா அதிபரினால் திஸ்ஸநாயகத்துக்கு எதிராக இந்த வழக்கு தொடரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மாதாந்த சஞ்சிகை ஒன்றை அச்சிட்டு பிரசுரித்தமை, வெளியிட்டமை தொடர்பாக இனங்களுக்கிடையிலான உணர்வுகளை தூண்டி பொதுமக்கள் மத்தியில் கலவரம் ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டதாக பத்திரிகையாளர் திஸ்ஸநாயகத்துக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
2006 ஆம் ஆண்டு ஜுன் மாதம் முதலாம் திகதிக்கும் 2007 ஆம் ஆண்டு ஜுன் மாதம் முதலாம் திகதிக்கும் உட்பட்ட காலப்பகுதியில் பிரஸ்தாப குற்றங்கள் புரிந்துள்ளதாக அவர் மீது சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டுக்களில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அரச படைகள் கிழக்கு மாகாணத்தில் இனப்படுகொலையில் ஈடுபட்டிருப்பதாக கருத்து தெரிவித்து தனது சஞ்சிகையில் கட்டுரை வெளியிட்டமை மூலம் அரச படைகளுக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாக இவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.
மேலும் இனங்களுக்கிடையிலான குரோதங்களை ஏற்படுத்த அதன்மூலம் திட்டமிட்டிருப்பதாகவும் அக்குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
முதலாவது, இரண்டாவது குற்றச்சாட்டுகளுக்கு தலா ஐந்து வருட சிறைத்தண்டனையும் மூன்றாவது குற்றச்சாட்டுக்கு பத்து வருட சிறைத்தண்டனையும் சேர்த்து 20 வருடகால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
கடந்த வருடம் மார்ச் மாதம் 6 ஆம் திகதி திஸ்ஸநாயகம் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டார். குறிப்பிட்ட மாதாந்த சஞ்சிகையை வெளியிட்ட அச்சக உரிமையாளர் என்.யசீகரன் மற்றும் அவரது மனைவி ஆகியோர் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்ட பின் அவர்களை பார்வையிட பொலிசுக்கு சென்றபோதே திஸ்ஸநாயகம் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டார்.
பலமாத காலமாக பொலிஸ் தலைமையகத்தில் தடுத்துவைக்கப்பட்டிருந்த திஸ்ஸநாயகம் பின்னர் கொழும்பு உயர்நீதிமன்ற தீர்ப்பொன்றை அடுத்து கடந்த மே மாதம் 16 ஆம் திகதி தொடக்கம் கொழும்பு சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
இவரால் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரணசிங்க என்பவருக்கு வழங்கப்பட்டதாக கூறப்படும் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் சுயாதீனமாக வழங்கப்பட்டதென கொழும்பு மேல்நீதிமன்றம் ஏற்கனவே தீர்மானித்து அதனை அடிப்படையாக கொண்டு திஸ்ஸநாயக்துக்கு எதிரான வழக்கை விசாரணை செய்தது.
இதன்படி வழக்கு விசாரணை செய்த கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி தீபாலி விஜேசுந்தர, திஸ்ஸநாயகத்தின் மூன்று குற்றச்சாட்டுகளுக்கும் 20 வருட கடுழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார்.
திஸ்ஸநாயகம் சார்பாக ஆஜரான சட்டத்தரணி அனில் டி சில்வா கருத்து தெரிவிக்கையில் திஸ்ஸநாயகம் ஒரு இனவாதி அல்லவென்றும் சிங்கள மக்களுக்கு ஆதரவான வகையில் பல்வேறு போராட்டங்களுக்கு அவர் தலைமை தாங்கியுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
அரசியல் அமைப்பில் கருத்து வெளியிடும் சுதந்திரம் மட்டுமல்ல இன, மத ரீதியின்றியும் பாரபட்சமின்றியும் நியாயமானதொரு வழக்கு விசாரணைக்கு அதிகாரம் வழங்கியுள்ளபோதிலும் அவருக்கு எதிரான வழக்கில் இந்த நியாயம் வழங்கப்பட்டதா என்பது ஒரு கேள்விக்குறியான விடயம் என்றும் சட்டத்தரணி அனில் டி சில்வா நீதிமன்றத்தில் இன்று வெளிப்படையாக தெரிவித்தார்.
இவ்வழக்கின் தீர்ப்பை அவதானிக்க பெருந்திரளான பத்திரிகையாளர்கள் மற்றும் வெளிநாட்டு தூதரக உத்தியோகத்தர்கள் கொழும்பு மேல்நீதிமன்றத்துக்கு சமூகமளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

பாசிக்குடா சுற்றுலாத்துறை அபிவிருத்தி : உள்ளூர் மீனவர் விசனம்(பட இணைப்பு)



இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் சுற்றுலாத்துறையில் பிரபல்யம் பெற்றுள்ள பாசிக்குடா கடலோரப் பிரதேசத்தில் சுற்றுலாத் துறையை அபிவிருத்தி செய்ய மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகளினால் தமக்கு தொழில் ரீதியாகப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக உள்ளூர் மீனவர்கள் விசனம் தெரிவிக்கின்றனர். பல வருடங்களாக மீன் பிடித்தொழிலில் ஈடுபட்டு வந்த மீனவர்களை அந்த இடங்களிலிருந்து வெளியேறுமாறு தற்போது அதிகாரிகள் அறிவித்துள்ள நிலையிலேயே மீனவர்கள் இது தொடர்பான தமது கவலையை வெளியிட்டுள்ளனர். இதன் காரணமாக கல்குடா பகுதியைச் சேர்ந்த குடும்பங்களில் 99 சதவீதமான குடும்பங்கள் பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக கல்குடா மீனவர் சங்கத் தலைவர் மயில்வாகனம் சுந்தரராஜா தெரிவித்தார். தங்களின் மீன் வாடிகள் அமைந்துள்ள காணி மற்றும் வள்ளங்கள் நிறுத்தப்பட்டுள்ள கடலோரப் பகுதி ஆகியன ஹோட்டல்கள் கட்டுவதற்கு அடையாளமிடப்பட்டு ஒப்பந்தக்காரர்களான முதலீட்டாளர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாகக் கூறும் அவர், "இது தொடர்பாக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ள போதிலும் இது வரை சாதகமான பதில் எதுவும் கிட்டவில்லை" என்கிறார் "பொருத்தமான மாற்று இடத்தை வழங்கினால் தொழில் ரீதியான பாதிப்பிலிருந்து தங்களால் விடுபட முடியும்"என சங்கச் செயலாளரான பெரியதம்பி நடராஜா சுட்டிக் காட்டுகின்றார். இப்பிரதேசத்திலுள்ள மீனவர்கள் 58 வள்ளங்களையும் தோணிகளையும் வைத்திருப்பதாகக் கூறும் அவர் எந்நேரத்திலும் தாங்கள் இங்கிருந்து வெளியேறலாம் அல்லது வெளியேற்றப்படலாம் என்ற நிலையிலேயே இருப்பதாகவும் தெரிவிக்கின்றார். "தற்போதைய இடத்திலிருந்து சற்றுத் தொலைவில், அதாவது கல்குடா இராணுவ முகாமை அண்மித்த பகுதியில் இதற்கான அனுமதி வழங்கப்பட்டிருந்தாலும் அப்பகுதி கற்பாறைகள் நிறைந்திருப்பதால் பொருத்தமற்ற இடமாகவே உள்ளது." என்றும் தெரிவித்துள்ளார் பெரியதம்பி நடராஜா. "சுற்றுலாத்துறை அபிவிருத்தி செய்யப்பட வேண்டும் என்பதை மீனவர்கள் மறுக்கவில்லை.ஆனால் பொருத்தமான இடமொன்றை பெற்று இதனால் ஏற்படும் பாதிப்பிலிருந்து நாம் விடுபட வேண்டும் என்றுதான் மீனவர்கள் எதிர்பார்க்கின்றார்கள்" என்றார்


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

பேரினவாத அரசியலுக்கு இனிமேலும் மக்கள் அடிபணியக் கூடாது : கி.மா. முதலமைச்சர்


மக்கள் பேரினவாத அரசியலுக்கு இனிமேலும் அடிமைப்பட்டுவிடாமல் தனித்துவமான அரசியல்மூலம் தமது கௌரவத்தைப் பேணிக்கொள்ள வேணடும் என்பதே தனது கொள்கை" என கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேதுரை சந்திரகாந்தன் கூறினார். செங்கலடி - பதுளை வீதியிலுள்ள கித்துள் கிராமத்தில் புதிய பொதுச்சந்தைக் கட்டிடத்திற்கான நிர்மாண வேலைகளை நேற்று ஆரம்பித்து வைத்து உரையாற்றிய போதே இவ்வாறு அவர் கூறினார்.ஏறாவூர்ப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் எஸ்.ஜீவரங்கன் (உருத்திரா மாஸ்டர்) தலைமையில் நடைபெற்ற இவ்வைபவத்தில் தொடர்ந்து உரையாற்றிய மாகாண முதலமைச்சர், "கடந்த முப்பது வருடகால போர் காரணமாக தமிழ் மக்கள் ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட உயிர்களையும் கோடிக் கணக்கான பெறுமதி மிக்க சொத்துக்களையும் இழந்துள்ளனர். இத்தகைய இழப்புகளைச் சந்தித்த தமிழ் மக்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த உரிமைகள் கிடைக்காவிட்டாலும், தற்போது கிடைத்திருக்கும் மாகாண சபை என்ற அலகினூடாகவே எமது சமூக பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கு நாம் தயாராக வேண்டும்.எமது மாகாண மக்களின் தனித்துவத்தை அரசியல் ரீதியாகப் பலப்படுத்திப் பாதுகாத்துக் கொள்வதற்காகவே தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் என்ற கட்சியை உருவாக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. அதனை எவரும் மறுக்கவும் முடியாது மறைக்கவும் முடியாது. இதனைப் பலப்படுத்த மக்களின் ஒத்துழைப்பே தேவை. அவ்வாறில்லாமல் அரசியல் ரீதியாக பல்வேறு பிரிவுகளாக செயல்பட்டால் அது பின்னடைவைத்தான் ஏற்படுத்தும்" என்றும் குறிப்பிட்டார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

வவுனியா முகாம் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள் : சிவசக்தி ஆனந்தன்


வவுனியா இடைத்தங்கல் முகாமிலுள்ள மக்கள் சிலர் மறுபக்கத்தில் உள்ள முகாம் மக்களுடன் முட்கம்பி வேலிகளுக்குப் பின்னால் நின்று கதைத்துக் கொண்டிருந்தபோது, அவர்கள்மீது ஞாயிறன்று தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் என்.சிவசக்தி ஆனந்தன் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:"வவுனியா இடைத்தங்கல் முகாமில் உள்ள மக்கள் வெளியிடங்களுக்குச் சென்று தமது உற்றார் உறவினர்களைச் சந்திப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கின்றது. இத்தருணத்தில், தமது இன்ப துன்பங்களைப் பக்கத்தில் உள்ள முகாம் மக்களுடன் முட்கம்பி வேலிகளுக்குப் பின்னால் நின்று கதைத்துக் கொண்டிருந்ததைக் கவனித்த இராணுவத்தினர் அம்மக்கள் மீது மூர்க்கத்தனமான தடியடித் தாக்குதலை நடத்தியுள்ளனர். அத்துடன் அங்கிருந்த மக்களை முழந்தாளிட வைத்தும், மண்மூடைகள், முட்கம்பிச் சுருள்கள், கம்பிக்கட்டைகள் ஆகியவற்றைத் தலையில் சுமக்க வைத்தும் தண்டித்துள்ளனர்.முகாமிலுள்ள மக்களை உள்ளக இடம்பெயர்ந்தோராக வெளியுலகுக்குக் காண்பிக்கும் இலங்கை அரசாங்கம், எமது மக்களைக் கைதிகளைப் போன்று நடத்துவதைக் கைவிடவேண்டும். மேலும், தாங்கள் விரும்பிய பொழுதெல்லாம் குளித்துத் துணி துவைத்த இம்மக்கள் இன்று இருபது லிட்டர் தண்ணீருக்காக பத்து பதினொரு மணித்தியாலங்கள் வரை வரிசையில் நிற்கவேண்டியுள்ளது. இதனால், பெரும்பாலான மக்களின் இரவுகள் முகாம்களிலுள்ள கூடாரங்களுக்கு வெளியே குழாய்க் கிணற்றுக்கருகில்தான் கழிகின்றது. இதற்குத் தக்க மாற்று ஏற்பாட்டினை அரசாங்கம் செய்ய வேண்டுமென்று கேட்டுக்கொள்கின்றேன்."இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

கடந்த மாதம் ஆரம்பமான மன்னார்-திருமலை பஸ்சேவை இம்மாதம் நிறுத்தம் : மக்கள் கவலை


கடந்த ஜூலை மாதம் 21 ஆம் திகதி மன்னாரிலிருந்து திருகோணமலைக்கான நேரடி போக்குவரத்துச் சேவை ஒன்றை இலங்கை போக்குவரத்துச் சபை ஆரம்பித்து வைத்திருந்தது. எனினும் இச்சேவை இம்மாதம் 21ஆம் திகதியுடன் நிறுத்தப்பட்டிருப்பதாகப் பயணிகள் கவலை தெரிவிக்கின்றனர்.கடந்த ஜூலை மாதம் 21 ஆம் திகதி மன்னார் அரசாங்க அதிபர் ஏ. நிக்கிலாஸ்பிள்ளை இதனை தினசரி சேவையாகவே ஆரம்பித்து வைத்திருந்தார். இதன்படி தினசரி காலை 6.30 மணிக்கு மன்னாரிலிருந்து வவுனியா சென்று, அங்கிருந்து ஹொரவப்பொத்தானை வீதியூடாக திருகோணமலையைப் பஸ் சென்றடைந்தது. பின் அதே பாதையூடாக, அன்று மாலை மீண்டும் மன்னாரை பஸ் வந்தடைந்தது. இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் பலனடைந்து வந்தனர்.எனினும் இச்சேவை எவ்வித முன்னறிவித்தலுமின்றி கடந்த 21ஆம் திகதி முதல் நிறுத்தப்பட்டிருப்பதாகப் பயணிகள் விசனம் தெரிவிக்கின்றனர்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

ஆதரவற்ற சிறுவர் நலன் குறித்து மனித உரிமைக்குழு கலந்துரையாடல்


வவுனியா மெனிக்பாம் முகாம்கள் சிலவற்றில் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள ஆதரவற்ற சிறுவர்களின் எதிர்கால நலன்கள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் 2 ஆம் திகதி புதன்கிழமை கலந்துரையாடவுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வவுனியா பிராந்திய பொறுப்பதிகாரி எம்.ஆர்.பிரியதர்சன தெரிவித்துள்ளார். மெனிக்பாம் இடைத்தங்கல் முகாம் தொகுதியைச் சேர்ந்த தர்மபுரம் முகாமில் 35 சிறுவர்களும், சுமதிபுரம் முகாமில் 26 சிறுவர்களும், வீரபுரம் முகாமில் 13 சிறுவர்களும் இருப்பதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வவுனியா பிராந்திய அலுவலகத்தினர் கண்டறிந்துள்ளனர். இவர்களின் முறையான பராமரிப்பு, இவர்களுக்கான சமூகப் பாதுகாப்பு, கல்வி, சுகாதாரம், எதிர்கால நன்மைகள் என்பன குறித்து சம்பந்தப்பட்ட முகாம்களின் பொறுப்பதிகாரிகள், மற்றும் அந்தந்த முகாம்களைச் சேர்ந்த பொலிஸ் அதிகாரிகள் ஆகியோருடன் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வவுனியா பிராந்திய அதிகாரிகள் கலந்துரையாடவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது."இந்த முகாம்களில் சிறுவர்கள் பராமரிக்கப்பட்டு வருகின்ற போதிலும், அவர்களது பெற்றோர் - உற்றார்கள் இருக்கின்றார்களா என்பது குறித்த தகவல்கள் எதுவும் தெரியாது. இந்த நிலையில் சம்பந்தப்பட்ட சிறுவர்களை உரிய இடங்களில் வைத்துப் பராமரிப்பதற்கு இந்தக் கலந்துரையாடல் வழிசமைக்கும்" என மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வவுனியா பிராந்திய இணைப்பதிகாரி பிரியதர்சன நம்பிக்கை வெளியிட்டுள்ளார்
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

பூனையும் கதை சொல்லும்


பூனையும் கதை சொல்லும்
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

மூன்று பில்லியன் டொலர் நிதி சுவிஸ் வங்கியில் வைப்பு


தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சொந்தமான சுமார் மூன்று பில்லியன் பணம் சுவிட்சர்லாந்து வங்கியில் வைப்புச் செய்யப்பட்டுள்ளதாக குமரன் பத்மநாதன் தெரிவித்துள்ளதாக சிங்கள பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.பிரான்ஸ், சுவீடன், பிரிட்டன் மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளில் திரட்டப்பட்ட பணமே இவ்வாறு வைப்பிலிடப்பட்டுள்ளது என கே.பி. கூறியுள்ளதாகவும், சுவிஸ்சர்லாந்திலிருந்தே தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு அதிகளவு நிதி உதவி கிடைக்கப் பெற்றதாக குமரன் பத்மநாதன் தெரிவித்துள்ளதாகவும் அப் பத்திரிகைச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்குச் சொந்தமான சொத்துக்கள் தொடர்பில் தொடர்ச்சியாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாக பாதுகாப்பு தரப்பினர் தகவல் வெளியிட்டுள்ளனர்
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

சம்மன் அனுப்பியது சட்ட விரோதம் :போலீஸ் மீது விஜயகாந்த் பாய்ச்சல்


புலன் விசாரணையின் போது, சாட்சிகள் யார் பெயரையாவது சம்பந்தப்படுத்தி சொன்னால் தான், சட்டப்படி அவர்களை அழைத்து விசாரிக்க முடியும். அப்படியிருக்க, எனக்கு சம்மன் அனுப்பியது சட்ட விரோதமானது’ என்று, சி.பி.சி.ஐ.டி., போலீசாருக்கு தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் பதில் அளித்துள்ளார்.
பனையூரில் நடந்த இரட்டைக் கொலை தொடர்பாக, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டிருந்தார். இதையடுத்து, “கொலை வழக்கு தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும்’ என, அவருக்கு சி.பி.சி.ஐ.டி., போலீசார் சம்மன் அனுப்பினர்.
அந்த சம்மனுக்கு விஜயகாந்த் நேற்று அளித்த பதிலில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: மத்திய அரசு நியமித்த போலீஸ் கமிஷனும், சுப்ரீம் கோர்ட்டும் அளித்துள்ள பரிந்துரையில், காவல் துறையில் சில சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தியும், அவற்றை மாநில அரசுகள் ஏற்கவில்லை. முக்கிய சம்பவங்களில் முறையான, பாரபட்சமற்ற விசாரணை தேவைப்படுகிறது. புலன் விசாரணை சுதந்திரமாக நடக்க வேண்டும் என்பதற்காக வழிவகுப்பதே, என்னுடைய அறிக்கையின் முக்கிய நோக்கம். என்னுடைய அறிக்கையை விஷமத்தனம் என்று யாராவது கருதுவார்களானால், அதை அவர்கள் சரியாக புரிந்துகொள்ளவில்லை என்றே அர்த்தம். போலீசாரிடம் பொதுமக்கள் ஒப்படைத்த சண்முகராஜனை, பொறுப்புள்ள போலீஸ் துறை எப்படி கையாண்டிருக்க வேண்டும் என்று, அரசியல்வாதிகளுக்கு அறிவுரை சொல்லும் டி.ஜி.பி.,க்கு தெரிந்திருக்க வேண்டாமா? மர்மமான முறையில் மரணமடைந்த அவரை, உடனடியாக ஏன் எரித்தனர் என்று மக்கள் சந்தேகப்படுவதில் என்ன தவறு?சண்முகராஜன் சாவு மரணமா, கொலையா? இளங்கோவனின் மருமகள் வசந்தியை யாரும் பார்க்க முடியாத வகையில், போலீசார் முற்றுகையிட்டிருப்பது ஏன்? சண்முகராஜனோடு இருவர் வந்ததாகக் கூறப்படுவது உண்மையா? வந்த கார்களின் பெயர்களும், பயன்படுத்திய துப்பாக்கிகள் பற்றியும் முரண்பட்ட விவரங்கள் வருவதேன்? என்பன போன்ற பல சந்தேகங்கள் மக்களிடமும், சட்ட வல்லுனர்களிடமும் உள்ளன.
எனது அறிக்கையில் தரப்பட்ட தகவல்கள் அனைத்தும், ஏற்கனவே பத்திரிகை மற்றும் ஊடகங்களில் வெளிவந்துள்ளன. நல்ல எண்ணத்தோடு அறிக்கை கொடுத்த எனக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ஓர் அரசியல் கட்சித் தலைவரை மிரட்டும் பாணியில் காவல் துறை செயல்படுமேயானால், இவ்வழக்கு தொடர்பான உண்மை விவரங்கள் தெரிந்த சாதாரண பொதுமக்கள், எப்படி போலீசின் பக்கம் தலை வைத்து படுப்பர்?இச்சூழ்நிலையில், காவல்துறை எப்படி உண்மையை கண்டறிய முடியும். நான் கேள்விப்பட்ட விவரங்களைத் தான் அறிக்கையாக வெளியிட்டேன். தாங்கள் அனுப்பிய சம்மனிலும், தாங்கள் குறிப்பிட்டுள்ள சட்டப்பிரிவு எனக்கு பொருந்தாது. புலன் விசாரணையின் போது, சாட்சிகள் யார் பெயரையாவது சம்பந்தப்படுத்தி சொன்னால் தான், சட்டப்படி அவர்களை அழைத்து விசாரிக்க முடியும். அப்படியிருக்க, எனக்கு சம்மன் அனுப்பியது சட்ட விரோதமானது.
பொதுவாக எந்த சம்பவத்தைப் பற்றி பேசவும், விமர்சனம் செய்யவும், சாதாரண குடிமகனுக்கே அரசியல் சட்டத்தில் பேச்சுரிமை வழங்கப் பட்டுள்ளது. ஓர் அரசியல் கட்சித் தலைவர் என்ற முறையில், ஆளுங்கட்சியின் சர்வாதிகாரப் போக்கு குறித்து கருத்து தெரிவிக்க, எனக்கு முழு உரிமை உண்டு.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

டிஸ்கவரி விண்கலம் நேற்று புறப்பட்டது : நாசா தகவல்


விண்வெளியில் உள்ள சர்வதேச விண்வெளி மையத்திற்கு 7 விண்வெளி வீரர்களுடன் டிஸ்கவரி விண்கலம் நேற்றுக் காலை 9.30 மணியளவில் புறப்பட்டுச் சென்றதாக நாசா அறிவித்துள்ளது. புளோரிடாவில் உள்ள கேப் கனவெரல் ஏவுதளத்தில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த டிஸ்கவரி விண்கலம், சர்வதேச விண்வெளி மையத்தில் நாளை திங்கட்கிழமை அதிகாலை (அமெரிக்கா நேரப்படி இன்று (ஞாயிறு) இரவு சென்றடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.சர்வதேச விண்வெளி மையத்தில் பொருத்துவதற்காக பிரத்தியேகமாகத் தயாரிக்கப்பட்ட டிரெட்மில் உபகரணம் உட்பட ஆயிரக்கணக்கான கிலோ எடையுள்ள பொருட்களையும் டிஸ்கவரி விண்கலம் சுமந்து சென்றுள்ளது.முன்னதாக, கடந்த 25ஆம் திகதி விண்ணில் ஏவத் திட்டமிடப்பட்ட டிஸ்கவரி விண்கலம், மோசமான வானிலை காரணமாக நிறுத்தப்பட்டது. அதன் பின்னர் மீண்டும் ஏவப்பட இருந்த நிலையில், எரிவாயு குழாயில் ஏற்பட்ட கோளாறினால் ஒத்தி வைக்கப்பட்டது. தற்போது 3ஆவது வாய்ப்பில் டிஸ்கவரி விண்கலம் நேற்று வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டுள்ளதாக நாசா அறிவித்துள்ளது.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

இலங்கைத் தமிழர்களுக்கான உதவிகள் அதிகரிக்கப்பட வேண்டும் -கருணாநிதி


இலங்கைத் தமிழர்களுக்கு வழங்கப்படும் உதவிகளை மேலும் அதிகரிப்பதற்குரிய ஏற்பாடுகளை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு தமிழக முதலமைச்சர் கருணாநிதி மத்திய அரசாங்கத்தை நேற்று கோரியுள்ளார்.இது தொடர்பில் சென்னையில் ஊடகவியலாளர்களிடம் அவர் கருத்துத் தெரிவிக்கையில், இலங்கைத் தமிழர்களுக்கு தற்போது வழங்கப்படும் நிவாரணம் மற்றும் புனர்வாழ்வு நடவடிக்கைகள் போதுமானவை அல்ல. இலங்கைத் தமிழர்களில் அநேகமானோர் கஷ்டங்களை எதிர்நோக்குவதுடன், மழையுடன் போராட வேண்டியும் உள்ளது. ஆகவே இந்த விவகாரம் தொடர்பில் மேலும் கவனத்தைச் செலுத்துமாறு மத்திய அரசைக் கோருகிறோம் என்று கூறியுள்ளார்
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

ஊடகவியலாளர் திஸ்ஸநாயகம் தொடர்பான விசாரணைகளின் தீர்ப்பு நாளை


பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள சிரேஷ்ட ஊடகவியலாளர் ஜே.எஸ். திஸ்ஸநாயகம் தொடர்பான வழக்கு விசாரணைகளின் தீர்ப்பு நாளைய தினம் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.இலங்கையின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையிலான ஆக்கங்களை ஊடகங்களில் வெளியிட்டதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினால் திஸ்ஸநாயகம் மொத்தமாக 425 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

கி.முஸ்லிம் ஆயுதக் குழுக்களுக்கு மீண்டும் ஒரு பொது மன்னிப்புக் காலம்


கிழக்கில் இயங்கி வரும் முஸ்லிம் ஆயுதக் குழுக்களுக்கு மற்றுமொரு பொதுமன்னிப்பு காலம் வழங்கப்படவுள்ளதாக பாதுகாப்பு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மூன்று வாரங்களுக்கு முன்னர் ஆயுதங்களைக் களையுமாறு முஸ்லிம் ஆயுதக் குழுக்களுக்கு பாதுகாப்பு தரப்பினர் அழைப்பு விடுத்திருந்தனர். ஆயுதங்களைக் களையுமாறு முஸ்லிம் ஆயுதக் குழுக்களுக்கு விடுக்கப்பட்ட சகல கோரிக்கைகளும் நிராகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.முஸ்லிம் ஆயுதக் குழுக்கள் தொடர்பிலான புலனாய்வு விசாரணைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக கிழக்கு மாகாணத்திற்குப் பொறுப்பான பிரதிக் காவல்துறை மா அதிபர் எடிசன் குணதிலக்க தெரிவித்துள்ளார்.கிழக்கில் இயங்கி வரும் முஸ்லிம் ஆயுதக் குழுக்களிடம் பெருமளவு ஆயுதங்கள் உள்ளன எனவும், சொற்ப அளவிலான ஆயுதங்களே இதுவரையில் ஒப்படைக்கப்பட்டுள்ளன எனவும் தெரிவிக்கப்படுகிறது.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

பொத்துவில் இ.போ.ச. உப டிப்போ ஊழியர் வேலை நிறுத்தம் கைவிடப்பட்டது


பொத்துவில் இ.போ.ச. உப டிப்போ முகாமையாளர் அரசியல் கட்சியொன்றின் ஆதரவாளர் ஒருவரினால் தாக்கப்பட்ட சம்பவத்தையடுத்து பொத்துவில் மற்றும் அக்கரைப்பற்று டிப்போ ஊழியர்கள் இன்று காலை ஆரம்பித்த வேலை நிறுத்தம் சில மணித்தியாலங்களின் பின்பு முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது. நேற்று அக்கரைப்பற்றில் நடைபெற்ற தேசிய காங்கிரஸ் மாநாட்டில் அக்கட்சியின் ஆதரவாளர்கள் கலந்து கொள்ளும் வகையில் 4 பஸ்களை சேவையில் ஈடுபடுத்துமாறு கோரப்பட்டதாகவும் - இரண்டு பஸ்கள் உரிய நேரத்தில் பொத்துவில் பஸ் நிலையத்தை வந்தடையாத நிலையில் ஆத்திரமடைந்த குறிப்பிட்ட கட்சியின் ஆதரவாளர் இந்த உப டிப்போ முகாமையாளரைத் தாக்கியதாகவும் கூறப்படுகின்றது.தாக்குதலுக்கு இலக்கானதாகக் கூறப்படும் உப டிப்போ முகாமையாளர் ஏ.எம்.இப்ராஹீம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் வேளையில், சம்பவத்துடன் தொடர்புடைய நபரைக் கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கை நேற்று முன் வைக்கப்பட்டது.நேற்றிரவு வரை அந்நபர் கைது செய்யப்படாததையடுத்து இன்று காலை முதல் டிப்போ ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் முற்பகல் வரை பொத்துவில் - அக்கரைப்பற்று வீதியில் போக்குவரத்து சேவைகள் தடைப்பட்டு இருந்ததோடு குறிப்பிட்ட டிப்போக்கள் ஊடான வெளியூர் போக்குவரத்துக்களும் பாதிக்கப்பட்டிருந்தன.சந்தேகநபர் பொலிசாரால் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதையடுத்தே ஊழியர்கள் தமது வேலை நிறுத்தத்தை முற்பகல் 10.30 மணியுடன் கைவிட்டுள்ளதாக டிப்போ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

தம்பிலுவிலில் நேற்றிரவு இளம் குடும்பஸ்தர் மீது துப்பாக்கிச் சூடு


அம்பாறை மாவட்டம் தம்பிலுவிலில் நேற்றிரவு இளம் குடும்பஸ்தர் ஒருவர் அடையாளம் தெரியாத ஆயுததாரிகளின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். யோகநாதன் சுரேஸ்குமார்(31வயது) என்ற இந்நபர் தனது வீட்டிலிருந்த வேளை இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம் பெற்றுள்ளது. இது தொடர்பாக அக்கரைப்பற்று பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்ற போதிலும், இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய நபர்களோ, இதற்கான பின்னணியோ இதுவரை கண்டறியப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

வடக்கு முகாம்களிலிருந்து இதுவரை 10 ஆயிரம் பேர் தப்பிச் சென்றுள்ளனர் : ஆய்வில் மதிப்பீடு


வட பகுதி அகதி முகாம்களிலிருந்து சுமார் 10,000 பேர் தப்பிச் சென்றுள்ளதாக அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வு மதிப்பீடுகள் சுட்டிக்காட்டுகின்றன. வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் திணைக்களம் நடத்திய ஆய்வின் மூலம் இந்தத் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. குறிப்பிடக் கூடிய தொகையில் அகதிகள் முகாம்களிலிருந்து சட்டவிரோதமான முறையில் வெளியேறியுள்ளனர் என வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் பீ.எஸ்.எம். சார்ள்ஸ் தெரிவித்துள்ளார். இந்த ஆய்வு மதிப்பீட்டின் புள்ளி விபரத் தகவல்கள் பாதுகாப்புத் தரப்பினருக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆய்வில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: "வட பகுதி அகதி முகாம்களிலிருந்து பத்தாயிரம் பேர் வரையில் தப்பிச் சென்றிருக்கலாம். இந்த எண்ணிக்கை மேலும் உயர்வடையக் கூடும். மருத்துவ சிகிச்சைகளுக்காக வெளியேறிச் சென்றவர்கள் பலர் மீண்டும் அகதி முகாம்களுக்குத் திரும்பவில்லை. அகதி முகாம்களில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ள உத்தியோகத்தர்களுக்கு லஞ்சம் வழங்கிப் பலர் தப்பிச் சென்றுள்ளனர். அகதி முகாம்களுக்கு நிவாரணப் பொருட்களை விநியோகம் செய்ய வரும் வாகனங்களின் மூலமாகவும் சிலர் தப்பிச் சென்றுள்ளனர். அகதி முகாமிலிருந்து தப்பிச் செல்வதற்காக சிலர் லட்சக் கணக்கான ரூபா பணத்தை வழங்கியுள்ளதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன." இவ்வாறு அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வவுனியா அரசாங்க அதிபர் திணைக்களம் மேற்கொண்ட மேற்படி ஆய்வுகளின் இறுதி அறிக்கை பாதுகாப்பு தரப்பினரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

ஐ.நா.பொதுச் சபைக் கூட்டத்தில் ஜனாதிபதிக்குப் பதில் பிரதமர் பங்கேற்பு


அடுத்த மாதம் அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் அமைப்பின் 64 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்குப் பதிலாக பிரதமர் ரட்ணசிறி விக்ரமநாயக்க கலந்து கொள்வார் என இணையத் தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அந்தச் செய்தியில், "80 பேரைக் கொண்ட விசேட குழுவொன்றுடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொள்வார் எனவும் ஜே.என்.பி. தலைவர் விமல் வீரவன்ச, தேச நிர்மாண அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வார்கள் எனவும் முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது பிரதமர் ரட்ணசிறி விக்ரமநாயக்க ஒரு சிறு குழுவுடன் இந்தக் கூட்டத்தொடரில் கலந்து கொள்வார் எனத் தெரிவிக்கப்படுகிறது.பிரதமரின் வெளிவிவகார ஆலோசகர், பிரதமரின் செயலாளர் மற்றும் பிரத்தியேக செயலாளர் ஆகியோர் பிரதமருடன் நியூயோர்க் செல்ல உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது" என்று மேலும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

இளைஞர், யுவதிகளுக்கு வர்த்தக சித்திர வடிவமைப்புப் பயிற்சி : வ.மா. கிராம அபி. திணைக்களம் ஏற்பாடு






வடமாகாண கிராம அபிவிருத்தித் திணைக்களம் வவுனியாவில் உள்ள இளைஞர் யுவதிகளுக்கு வடக்கின் வசந்தம் திட்டத்தின்கீழ் 18 லட்ச ரூபா செலவில் வர்த்தக சித்திரம் மற்றும் வடிவமைப்புத் துறையில் பயிற்சியளித்து வருகின்றது. அரச திணைக்களத்தினால் இலங்கையில் முதன்முறையாக இந்தப் பயிற்சி நெறி வவுனியாவிலேயே ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக இதன் ஆரம்ப வைபவத்தில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றிய வடமாகாண கிராம அபிவிருத்தித் திணைக்களத்தின் பணிப்பாளர் ஜே.ஜே.சி.பெலிசியன் தெரிவித்தார்.வவுனியா மாவட்ட மகளிர் அபிவிருத்தி நிலையத்தில் நடத்தப்படுகின்ற இந்தப் பயிற்சி நெறிக்கு 25 இளைஞர் யுவதிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள். கணினி அறிவு, வர்ணமிடல் முறைகள், அலங்காரப் பொருள் ஆக்கம், ஸ்கிரீன் பிரிண்டிங், றப்பர் சீல் தயாரித்தல், விளம்பரப் பலகைகள், பதாதைகள் செய்தல், பிளாஸ்டிக் அடையாள அட்டைகள் செய்தல், மெடல்கள், கேடயங்கள் செய்தல், என்கிறேவிங், எச்சிங், எம்போசிங், முலாமிடல், மக் பிரிண்ட், பொயிலிங் மற்றும் தச்சுவேலை, வெல்டிங், வயரிங், எம்புறோடிங், டிஜிட்டல் போன்ற விடயங்களில் அடிப்படை அறிவுக்கான பயிற்சி என்பன இதில் பாடங்களாக உள்ளடக்கப்பட்டிருப்பதாக இதன் பொறுப்பாசிரியர் எஸ்.எஸ்.ஜசோதரன் தெரிவித்துள்ளார். இந்தப் பயிற்சி நெறி ஆறு மாதங்களுக்கு நடைபெறும் என்றும் பயிற்சியின் முடிவில் மாணவர்களுக்குச் சான்றிதழ் ஒன்று வழங்கப்படும் என்றும், வடமாகாண கிராம அபிவிருத்தித் திணைக்களத்தின் பணிப்பாளர் பெலிசியன் தெரிவித்துள்ளார். மேற்கத்தைய நாடுகளில் மேற்கொள்ளப்படுகின்ற வழிமுறைகளைப் பின்பற்றியதாக விசேட முறையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்தப் பயிற்சி நெறி ஆறுமாதங்களுக்கு முழுநேர வகுப்பாக நடத்தப்படும் என்றும், பயிற்சியின் முடிவில் மாணவர்கள் 15க்கும் மேற்பட்ட துறைசார்ந்த சுயதொழில் வாய்ப்புகளுக்கான திறமையையும், அறிவையும் பெற்றிருப்பார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். கிராம அபிவிருத்தித் திணைக்களத்தின் வவுனியா மாவட்ட அதிகாரியான அ.அருற்வேள்செல்வன் தலைமையில் நடைபெற்ற இந்தப் பயிற்சி நெறியின் ஆரம்ப வைபவத்தில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு வவுனியா உதவி மாவட்டச் செயலாளர் எஸ்.வசந்தகுமார் கருத்துரை வழங்கினார். அவர், "இளைஞர் யுவதிகளுக்கு சுயதொழில் வாய்ப்பினை ஏற்படுத்தித் தருவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள இந்தப் பயிற்சி நெறியின் மூலம் மாணவர்கள் சிறந்த பலன்களைப் பெற்று வாழ்க்கையில் முன்னெற முடியும் என்பதில் சந்தேகமில்லை" எனத் தெரிவித்தார். இந்த வைபவத்தில் கிராம அபிவிருத்தித் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் வீ.குமாரசிங்கமும் கலந்து கொண்டு உரையாற்றினார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

எமது கடற்படை அனுபவங்களை பகிர்ந்துகொள்ள உலகம் தயாராகவுள்ளது - பாதுகாப்புச் செயலர்


பயங்கரவாதத்தை தோற்கடிப்பதில் எமது எமது கடற்படையின் அனுபவங்களை பகிர்ந்துகொள்ள உலகம் தயாராகவுள்ளது என பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ஷ கூறியுள்ளார். திருகோணமலையில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற கடைற்படையினரை பாராட்டும் வைபவமொன்றில் உரையாற்றுகையிலேயே பாதுகாப்புச் செயலர் இவ்வாறு கூறியுள்ளார். அவர் அங்கு உரையாற்றுகையில் மேலும் கூறியதாவது: நாட்டை பாதுகாப்பதில் தம்மை அர்ப்பணித்த கடற்படைத் துருப்புகள் பயங்கரவாதத்தை தோற்கடிப்பதில் பெரும் பங்காற்றியுள்ளனர். பிராந்திய ஒருமைப்பாட்டையும் இறைமையையும் தாய்நாட்டின் ஐக்கியத்தையும் பாதுகாப்பதற்கான அவர்களின் முயற்சிகளையும் அர்ப்பணிப்பையும் நான் பாராட்டுகிறேன். தமிழீழ விடுதலைப் புலிகளின் 8 கப்பல்களை உள்நாட்டு மற்றும் சர்வதேச கடற்பரப்பில் அழித்துள்ளனர். அதன் மூலம் புலிகள் ஆயுதங்களை கொண்டுவருவது தடுக்கப்பட்டதால் புலிகள் கடைசிக் கட்ட யுத்தத்தில் ஆயுத பற்றாக்குறையை எதிர்நோக்கினர். தன்னிடமுள்ள மட்டுப்படுத்தப்பட்ட வளங்களையும் தொழில்நுட்பங்களையும் கொண்டு கடலில் பயங்கரவாதத்தை தோற்கடித்த இலங் கைக் கடற்படை உலகின் மிகச் சிறந்த கடற்படைகளில் ஒன்றாக விளங்குகிறது. கடற்படை தனது விசேட படகு அணியைப் பயன்படுத்தி தமிழீழ விடுதலைப் புலிகளின் தற்கொலைப் படகுகள் மற்றும் நடமாட்டங்களை அழித்துள்ளது. அதி உயர் கடல் வலிமையைக் கொண்டுள்ள ஆனால், பயங்கரவாத நடமாட்டங்களை தடுக்க முடியாத நாடுகளும் உள்ளன. இலங்கைக் கடற்படையின் அனுபவங்களை தம்முடன் பகிர்ந்துகொள்ளுமாறு பல நாடுகள் பாதுகாப்பு அமைச்சிடம் கோரியுள்ளன.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

வானில் அம்மன் தோன்றும் அரிய புகைப்படம்

கொழும்பிலிருந்து முதற்தடவையாக மட்டக்களப்பு புன்னைச்சோலை பத்ரகாளி அம்மன் கோவிலுக்குச் சென்ற பக்தை ஒருவரின் கமராவில் சிக்கியது தான் இந்தப் படம். புகைப்படத்தை பாருங்கள். பரந்த இந்த நிலப்பரப்பில் நீல நிறமாக காணப்படும் வானில் ஏதாவது உங்களுக்குத் தென்படுகிறதா...? உங்களிடம் கடவுள் நம்பிக்கை இருக்கிறதா...? அப்படியானால் கூர்ந்து அந்தப் படத்தைப் பாருங்கள். நிச்சயம் அந்தப் படத்தில் ஒரு உருவம் தென்படுவதை காண்பீர்கள். நிச்சயமாக அது புன்னைச்சோலை ஸ்ரீ பத்திரகாளி அம்மன் தான் என்கிறார் செல்வி லாவண்யா பகீரதன். இவர் ஒரு சட்டக் கல்லூரி மாணவி. வெள்ளவத்தையைச் சேர்ந்தவர். இந்தப் புகைப்படம் குறித்தும் அதில் தென்படும் அந்த அம்மன் உருவம் குறித்தும் லாவண்யா மெய்சிலிர்க்க எம்மிடம் பின்வருமாறு கூறினார். கொழும்பைச் சேர்ந்த நாங்கள் முதற்தடவையாக மட்டக்களப்புக்கு போயிருந்தோம். அந்தப் பயணத்தின் போது மிக மிக சக்தியும் அதன் மூலம் பிரசித்தியும் பெற்ற புன்னை சோலை அம்மன் கோயிலுக்கு போக விரும்பினோம். இந்த ஆலயத்தில் நிறைய அற்புதங்கள் நடந்துள்ளன. நாங்கள் போன போது ஆலயம் மூடப்பட்டிருந்தது. ஓரிருவர் மட்டும் வெளியே நின்று வணங்கிக் கொண்டிருந்தனர். இந்த ஆலயத்தின் மூலஸ்தானத்தில் இரண்டு கதவுகள் உண்டு. ஒரு கதவு பௌர்ணமி தினத்தில் மட்டுமே திறக்கப்படும். மற்றைய கதவு வருடத்தில் ஒரு முறை மட்டுமே திறக்கப்படும். பௌர்ணமி நாட்களில் மட்டும் திறக்கப்படும் கதவின் பின்னே பெரிய அம்மன் சிலை ஒன்று உள்ளதாம். வருடத்திற்கு ஒருமுறை திறக்கும் கதவின் பின்னே மூன்று அம்மன் சிலைகள் உண்டாம். பெரும்பாலும் பௌர்ணமி நாட்களில் பக்தர்கள் அம்மன் உரு வந்து ஆடுவதுண்டாம். பிள்ளை வரம் இல்லாதவர்கள், திருமணம் கை கூடாதவர்கள் எல்லாம் இங்கு வந்து நேர்த்தி வைத்தால் எல்லா வேண்டுதல்களும் நிறைவேறுமாம். இவை எல்லாம் இங்குள்ள மக்களிடம் இருந்து தெரிந்து கொண்ட விடயங்கள். மூலஸ்தானக் கதவு மூடப்பட்டிருந்ததால் ஆலயத்திற்கு வெளியே நின்று அம்மனை தரிசித்து விட்டு மீண்டும் மட்டக்களப்பு நோக்கி பயணித்தோம். அந்தச் சமயம் அமிர்தகழிக்கும் புன்னைச் சோலைக்கும் இடையில் ஒரு பெரிய வெற்று நிலப்பரப்பு காணப்பட்டது. வானம் முகில்கலின்றி மிக ரம்மியமாக காணப்பட்டது. அந்த காட்சி என் மனதை மிகவும் கவர்ந்ததால் உடனே என் கமராவைக் கொண்டு அந்த இயற்கை சூழலை கிளிக் செய்தேன். இப்படி நிறைய புகைப்படங்களை எடுத்தேன். கொழும்பு திரும்பியதும் அந்தப் படங்களை டெவலப் பண்ணி எடுத்து பார்த்த போது ஆச்சரியப்பட்டு போனோம். அதிசயத்தில் பரவசப்பட்டு போனேன். எடுத்த படங்களில் வானில் அம்மன் உருவம் ஒன்று தென்பட்டது. இது நிச்சயம் புன்னைச்சோலை அம்மன் தான் என்று எங்கள் உள்மனம் சொல்கிறது. அதுதான் உண்மையும் கூட. கொழும்பிலிருந்து சென்று அம்மனை தரிசிக்க முடியாது போன எங்களுக்கு ஏமாற்றம் ஏற்படக் கூடாது என்று நினைத்த அம்மனின் அருள் தரிசனம் தான் அது.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

வீடியோ

எதிர்பார்க்கப்படுகின்றது. ... ஒரு சொல்லென்றாலும் பறவாயில்லை உங்கள் கருத்துக்களை அந்த வீடியோக்கு கீழ் எழுதுங்கள்.
வாசகர்களிடமிருந்து தரமான ஆக்கங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

மூன்று குரங்குகள் -அன்று = இன்று !






மூன்று குரங்குகள் - அன்றுகெட்டதை பார்க்காதே !கெட்டதை பேசாதே !கெட்டதை கேக்காதே !இதை வேறு விதமாகவும் கூறி இருப்பார்கள்.(கெட்டதை - பதில் வேறு சொற்கள்) புகைப்படங்கள் தொகுப்பு இதோ !



ஆனால் இன்று காலத்தின் மாற்றத்தால் அல்லது ....?எப்படி இப்படி என்று தெரியவில்லை.தோ உங்கள் மூன்று குரங்குகள் - இன்று பார்வைக்கு,

உங்கள் கற்பனைக்கு விட்டு விடுகிறேன்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS
Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates