இலங்கையின் பிரித்தானியாவிற்கான உயர்ஸ்தானிகரின் அனுபவமற்ற பணிகள்!
முன்னாள் உயர் நீதிமன்ற நீதியரசர் நிஹால் ஜயசிங்க பிரித்தானியாவின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டு ஒருவருட காலமாகிறது. கடந்த ஒருவருட காலத்திற்குள் உயர்ஸ்தானிகர் இராஜதந்திரப் பணிகள் மற்றும் இராஜந்திர அல்லாத பணிகள் ஆகியவற்றுக்கிடையே வித்தியாசமறியாது குழம்பிப் போயுள்ளார்.
இதற்கான பிரதான காரணம் அவருக்கு இராஜதந்திர துறையில் போதிய அனுபவம் இன்மையே என அவருடன் பணியாற்றிய மற்றும் தற்போதும் பணியாற்றிவரும் தொழில்சார் இராஜதந்திரிகள் தெரிவிக்கின்றனர்.குறித்த ஒரு துறையில் போதிய அனுபவம் இல்லையெனினும், அதனைக் கேட்டறிந்து கொள்ளும் மனப்பக்கும் இருக்குமாயின் அந்தத் துறையில் நிலைத்திருக்கக் கூடிய வாய்ப்புக்கள் உள்ளன. எனினும், அந்த மனநிலைகூட தற்போதைய உயர்ஸ்தானிகருக்கு இல்லாத நிலையில், பிரித்தானியாவிலுள்ள இலங்கைக்கான உயர்ஸ்தானகராலயத்தில் பல்வேறு குளறுபடிகள் இடம்பெறுவதாக அங்கிருந்து கிடைக்கும் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உயர்ஸ்தானிகர் ஜயசிங்கவை குறித்த பதவிக்கு அமர்த்துமாறு முன்னாள் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளேயே பரிந்துரை செய்துள்ளார். அதற்கான காரணம் நிஹால் ஜயசிங்க, ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே, மஹிந்த ராஜபக்~ ஆகியோர் இலங்கை சட்டக் கல்லூரியில் சமகால நண்பர்கள் என்பதனாலாகும். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்~, ஜயசிங்கவை பிரித்தானியாவிற்கான உயர்ஸ்தானிகராக பதவி நியமித்து அனுப்பிவைக்கும் சந்தர்ப்பத்தில், தமது சக நண்பர் இவ்வாறு பணிகளைக் குழப்பியடித்துக் கொள்வார் என நினைத்திருக்க மாட்டார். இராஜந்திர நடவடிக்கையென்பது தற்போது அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளதையே இது எடுத்துக் காட்டுகிறது. இதற்கு முன்னரும் இலங்கையின் இராஜதந்திரப் பணிகள் குறித்து பல்வேறு விடயங்களை விளக்கியிருந்தோம். விடுதலைப் புலிகளுக்கு எதிராக செயற்படுவதற்கும் அவர்களின் செயற்பாடுகளைத் தடுப்பதற்கும் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களை ஒன்றிணைத்து, அந்தந்த நாடுகளிலுள்ள இலங்கைத் தூதரகங்களின் வழிகாட்டல்களுக்கு அமைய நிறுவப்பட்டுள்ள 'பயங்கரவாதத்திற்கு எதிரான இலங்கையர்கள்" என்ற அமைப்பு உலகெங்கிலும் செயற்பட்டு வருகின்றது.இந்நிலையில், உலகெங்கிலும் கடமையாற்றிவரும் இலங்கை தொழில்சார் இராஜதந்திரிகளுக்கு இந்த விடயம் பெரும் தலையிடியாக மாறியுள்ளது. பயங்கரவாதத்திற்கு எதிரான இலங்கையர்கள் என்ற அமைப்பு குறித்தும், எவ்வாறு தலையிடியாக மாறியுள்ளமை குறித்தும் இன்று எமது இணையம் ஆராய்கிறது.லண்டனில் உள்ள இலங்கை தூதரகத்தை மையமாகக் கொண்டு நிறுவப்பட்டுள்ள ஓர் அமைப்பு, விடுதலைப் புலிகளின் யுத்த தோல்வியின் பின்னர் மேலும் வலுவடைந்துள்ளதாகக் கூறப்படுகின்றது. இலங்கைத் தூதரகத்தின் செயற்பாடுகள், பயங்கரவாதத்திற்கு எதிரான இலங்கையர் என்ற அமைப்பினரின் தேவைகளுக்கு ஏற்பட செயற்பட ஆரம்பித்துள்ளதாக அத்தூதரகத்தின் நம்பகரமான உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.இலங்கைத் தூதரகத்தின் துணைதூதுவர் சுமித் நாகந்தலவே SLAT-UK அமைப்பின் முதலாவது இலக்காக அமைந்தார். அனுபவமிக்க இராஜதந்திரியான நாகந்தலவின் உத்தியோகப+ர்வ பணிக் காலம் ஆரம்பித்த நாள் முதலே, அமைப்பின் அதிகாரிகளின் செயற்பாடுகளுடன் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் இறுதி பிரதிபலிப்பாக இந்த மாத இறுதியில் வெளிவிவகார அமைச்சினால் நாகந்தல மீண்டும் இலங்கைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.விசேட இராஜந்திரியொருவரின் பணிக்காலம் குறைந்தது மூன்று வருடகாலமாகவிருந்த போதும், நாகந்தலவிற்கு ஒரு வருடத்திற்கும் குறைவான காலமே பணியாற்ற சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. குறித்தவொரு இராஜதந்திரி, பணியாற்றும் நாட்டின் இறையாண்மைக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் பாரியளவில் குற்றமிழைத்துள்ளார் என்று குற்றஞ்சுமத்தப்பட்டால் மாத்திரமே இவ்வாறு குறுகிய காலத்தில் இராஜதந்திரியொருவர் மீளழைக்கப்படுவது வழமையாகும். எவ்வாறான இடைய+றுகள் ஏற்பட்டாலும் தாம் ஏற்றப் பணியை செய்துமுடிப்பதே ஒரு இராஜதந்திரியின் சம்பிரதாயப+ர்வ கடமையாகும். எந்த அரசாங்கம் ஆட்சியில் இருக்கின்றது என்பது தொழில்சார் இராஜந்திரிக்கு அவசியமற்ற விடயமாகும். இரண்டு நாடுகளுக்கு இடையே நல்லெண்ணத்தைக் கட்டியெழுப்பவும், நல்லுறவை மேம்படுத்தவுமே இராஜதந்திரி செயற்படுவாரே தவிர அவர் அரசியல் விருப்பு, வெறுப்புக்களுக்கு உட்படுத்தப்பட மாட்டார்.இலங்கை தற்போது சர்வதேச ரீதியாக பெற்றுக்கொண்டுள்ள அபகீர்த்தியை குறைத்துக் கொள்வதற்காக இராஜதந்திரிகளைப் பயன்படுத்தும் நடவடிக்கை சிறியதொரு விடயமல்ல. அவ்வாறான தொழில்சார் இராஜதந்திர பணியை அரசியல்மயமாக்குவது அந்தப் பணிக்கு ஏற்படுத்தும் அபகீர்த்தி மட்டுமன்றி, சர்வதேச ரீதியான தொடர்புகளிலும் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியதாகும்.
- லங்கா நியூஸ் வெப்-

0 Response to "இலங்கையின் பிரித்தானியாவிற்கான உயர்ஸ்தானிகரின் அனுபவமற்ற பணிகள்!"
แสดงความคิดเห็น