jkr

எனது தாயாருக்கு 4 கணவர்கள் உள்ளனர்" சென்னை ஐகோர்ட்டில் இளம் பெண் கதறல்


நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பள்ளக்கா பாளையம் முனியப்பன்கோவில் தெருவைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மனைவி கமலாதேவி. இவர்களது மகள் சிவரஞ்சனி (வயது 16). இவர் 10-ம் வகுப்பு படித்துள்ளார். இதே பகுதியில் ஓட்டல் நடத்தி வருபவர் செல்லப்பன். இவரது மகன் சந்திரசேகரன் (22). இவருக்கும் சிவரஞ்சனிக்கு காதல் ஏற்பட்டது. கடந்த மே மாதம் 20-ந்தேதி சிவரஞ்சனி கம்ப்யூட்டர் வகுப்புக்கு சென்றார். அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து தாயார் கமலா தேவி குமாராபளையம் போலீசில் புகார் செய்தார். அதன் பின்னர் அவர் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்து தனது மகளை மீட்டு தரும்படி கூறி இருந்தார். அதனைத் தொடர்ந்து நீதிபதிகள் முகோபாத்தி யாயா, ராஜஇளங்கோ ஆகியோர் வழக்கை விசாரித்து மாயமான இளம் பெண்ணை மீட்டு கோர்ட்டில் ஒப்படைக்கும்படி குமாரபாளையம் போலீசாருக்கு உத்தரவிட்டனர். அதனைத்தொடர்ந்து சப்- இன்ஸ்பெக்டர் சின்னசாமி, மணிவண்ணன், திலகவதி ஆகியோர் தலைமையில் 2 குழுக்கள் அமைக்கப்பட்டது. அவர்கள் தீவிரமாக தேடிவந்தனர். போலீஸ் விசாரணையில் சந்திரசேகரன், சிவரஞ்சனியுடன் பவானியில் தங்கி இருப்பது தெரியவந்தது. தனிப்படை போலீசார் விரைந்து சென்று அங்கு ஒரு வாடகை வீட்டில் தங்கி இருந்த 2 பேரையும் மீட்டனர். அப்போது அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டது தெரியவந்தது. பின்னர் போலீசார் சந்திரசேகரனை கைது செய்து சேலம் சிறையில் அடைத்தனர். காதலனுடன் தங்கி இருந்த சிவரஞ்சனியை போலீசார் மீட்டு சென்னை ஐகோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அப்போது நீதிபதிகள் முன்பு கண்ணீர் விட்டு அவர் கதறி அழுதார். அப்போது அவர் கூறியதாவது:- எனது உண்மையான தந்தை சீனிவாசன். எனது தாயாருக்கு 4 கணவர்கள் உள்ளனர். தாயாருக்கு எய்ட்ஸ் நோய் உள்ளது. அவரை பார்க்க பல ஆண்கள் வருவார்கள். இது எனக்கு பிடிக்கவில்லை. இதனால் எனது காதலன் சந்திரசேகரனை திருமணம் செய்து கொள்ள விரும்பினேன். இப்போது நாங்கள் திருமணம் செய்து கொண்டோம். எனது காதலன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளான். எனனையும் அவருடன் சேர்த்து சிறையில் அடையுங்கள். என் தாயாருடன் வாழ எனக்கு விருப்பம் இல்லை. என்னை என் காதலனுடன் சேர்த்துவையுங்கள். இவ்வாறு அவர் கண்ணீர் விட்டு கதறி அழுதார். இதனைத் தொடர்ந்து நீதிபதிகள் பரபரப்பு தீர்ப்பு அளித்தனர். மைனர் பெண் தனது காதலனுடன் சேர்ந்து வாழ கோர்டடு அனுமதிக்கிறது. அவரது காதலனை விடுதலை செய்ய வேண்டும், அவர்கள் தாயாரின் நேரடி மேற்பார்வையில் வாழலாம் என்று நீதிபதிகள் தீர்ப்பு கூறினார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "எனது தாயாருக்கு 4 கணவர்கள் உள்ளனர்" சென்னை ஐகோர்ட்டில் இளம் பெண் கதறல்"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates