jkr

நான் ஒரு மநு விரோதன்


“எந்த சாதியில் பிறந்து இருந்தாலும் அடுத்தவன் மலத்தை வாரிச்சுமக்கிற அவலத்தில் இருந்து மீளத்துடிக்கும் ஒரு அருந்ததியனாக தன்னை உணருகிறவன்தான் கம்யூனி°ட்டாக இருக்கமுடியும்.”என வரையறுக்கிறது நான் ஒரு மநு விரோதன் எனும் நேர்காணல் நுhல். பண்ணையார் ஆதிக்க சமூகமுறை உலக நாடுகளில் பெரும்பான்மையாக இருந்த சமூக சூழலில்,முதலாளி ஆதிக்க சமூகமுறை இளம்பருவத்தில் இருந்த ஒரு காலகட்டத்தில்,கம்யூனிசத்தின் ஆசான்கள் இழப்பதற்கு எதுவுமே இல்லாத தொழிலாளர்களோடு லண்டனின் சேரிகளில் வாழ்ந்தார்கள்.அந்த உணர்வின் பாரம்பரியம் தொடரவேண்டும் எனும் வலியுறுத்தலாகவே இந்த வரையறுப்பு இருக்கிறது. இடதுசாரி இயக்கங்கள் அம்பேத்கரையும்,பெரியாரையும்,முன்னிறுத்தி சாதிஒழிப்புக்காக இன்னும் அதிகமாக போராடி யிருக்கவேண்டும்.இன்னும் போராடவேண்டும் என்பது நுhலின் மையமான விஷயம். இடதுசாரி இயக்கத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவரான மைதிலிசிவராமன் ஒரு நிகழ்ச்சியில் “இந்துத்வாவின் மையம் பிராமணியமே”என குறிப்பிட்டார்.இந்திய ஆளும்வர்க்கத்தின் சுரண்டல் சித்தாந்தம் இந்துத்வா.அதற்கும் கூட ஒரு சாதியத்தன்மை இருப்பதை தோழர் மைதிலியின் ஆய்வுரை வெளிப்படுத்துகிறது. பார்ப்பனியம்,தலித்தியம் எனும் சொற்கள் அவற்றின் சாதி வரம்புகளை கடந்த தத்துவகுறியீடுகளாக மாறிவருகிற இன்றைய சூழலில் ,உழைக்கும் மக்களின் தத்துவமான மார்க்சியத்தின் மையம் (இந்திய பின்னணியில்) தலித்தியமாக ஏன் இருக்ககூடாது? என்ற கேள்வியையும் அது எழுப்புகிறது. சாதியை கைவிடாமலே நாள்முழுவதும் சமதர்மவாதியாக வெளியே உலவுவதற்கான எல்லா வாய்ப்புகளும் சமூகத்தில் உள்ளது என்கிறது நுhல்.சாதியை கைவிடாதவர் நிச்சயம் மார்க்சியசமதர்மவாதியாக இருக்க முடியாது. ஒருவேளை அத்வைத சமதர்மவாதியாக,அல்லது இந்துத்வா சமதர்மவாதியாக இருக்கலாம். (தத்துவ தளத்தில் பார்ப்பனியத்துக்கு அத்வைதம் என்றும் பெயர். அத்வைதம் எனும் தத்துவ மாவை வைத்து செய்த விஷப்பணியாரமே இந்துத்வா.) அத்வைதத்துக்கும் மார்க்சியத்துக்கும் உள்ள வேறுபாடு மனிதஉடலின் உண்மையான செல்களுக்கும்,மனிதசெல்களைப்போலவே தோற்றம் கொண்ட எயிட்° கிருமிகளுக்குமான வேறுபாட்டைப்போல நுட்பமானது.அனைத்தும் சமமானவையே என்று மனதளவில் ஏற்றுக்கொண்டால் போதும்.செயலில் காட்டவேண்டியதில்லை என்கிறது அத்வைதம்(அதனால்தான் அது பூக்களால் மூடப்பட்ட புதைகுழியாக இருக்கிறது). சமத்துவத்துக்கான போராட்டத்தின் தியாகமும்,செயல்வீரமுமே மார்க்சியம்.எனவே சாதியை கைவிடாமல் சமதர்மம் பேசுபவர் உள்ளிட்ட முற்போக்கு திண்ணைப்பேச்சு வீரர் எல்லாம் அத்வைதியே. சாலை போடும் தொழிலாளர் குடும்பத்தில் இருந்து வந்த எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா தனது கோணத்தில் இருந்து சமூகத்தை பார்க்கும் பார்வையே இந்த நுhல்.கொதிக்கும் தாரின் சூடு அவரது சொற்களில் உள்ளது. சாதியம் மட்டுமல்லாமல், பெண்ணியம்,தேசியம்,தமிழினத்தின் புறநானுhற்று வெற்றுபெருமை, புத்தமதம் தீண்டாமையை ஒழிக்குமா? தலித்இயக்கங்களின் செயல்பாடுகள்,காந்தியிசம், என சமகால பிரச்சனைகள் பலவற்றிலும் விவாதங்களை கிளப்புகிறது நுhல். இத்தனை விரிந்த கருத்துக்களை நேர்காணல் வடிவத்தில் முன்வைப்பது போதுமானதல்ல.இந்தப்பாணி விவாதிக்கப்படும் விஷயத்தின் வீரியத்தை பின்னுக்கு தள்ளி விவாதிப்பவரை முன்னுக்கு தள்ளுவதைப் போன்ற தோற்றம் தருகிறது.மேற்கண்ட கருத்துக்களை தர்க்கரீதியாக, விரிவாக வாதம் செய்யும் நுhல்களாக ஆதவன் வெளியிடவேண்டும். அம்பேத்கரியத்தையும்,பெரியாரியத்தையும் முன்ஏந்தி மார்க்சியம் செயல்படவேண்டும் என ஆதவனின் குரல் உணர்ச்சி பொங்க நுhலில் ஒலிக்கிறது.எந்த மாற்றமும் இல்லாமல் அப்படியே அவற்றை பின்பற்றவேண்டும் என்று அவர் சொல்கிறாரோ என்ற மனப்பதிவை நுhலின் தொனி ஏற்படுத்துகிறது.ஆனால் அண்ணல் அம்பேத்காரோடு புத்தமதம் மாறியோரின் இன்றைய நிலை என்ன என்று ஆய்வு செய்யவேண்டும் என்பன உள்ளிட்ட கருத்துக்களை சொல்லியிருப்பதன் மூலம் நடைமுறை அனுபவங்களிலிருந்து எந்த ஒரு தத்துவத்தையும் மதிப்பிடவும் ஆதவன் முயற்சிகள் செய்கிறார் என்பதும் புரிகிறது.
இந்த சாதிய ஏற்றதாழ்வு சமூகத்தை இனியும் சகித்துக்கொள்ள முடியாது.வர்க்கப்போராட்டத்தின் பிரிக்கமுடியாத பகுதியான சாதிய ஒழிப்புபோராட்டத்தை மேலும் பலப்படுத்துவோம் என நம்மை அழைக்கும் நுhல்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
(திருத்தங்களிடையிலான வேறுபாடு)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "நான் ஒரு மநு விரோதன்"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates