jkr

பேரினவாத அரசியலுக்கு இனிமேலும் மக்கள் அடிபணியக் கூடாது : கி.மா. முதலமைச்சர்


மக்கள் பேரினவாத அரசியலுக்கு இனிமேலும் அடிமைப்பட்டுவிடாமல் தனித்துவமான அரசியல்மூலம் தமது கௌரவத்தைப் பேணிக்கொள்ள வேணடும் என்பதே தனது கொள்கை" என கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேதுரை சந்திரகாந்தன் கூறினார். செங்கலடி - பதுளை வீதியிலுள்ள கித்துள் கிராமத்தில் புதிய பொதுச்சந்தைக் கட்டிடத்திற்கான நிர்மாண வேலைகளை நேற்று ஆரம்பித்து வைத்து உரையாற்றிய போதே இவ்வாறு அவர் கூறினார்.ஏறாவூர்ப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் எஸ்.ஜீவரங்கன் (உருத்திரா மாஸ்டர்) தலைமையில் நடைபெற்ற இவ்வைபவத்தில் தொடர்ந்து உரையாற்றிய மாகாண முதலமைச்சர், "கடந்த முப்பது வருடகால போர் காரணமாக தமிழ் மக்கள் ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட உயிர்களையும் கோடிக் கணக்கான பெறுமதி மிக்க சொத்துக்களையும் இழந்துள்ளனர். இத்தகைய இழப்புகளைச் சந்தித்த தமிழ் மக்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த உரிமைகள் கிடைக்காவிட்டாலும், தற்போது கிடைத்திருக்கும் மாகாண சபை என்ற அலகினூடாகவே எமது சமூக பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கு நாம் தயாராக வேண்டும்.எமது மாகாண மக்களின் தனித்துவத்தை அரசியல் ரீதியாகப் பலப்படுத்திப் பாதுகாத்துக் கொள்வதற்காகவே தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் என்ற கட்சியை உருவாக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. அதனை எவரும் மறுக்கவும் முடியாது மறைக்கவும் முடியாது. இதனைப் பலப்படுத்த மக்களின் ஒத்துழைப்பே தேவை. அவ்வாறில்லாமல் அரசியல் ரீதியாக பல்வேறு பிரிவுகளாக செயல்பட்டால் அது பின்னடைவைத்தான் ஏற்படுத்தும்" என்றும் குறிப்பிட்டார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "பேரினவாத அரசியலுக்கு இனிமேலும் மக்கள் அடிபணியக் கூடாது : கி.மா. முதலமைச்சர்"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates