ஈரானிய தேர்தலுக்கு பின்னரான வன்முறைகளில் வெளிநாட்டு சக்திகளுக்கு சம்பந்தம் இல்லை - ஈரானிய உச்சநிலைத் தலைவர்
ஈரானில் ஜனாதிபதி தேர்தலையடுத்து நிலவிய பதற்ற சூழ்நிலைக்கு வெளிநாட்டு அதிகார சக்திகளின் முகவர்களே பின்னணியிலுள்ளதாக தெரிவிக்கப்படும் கருத்துக்களில் தனக்கு நம்பிக்கையில்லை என அந்நாட்டு உச்சநிலைத் தலைவர் ஆயதுல்லா அலி கமெய்னி தெரிவித்துள்ளார். மேற்படி பதற்றநிலை தொடர்பான விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ள அந்நாட்டு எதிர்க்கட்சி சிரேஷ்ட உறுப்பினர்கள், வெளிநாட்டு அதிகார சக்திகளின் முகவர்களாக செயற்பட்டே மேற்படி பதற்ற சூழ்நிலையை ஈரானில் தோற்றுவித்ததாக குற்றஞ்சாட்டப்படுகிறது. இந்நிலையில் ஈரானிய உச்சநிலைத் தலைவர் ஆயதுல்லா அலி கமெய்னி, அண்மைய சம்பவங்களுக்கு காரணமான எதிர்க்கட்சித் தலைவர்கள் அமெரிக்கா, பிரித்தானியா போன்ற வெளிநாட்டு சக்திகளின் முகவர்கள் எனத் தான் கருதவில்லை என்று கூறினார். எனினும் தேர்தலுக்கு பிற்பாடு 30 பேருக்கும் அதிகமானோர் பலியாவதற்கு காரணமாக இருந்த பாரிய வன்முறை ஆர்ப்பாட்டங்கள், சம்பந்தப்பட்ட எதிர்க்கட்சி தலைவர்களுக்கு தெரிந்தோ அன்றி தெரியாமலோ முன்பே திட்டமிடப்பட்டவை என்பதில் சந்தேகமில்லை எனக் கூறிய உச்சநிலைத் தலைவர், அந்த சதித்திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்
0 Response to "ஈரானிய தேர்தலுக்கு பின்னரான வன்முறைகளில் வெளிநாட்டு சக்திகளுக்கு சம்பந்தம் இல்லை - ஈரானிய உச்சநிலைத் தலைவர்"
แสดงความคิดเห็น