டிஸ்கவரி விண்கலம் நேற்று புறப்பட்டது : நாசா தகவல்
விண்வெளியில் உள்ள சர்வதேச விண்வெளி மையத்திற்கு 7 விண்வெளி வீரர்களுடன் டிஸ்கவரி விண்கலம் நேற்றுக் காலை 9.30 மணியளவில் புறப்பட்டுச் சென்றதாக நாசா அறிவித்துள்ளது. புளோரிடாவில் உள்ள கேப் கனவெரல் ஏவுதளத்தில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த டிஸ்கவரி விண்கலம், சர்வதேச விண்வெளி மையத்தில் நாளை திங்கட்கிழமை அதிகாலை (அமெரிக்கா நேரப்படி இன்று (ஞாயிறு) இரவு சென்றடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.சர்வதேச விண்வெளி மையத்தில் பொருத்துவதற்காக பிரத்தியேகமாகத் தயாரிக்கப்பட்ட டிரெட்மில் உபகரணம் உட்பட ஆயிரக்கணக்கான கிலோ எடையுள்ள பொருட்களையும் டிஸ்கவரி விண்கலம் சுமந்து சென்றுள்ளது.முன்னதாக, கடந்த 25ஆம் திகதி விண்ணில் ஏவத் திட்டமிடப்பட்ட டிஸ்கவரி விண்கலம், மோசமான வானிலை காரணமாக நிறுத்தப்பட்டது. அதன் பின்னர் மீண்டும் ஏவப்பட இருந்த நிலையில், எரிவாயு குழாயில் ஏற்பட்ட கோளாறினால் ஒத்தி வைக்கப்பட்டது. தற்போது 3ஆவது வாய்ப்பில் டிஸ்கவரி விண்கலம் நேற்று வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டுள்ளதாக நாசா அறிவித்துள்ளது.
0 Response to "டிஸ்கவரி விண்கலம் நேற்று புறப்பட்டது : நாசா தகவல்"
แสดงความคิดเห็น