வடக்கின் வசந்தம் 180 நாள் வேலைத்திட்டம் - ஐந்து மாவட்டங்களிலும் மீளாய்வுக்கூட்டம் இடம்பெற்றது.
ஜனாதிபதியின் மஹிந்த சிந்தனைக்கமைய வடமாகாணத்தின் ஐந்து நிர்வாக மாவட்டங்களான யாழ்ப்பாணம் வவுனியா மன்னார் கிளிநொச்சி முல்லைத்தீவு ஆகியவற்றில் மேற்கொள்ளப்படும் வடக்கின் வசந்தம் 180 நாள் வேலைத்திட்ட மீளாய்வுக்கூட்டங்கள் திட்டமிட்டபடி இடம்பெற்றுள்ளன. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுடன் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் வடக்கின் விசேட செயலணித் தலைவருமான பஷில் ராஜபக்ஷ வடமாகாண ஆளுனர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி ஆகியோரும் மேற்படி மீளாய்வுக் கூட்டங்களில் முக்கிய அதிதிகளாகப் பங்குகொண்டனர். மன்னார் வவுனியா மாவட்டங்களுக்கான மீளாய்வுக் கூட்டங்கள் கடந்த 25ம் திகதியும் வவுனியா கச்சேரியில் இடம்பெற்றன. கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களுக்கான மீளாய்வுக் கூட்டங்கள் கடந்த 26ம் திகதி இடம்பெற்றன. இதேவேளை யாழ். மாவட்ட மீளாய்வுக் கூட்டம் 27ம் திகதி வியாழக்கிழமை யாழ். பொதுநூலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது. அந்தந்த மாவட்டங்களின் இடம்பெற்ற மேற்படி 180 நாள் வேலைத்திட்ட அனைத்து மீளாய்வுக்கூட்டங்களிலும் குறிப்பிட்ட மாவட்டங்களின் கட்டளைத்தளபதிகள் அரசாங்க அதிபர்கள் பொலிஸ் உயரதிகாரிகள் சம்பந்தப்பட்ட அனைத்து அரச திணைக்கள மற்றும் சபைகளின் தலைவர்கள் பணிப்பாளர்கள் அனைவரும் பங்குகொண்டனர். மீள்குடியேற்ற நடவடிக்கைகள், விவசாயம் பொதுவசதிகள் உள்ளிட்ட வீடமைப்பு மின்விநியோகம் பொதுப்போக்குவரத்து கல்வி சுகாதாரம் என்பவற்றுடன் ஏனைய அனைத்து விடயங்களும் விரிவாக மீளாய்வு செய்யப்பட்ட அதேவேளை வடக்கின் வசந்தம் 180 நாள் துரித வேலைத்திட்டமும் விஷேடமாக கலந்துரையாடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Response to "வடக்கின் வசந்தம் 180 நாள் வேலைத்திட்டம் - ஐந்து மாவட்டங்களிலும் மீளாய்வுக்கூட்டம் இடம்பெற்றது."
แสดงความคิดเห็น