மன்னாரில் அபிவிருத்தி பணிகள் மக்களிடம் கையளிப்பு
மன்னார் மாவட்டத்தின பல அபிவிருத்தி பணிகளை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு நேற்று புதன்கிழமை இடம்பெற்றது.வங்காளை பாடசாலை விஞ்ஞான ஆய்வு கூடத்துடன் கூடிய இருமாடிக் கட்டிடம் திறந்து வைத்தல்,தாழ்வுபாடு பாடசாலை கட்டிடம்,நூலகப் பிரிவு திறந்து வைத்தல்,நானாட்டான் அச்சன்குளம் கிராமத்துக்கான மின் விநியோகத்திட்டம் போன்றவை தொடர்பான நிகழ்வுகள் நேற்று இடம்பெற்றன.மீள்குடியேற்ற,அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் றிசாத் பதியுதீன்,மன்னார் அரசாங்க அதிபர் நீக்கலா பிள்ளை,கல்வி பணிப்பாளர் ஆர்பல் ரெவல்,பிரதேச செயலாளர்கள்,பாடசாலை அதிபர்கள்,பொது மக்கள் ஆகியோர் இந்நிகழ்வுகளில் கலந்து கொண்டனர்.
0 Response to "மன்னாரில் அபிவிருத்தி பணிகள் மக்களிடம் கையளிப்பு"
แสดงความคิดเห็น