ஈழத் தமிழ் அகதிகளை வாழ்விடங்களுக்கு அனுப்ப வேண்டும் : தமிழகமெங்கும் போராட்டங்கள்
தமிழகத்தை ஆக்கிரமிக்கும் வெளியாரை வெளியேற்ற வேண்டும், ஈழத்தமிழ் அகதிகளை வாழ்விடங்களுக்கு அனுப்ப வேண்டும்" என்ற கோரிக்கைகளை முன்வைத்து தமிழகமெங்கும், நேற்று(26.08.09) புதன்கிழமை 'தமிழ்த் தேசிய எழுச்சி நாள்' கடைப்பிடிக்கப்பட்டது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பேரணி, ஆர்ப்பாட்டம் என போராட்டங்கள் நடந்தன. கடந்த ஜூலை மாதம் திருச்சியில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் நடத்தப்பட்ட 'தமிழ்த்தேசியம்' சிறப்பு மாநாட்டில், ஆகஸ்ட் 26 ஆம் நாளை தமிழ்நாட்டுத் தமிழர்கள் 'தமிழ்த் தேசிய எழுச்சி' நாளாகக் கடைபிடிக்க வேண்டுமெனத் தீர்மானம் நிறைவேற்றியிருந்தது.
அதன்படி நேற்று தமிழ்த் தேசிய எழுச்சி நாள் தமிழகமெங்கும் கடைப்பிடிக்கப்பட்டது.
தஞ்சையில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் தமிழ்த் தேசிய எழுச்சி நாள் பேரணியும் ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது. த.தே.பொ.க. பொதுச் செயலாளர் தோழர் பெ.மணியரசன் எழுச்சிமிகு நிறைவுரையாற்றினார். தமிழ்நாட்டு உரிமைகளை மீட்க வேண்டியதின் அவசியம் குறித்தும், முள்வேலிகளுக்குள் சிறை வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்களை விடுதலை செய்யக் கோரியும் பெ.மணியரசன் கருத்துரை வழங்கினார்.
சென்னை நினைவரங்கத்தில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் மாலை 4.00 மணியளவில் தமிழ்த் தேசிய எழுச்சி நாள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இவ்வார்ப்பட்டத்தில் "தமிழகத்தில் வெளியாரை வெளியேற்று"!, "முகாமிலுள்ள தமிழர்களை விடுதலை செய்!" என்பன போன்ற பல்வேறு முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இவை தவிர, சிதம்பரம், ஈரோடு, மதுரை , ஓசூர், திருச்சி, கோவை, திருத்துறைப்பபூண்டி, .புதுச்சேரி, சேலம் ஆத்தூர், வேலூர் ஆகிய இடங்களிலும் தமிழ்த் தேசிய எழுச்சி நாள் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. பல்வேறு தலைவர்களும் இவற்றில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினர்.
காவல்துறையினரின் அனுமதி மறுப்பு காரணமாக திருச்செந்தூரில் தமிழ்த் தேசிய எழுச்சி நாள் ஆர்ப்பாட்டம் நாளை 28ஆம் திகதியும், புதுக்கோட்டையில் 29ஆம் திகதியும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது

0 Response to "ஈழத் தமிழ் அகதிகளை வாழ்விடங்களுக்கு அனுப்ப வேண்டும் : தமிழகமெங்கும் போராட்டங்கள்"
แสดงความคิดเห็น