'தமிழ் மக்கள் தேசிய நீரோட்டத்தில் இணைவதற்கான அரசியல் தீர்வு திட்டம் அவசியம்' - லியாம் பொக்ஸிடம் கோரிக்கை
இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த பிரித்தானிய கன்சர்வேட்டிவ் கட்சி நாடாளுமன்ற உறுப்பி்னர் லியாம் பொக்ஸ் அவர்களிடம் இலங்கையின் இனப்பிரச்சினைக்கு தமிழ் மக்கள் தேசிய நீரோட்டத்தில் கலந்து செயற்படத்தக்க வகையிலான ஓர் அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
போரினால் இடம்பெயர்ந்துள்ள சுமார் 3 லட்சம் மக்களையும் உடனடியாக அவர்களுடைய சொந்த இடங்களில் மீள்குடியேற்றுவதற்கு நடவடிக்கை எடுப்பதற்கு அரசாங்கத்தைத் தூண்ட வேண்டும் என்றும் யாழ் மாவட்டத்தி்ன் நல்லெண்ணத்திற்கும் சமாதானத்திற்குமான மக்கள் குழுவினர் வேண்டுகோள் விடுத்திருக்கின்றார்கள்.
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த லியாம் பொக்ஸ், நல்லை ஆதீன முதல்வர் மற்றும் யாழ் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜஸ்டின் ஞானப்பிரகாசம் ஆகியோர் உள்ளடங்கிய நல்லெண்ணத்திற்கும் சமாதானத்திற்குமான மக்கள் குழுவினரையும், யாழ் அரசாங்க அதிபர் கே.கணேஸையும் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
இதுபற்றி யாழ் மக்கள் குழுவின் தலைவர் பேராசிரியர் பாலசுந்தரம்பிள்ளை எமது வவுனியா செய்தியாளரிடம் தெரிவித்த தகவல்களை இன்றைய செய்தியரங்கத்தில் கேட்கலாம்.

0 Response to "'தமிழ் மக்கள் தேசிய நீரோட்டத்தில் இணைவதற்கான அரசியல் தீர்வு திட்டம் அவசியம்' - லியாம் பொக்ஸிடம் கோரிக்கை"
แสดงความคิดเห็น