தொழிலாளர்களின் சம்பள உயர்வு : நாடாளுமன்றில் பிரேரணை சமர்ப்பிக்க ரணில் இணக்கம்
தோட்டத்தொழிலாளர்களின் அடிப்படை நாட் சம்பளமாக 500 ரூபாவுக்குக் குறையாமல் பெற்றுக்கொடுப்பதற்கு ஐக்கிய தேசிய கட்சியின் இலங்கைத் தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. இன்று 27 ஆம் திகதி ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்துத் தாம் இதனை வலியுறுத்தியதாகத் தொழிலாளர் தேசிய சங்கத்தின் சார்பில், சந்திப்பில் கலந்து கொண்ட மத்திய மாகாணசபை உறுப்பினர் உதயகுமார் தெரிவித்தார்.கொழுப்பு கேம்பிரிஜ் பிளேஸிலுள்ள எதிர்க்கட்சித் தலைவரின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இடம் பெற்ற இந்தச் சந்திப்பில் இலங்கைத்தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் பொதுச்செயலாளரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான எஸ்.சதாசிவம் இலங்கைத்தேசிய தோட்டத்தொழிலாளர் சங்கத்தின் சார்பாக மொஹிதீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.இந்தச்சந்திப்பின் போது, தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயம் தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சியின் ஊடாக நாடாளுமன்றத்தில் பிரேரணை ஒன்றினை சமர்ப்பிக்குமாறு விடப்பட்ட கோரிக்கையையும் எதிர்க்கட்சித்தலைவர் ஏற்றுக்கொண்டதாக உதயகுமார் மேலும் தெரிவித்தார்.
0 Response to "தொழிலாளர்களின் சம்பள உயர்வு : நாடாளுமன்றில் பிரேரணை சமர்ப்பிக்க ரணில் இணக்கம்"
แสดงความคิดเห็น