மனைவிக்கு ஜீவனாம்சம் கொடுக்க கிட்னியை விற்கும் வாலிபர்!!!

பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த பெண் சமீபத்தில் தன் கணவரிடம் இருந்து பிரிய கோர்ட்டில் மனு செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி, கணவன்-மனைவி இருவரும் பிரிந்து வாழலாம். மனைவிக்கு ஒவ்வொரு மாதமும் ஜீவனாம்சமாக 8 ஆயிரம் ரூபாயை கணவன் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார். இதையடுத்து மனைவியிடம் இருந்து விடுதலை பெற்ற அந்த நபர் கடந்த சில மாதங்கள் மட்டுமே மாதம் 8 ஆயிரம் ரூபாய் கொடுத்து வந்தார். அதன் பிறகு அவரால் பணம் புரட்ட இயலவில்லை. 3 ஆயிரத்து 600-க்கு மாத சம்பளத்தில் வேலை பார்க்கும், அந்த நபருக்கு 8 ஆயிரம் ரூபாய் புரட்டி முன்னாள் மனைவிக்கு கொடுப்பது மிகவும் சிரமமாக இருந்தது. வேறு வழி தெரியாத அந்த நபர் கடந்த வாரம் சண்டிகார் ஜுடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டை நாடினார். அவர் தாக்கல் செய்த மனுவில், என்னிடம் இருந்து பிரிந்து சென்ற என் மனைவிக்கு கோர்ட்டு உத்தரவுப்படி பணம் கொடுக்கவில்லை. அவருக்கு ஜீவனாம்சம் கொடுக்க வேண்டுமானால் என் 2 கிட்னிகளில் ஒன்றை 8 ஆயிரம் ரூபாய்க்கு விற்க வேண்டும். சட்டப்பிரிவு 125-வது விதியின் கீழ் எனக்கு இதற்கு அனுமதி தரவேண்டும் என்று கூறினார். இந்த மனு மீதான தீர்ப்பு அடுத்த வாரம் அறிவிக்கப்பட உள்ளது.
0 Response to "மனைவிக்கு ஜீவனாம்சம் கொடுக்க கிட்னியை விற்கும் வாலிபர்!!!"
แสดงความคิดเห็น