பாகிஸ்தானில் தாலிபான் ஆயுததாரிகளுக்கு முடிவு நெருங்கிவருகிறது: பாகிஸ்தான் அமைச்சர்
ஆப்கானிஸ்தான் நாட்டுடனான தமது எல்லையில் பழங்குடியினர் பகுதியில் செயற்படும் தாலிபான்கள் மற்றும் அவர்களுடன் இணைந்து பணியாற்றும் வெளிநாட்டு ஆயுததாரிகளுக்கு முடிவு நெருங்கிவருவதாக பாகிஸ்தான் கூறுகிறது.
சுவாத், வாசிரிஸ்தான் மற்றும் இதர பகுதிகளில் சமீப காலங்களில் இராணுவம் பெற்றுள்ள வெற்றிகள் மூலம் அங்கு செயற்பட்டு வந்த கிளர்ச்சியாளர்களின் முதுகெலும்பு முறிக்கப்பட்டுவிட்டதாக பாகிஸ்தானின் உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக் பிபிசிக்கு வழங்கிய ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
அந்தப் பகுதியில் இருக்கும் கடைசி ஆயுததாரியும் விரட்டி அடிக்கப்படும் வரை தமது இராணுவம் ஓயாது சண்டையிடும் என்றும் அவர் கூறுகிறார்.
எனினும் அதற்கு சில காலம் ஆகும் என்றும் ரஹ்மான் மாலிக் கருத்து வெளியிட்டுள்ளார்.
பாகிஸ்தானின் புலனாய்வு அமைப்புகளின் தகவலின் படி பாகிஸ்தானில் செயற்பட்டு வந்த வெளிநாட்டைச் சேர்ந்த அல் கயீதாவினர் தற்போது பாகிஸ்தானில் இருந்து வெளியேறி சோமாலியாவுக்கு செல்கின்றனர் என்றும் ரஹ்மான் மாலிக் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.
தாலிபான்களுடன் இணைந்து செயற்பட்ட மற்ற வெளிநாட்டவர்கள் தற்போது தமது சொந்த நாடுகளான சுடான் மற்றும் யேமனுக்கு செல்கின்றனர் என்றும் அவர் கூறுகிறார்.

0 Response to "பாகிஸ்தானில் தாலிபான் ஆயுததாரிகளுக்கு முடிவு நெருங்கிவருகிறது: பாகிஸ்தான் அமைச்சர்"
แสดงความคิดเห็น