கிழக்கில் தனிதனியாக மூவின விழாக்கள் நடத்தத் தீர்மானம் : ஹிஸ்புல்லாஹ்
கிழக்கு மாகாண சபை அடுத்த வருடம் முதல் மூவினங்களுக்குமான கலாசார விழாக்களைத் தனித்தனியாகக் கொண்டாடுவதற்குத் தீர்மானித்துள்ளது. மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் நடைபெற்ற மாகாண அமைச்சர்கள் வாரியத்தில் இது தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தகவல் வெளியிட்டுள்ள அமைச்சர்கள் வாரியத்தின் பேச்சாளரான சுகாதார அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ். "ஆடிப்பெருவிழா, முஹர்ரம் , மற்றும் பொசன் ஆகியனவே மூவின மக்களுக்குமான கலாசார விழாக்களாக நடத்த மாகாண சபை தீர்மானித்துள்ளது. இதற்கென மாகாண சபையினால் விசேட நிதியிலிருந்து ரூபா 30 மில்லியன் ஒதுக்குவது என்றும் அமைச்சர்கள் வாரியம் முடிவெடுத்துள்ளது"என்று குறிப்பிட்டார்
0 Response to "கிழக்கில் தனிதனியாக மூவின விழாக்கள் நடத்தத் தீர்மானம் : ஹிஸ்புல்லாஹ்"
แสดงความคิดเห็น