'பா.ஜ.கவின் உட்கட்சிப் பூசலுக்கு அவர்களே தீர்வு காணவேண்டும்'-ஆர்.எஸ்.எஸ் இயக்கம்
பாரதீய ஜனதா கட்சியின் தினசரி விவகாரங்களில் ஆர்.எஸ்.எஸ் இயக்கம் தலையிடாது என்றும் அந்தக் கட்சியில் நிலவும் உட்கட்சிப் பூசலுக்கு அவர்கள்தான் தீர்வு காண வேண்டும் என்றும் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.
பா.ஜ.கவின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஜஸ்வந்த் சிங், முகமது அலி ஜின்னாவைப் பற்றி எழுதிய புத்தகத்தால் எழுந்த சர்ச்சையைத் தொடர்ந்து கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.
அதன்பிறகு அருண்ஷோரி உட்பட கட்சியின் மூத்த தலைவர்கள் சிலர் பா.ஜ.க தலைமைக்கு எதிராக வெளிப்படையாக கடும் விமர்சனங்களைத் தெரிவித்து வருகின்றனர். பா.ஜ.கவை ஆர்.எஸ்.எஸ் தனது பொறுப்பில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் அருண்ஷோரி தெரிவித்துள்ளார்.
இதனால் கட்சிக்குள் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. பாஜகவில் இதுவரை இல்லாத அளவுக்கு பெருமளவில் கட்சித் தலைமைக்கு எதிராக எதிர்ப்புக்குரல் எழுந்துள்ளது.
இந்த நிலையில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் இன்று டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பா.ஜ.கவின் உள்விவகாரங்களில் ஆர்.எஸ்.எஸ் நேரடியாகத் தலையிடாது என்று தெரிவித்தார். ஆனால் தற்போதைய குழப்பங்களில் இருந்து பா.ஜ.க மீண்டு வந்துவிடும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

0 Response to "'பா.ஜ.கவின் உட்கட்சிப் பூசலுக்கு அவர்களே தீர்வு காணவேண்டும்'-ஆர்.எஸ்.எஸ் இயக்கம்"
แสดงความคิดเห็น