டி.வி., பேனை செல்போனால் இயக்கலாம்: நாகர்கோவில் தம்பதியின் புதிய கண்டுபிடிப்பு
தொலைக்காட்சிப்பெட்டி, மின்விசிறி ஆகியவற்றை செல்போனின் மூலம் இயக்கும் முறையை கண்டறிந்த நாகர்கோவில் தம்பதிகளை நோக்கியா நிறுவனம் ஜெர்மனிக்கு அழைத்துள்ளது.
நாகர்கோவில் அருகே தளவாய்புரத்தை சேர்ந்தவர் பினு ஜான்சன். இவர் கம்ப்யூட்டர் நிறுவனம் ஒன்றில் பொறியாளராக உள்ளார். இவரது மனைவி ஐரின்ரோஸ் பினு. நாகர்கோவிலில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் விரிவுரையாளராக உள்ளார். சில மாதத்துக்கு முன்பு, நோக்கியா நிறுவனம் செல்போனை பயன்படுத்தி பொதுமக்களுக்கு என்னென்ன வசதிகளை செய்து கொடுக்கலாம் என்பது குறித்து சர்வதேச அளவிலான போட்டி நடத்தியது. இதில் பங்கேற்ற பினு ஜான்சன், ஐரின் தம்பதி, செல்போன் புளூடூத்தை பயன்படுத்தி டிவி, சீலிங் பேன், ஏசி உள்ளிட்ட பொருட்களை கட்டுப்படுத்தும் வழியை கண்டறிந்து, நோக்கியா நிறுவனத்துக்கு அளித்தனர். இந்த கண்டுபிடிப்பை தேர்வு செய்துள்ள அந்நிறுவனம், ஜெர்மனியில் வரும் 1ம் தேதி நடக்கும் பரிசளிப்பு விழாவில் பங்கேற்க இவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. மேலும், சீனா, சிங்கப்பூர் நாடுகளை சேர்ந்த தலா ஒருவரது கண்டுபிடிப்பும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இவர்களுக்கு முதல் 3 பரிசுகள் கிடைத்துள்ளது. இதில் யாருக்கு முதல் பரிசு என்பது விழாவின் போது தெரியவரும். முதல் பரிசு ரூ.15 லட்சம், 2ம் பரிசு ரூ.7.5 லட்சம், 3ம் பரிசு ரூ.5 லட்சம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஐரின் ரோஸ் கூறுகையில்,‘‘ ஊனமுற்றோர், முதியோர், பார்வை குறைபாடு உடையவர்கள் தங்கள் வீட்டின் ஒட்டு மொத்த இயக்கத்தையும் செல்போன் மூலம் கட்டுப்படுத்தலாம். இதற்காக புளூடூத் வசதி கொண்ட நோக்கியா மொபைல் போனில் ஒரு சாப்ட்வேரை பொருத்தவேண்டும். மேலும், மின் கருவிகளை ‘புளூஹோம்Õ என்று நாங்கள் கண்டுபிடித்துள்ள கருவியுடன் இணைக்க வேண்டும். இதன்மூலம் பேன், டிவி, ஏசி, வாஷிங்மிஷின் உள்ளிட்ட கருவிகளை செல்போன் மூலம் இயக்குவதுடன், வீட்டுக்கு வெளியே ஆள்நடமாட்டத்தை கண்டறிதல், வாசல் திறப்பதை அறிதல் போன்றவற்றையும் செயல்படுத்த முடியும்’’ என்றார்.
0 Response to "டி.வி., பேனை செல்போனால் இயக்கலாம்: நாகர்கோவில் தம்பதியின் புதிய கண்டுபிடிப்பு"
แสดงความคิดเห็น