வவுனியாவிலிருந்து இவ்வாரம் மேலும் 2 ஆயிரத்து ஐநூறு குடும்பங்கள் யாழில் மீள்குடியேற்றப்படவுள்ளனர். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் தொடர் நடவடிக்கை காரணமாக யாழ்ப்பாணத்தை நிரந்தர வதிவிடமாகக்கொண்ட 2 ஆயிரத்து ஐநூறு குடும்பங்களைச் சேர்ந்த 7 ஆயிரத்து 685 பேர் இவ்வாரம் மீளக்குடியமர்த்தப்படவுள்ளனர். வவுனியா நலன்புரி கிராமங்களில் யாழ். மாவட்டத்தை நிரந்தர வதிவிடமாகக் கொண்ட 15 ஆயிரத்து 167 குடும்பங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதில் யாழ். செயலகம் ஊடாக வதிவிடம் அடையாளம் காணப்பட்டு உறுதிப்படுத்தப்பட்டவர்கள் கட்டம் கட்டமாக மீள்குடியேற்றப்பட்டு வருகின்றனர். அந்தவகையில் இவ்வாரம் மேற்கண்ட மீள்குடியேற்றம் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வவுனியா மன்னார் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களை நிரந்தர வதிவிடமாகக்கொண்ட மேலும் 3 ஆயிரத்து 525 பேர் அந்தந்த மாவட்டங்களில் இவ்வாரம் குடியமர்த்தப்படவுள்ளனர். மற்றொருபுறம் வன்னியில் மீள்குடியேற்றம் செய்வதற்கு ஏற்றவகையில் அடிப்படை வசதிகளுடன் 35 கிராமங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Response to "வவுனியாவிலிருந்து இவ்வாரம் மேலும் 2 ஆயிரத்து ஐநூறு குடும்பங்கள் யாழில் மீள்குடியேற்றப்படவுள்ளனர். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை."
แสดงความคิดเห็น