வடக்குக் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த நலன்புரி முகாம்களிலுள்ள மாணவர்களுக்கு 130 மில்லியன் ரூபா செலவில் கற்றல் உபகரணங்கள் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை.
வடக்குக் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த நலன்புரி முகாம்களிலுள்ள 86 ஆயிரம் மாணவர்களுக்குச் சுமார் 130 மில்லியன் ரூபா செலவில் கற்றல் உபகரணங்கள் பெற்றுக் கொடுக்கப்படவுள்ளதாகக் கல்வியமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த் கல்வியமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரை நிகழ்த்தும் போது தெரிவித்துள்ளார். நலன்புரி நிலையங்களில் 70 லட்சம் ரூபா செலவில் நடமாடும் விஞ்ஞான ஆய்வுகூடங்களை அமைப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் வடக்குக் கிழக்கு மாகாணங்களிலுள்ள நலன்புரி முகாம்களில் தற்;காலிகமாகத் தங்கியிருக்கும் கல்விப் பொதுத் தராதர சாதாரண தர மாணவர்களின் நலனைக் கருத்திற் கொண்டு எதிர்வரும் செப்டெம்பர் மாதத்தில் மேலதிக வகுப்புகளை நடாத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள கல்வியமைச்சர் வடக்கில் இடம்பெயர்ந்து நலன்புரி முகாம்களில் வசிக்கும் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்குப் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 5ம் ஆண்டுப் புலமைப் பரிசில் பரீட்சையில் தோற்றிய சுமார் 5700 மாணவர்களுக்குத் தேவையான கருத்தரங்குகள் நடாத்தப்பட்டதுடன் வடக்கில் சேதமடைந்துள்ள 200 பாடசாலைகள் வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் புனரமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள கல்வியமைச்சர் இசுறு வேலைத் திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட 31 பாடசாலைகளுக்கு என 1035 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
0 Response to "வடக்குக் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த நலன்புரி முகாம்களிலுள்ள மாணவர்களுக்கு 130 மில்லியன் ரூபா செலவில் கற்றல் உபகரணங்கள் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை."
แสดงความคิดเห็น