உலகில் அதிகளவு காணாமல் போகும் சம்பவங்கள் இடம்பெறும் நாடுகளில் இலங்கை முன்னணி
உலகில் அதிகளவு காணாமல் போகும் சம்பவங்கள் இடம்பெறும் நாடுகளில் இலங்கை முன்னணி வகிப்பதாக எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. 2000மாம் ஆண்டு முதல் நூற்றுக் கணக்கானோர் இலங்கையில் காணாமல் போயுள்ளதாக தெரியவருவதாக மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.சர்வதேச காணாமல் போனோர் தினத்தையொட்டி வெளியிட்டுள்ள குறிப்பொன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தக் குற்றச் செயல்களை யார் மேற்கொள்கின்றார்கள் என்பதனைவிடவும் நாட்டில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவதனை தடுப்பதே மிகவும் முக்கியமானதென அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.கடத்தல்கள் மற்றும் காணாமல் போதல் சம்பவங்கள் தொடர்பில் முறையான விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. கடத்தப்பட்ட மற்றும் காணாமல் போனவர்களின் வரிசையில் அதிகளவு ஊடகவியலாளர்கள் இருப்பதாகவும் அந்த அமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.
0 Response to "உலகில் அதிகளவு காணாமல் போகும் சம்பவங்கள் இடம்பெறும் நாடுகளில் இலங்கை முன்னணி"
แสดงความคิดเห็น