இலங்கையர்களுக்கு விஸா வழங்கும் போது யுத்த குற்றச் செயல்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்படும் - பிரித்தானியா தெரிவிப்பு
இலங்கையர்களுக்கு விஸா வழங்கப்படும் போது யுத்த குற்றச் செயல்கள் தொடர்பில் பிரித்தானியா கவனம் செலுத்தும் எனத் தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் காலங்களில் பிரித்தானிய விஸா கோரி விண்ணப்பிப்போர் யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பிலும் தகவல்களை வழங்க வேண்டிய நிலை ஏற்படும் என பிரபல சிங்கள ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டிருந்தால் அது தொடர்பாக தகவல்களை அவர்கள் வெளியிட வேண்டும் என சுட்டிக்காட்டப்படுகிறது. இலங்கையின் பாதுகாப்பு தரப்பினருக்கு எதிராக மனித உரிமை மீறல் மற்றும் யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் பரவலான குற்றச் சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இலங்கையைச் சேர்ந்த உயர் அரச அதிகாரிகள் சிலருக்கு அண்மைக்காலமாக பிரித்தானியா மற்றும் கனடா ஆகிய நாடுகள் விஸா வழங்க மறுப்பு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Response to "இலங்கையர்களுக்கு விஸா வழங்கும் போது யுத்த குற்றச் செயல்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்படும் - பிரித்தானியா தெரிவிப்பு"
แสดงความคิดเห็น