இலங்கை மீது போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும்: எரிக் சொல்ஹெய்ம்
லண்டனில் இருந்து ஒளிபரப்பாகும் சேனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட, இலங்கை இராணுவத்தின் படுகொலை காட்சிகள் தொடர்பில் இலங்கை மீது போர்க் குற்ற விசாரணைகளை ஐ.நா. சபை முன்னெடுக்க வேண்டும் என்று நோர்வே வெறியுறவுத்துறை அமைச்சரும், முன்னாள் சமாதான தூதுவருமான எரிக் சொல்ஹெய்ம் வலியுறுத்தியுள்ளார்.
நோர்வேக்கு ஞாயிற்றுக்கிழமை விஜயம் செய்யவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனிடம் இது விஷயம் தொடர்பாக வலியுறுத்தவுள்ளதாக எரிக் சொல்ஹெய்ம் மேலும் தெரிவித்துள்ளார்.
நிர்வாணமாக்கப்பட்டு, கண்கள் கட்டப்பட்ட நிலையில் இலங்கை இராணுவத்தினரால் தமிழ் இளைஞர்கள் கோரமாக படுகொலை செய்யப்பட்ட, சேனல் 4 வெளியிட்டிருந்த காட்சிகள் தொடர்பான செய்தியையும் படங்களையும் நோர்வே ஊடகங்களும் வெளியிட்டிருந்தது.
இந்த காட்சிகள் உண்மையாக இருந்தால் அது ஆச்சரியத்திற்கு உரியதல்ல எனவும் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது,
இறுதி ஆண்டுகளில் வகை தொகையின்றி மக்கள் கொல்லப்பட்டும் காணாமல் போயும் உள்ளனர். இந்தக் கொலைகள் மற்றும் காணாமல் போதல் சம்பவங்கள் மீது எந்தவிதமான சட்ட நடவடிக்கைகளோ, நீதி விசாரணைகளோ நடத்தப்படவில்லை.
இறுதிக்கட்ட போரின்போது வடக்கு பகுதி முழுவதும் தனிமைப்படுத்தப்பட்டிருந்தது. எந்தவொரு உதவி நிறுவனமோ அன்றி சுயாதீன ஊடகவியலாளரோ அப்பகுதிக்கு அனுமதிக்கப்படவில்லை. இதனால் இலங்கை இராணுவத்திற்கு எதிராக எழுந்துள்ள போர்க்குற்றம் தொடர்பான குற்றச்சாட்டுக்களை உறுதி செய்ய முடியவில்லை.
எனினும் இந்தக் காணொளி போன்ற ஆதாரங்கள் இலங்கை மீதான போர்க்குற்ற விசாரணைகளுக்கான கோரிக்கையை வலுப்படுத்துகின்றன எனவும் எரிக் சொல்ஹெய்ம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், இலங்கை ஜனாதிபதியும் அவரது அரசும் பதவிக்கு வந்த கடந்த நான்கு ஆண்டுகளில் மனித உரிமைகளையும், ஜனநாயக நியமங்களையும் புறந்தள்ளி வந்துள்ளதாக குற்றம் சாட்டப்படுகின்றது.
அரசுக்கு எதிரானவர்கள் வெள்ளை வேன் மூலம் கடத்தப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள், தொண்டர் நிறுவனப் பணியாளர்கள் ஆகியோரே இவ்வாறான வெள்ளை வேன் கடத்தலுக்கு அதிகம் ஆளாகுகின்றனர் என்று கூறியுள்ளார்.

0 Response to "இலங்கை மீது போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும்: எரிக் சொல்ஹெய்ம்"
แสดงความคิดเห็น