jkr

பொலிஸ் நிலையத்தில் இருந்து கைதியை பலாத்காரமாக அழைத்துச் சென்ற அமைச்சர்

இரத்தினபுரி பொலிஸ் நிலையத்தில் இருந்து கைதி ஒருவரை, இன்று மாலை தமது குழுவினருடன் சென்ற ஆடைக் கைத்தொழில் அமைச்சர் மஹிந்த ரட்ணதிலக பலாத்காரமாக அழைத்துச் சென்றதாகப் பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது. பொலிஸ் நிலையத்திற்கு அருகில் பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை மோட்டார் சைக்கிளில் மோதிய குற்றச்சாட்டின் பேரில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டார். எனினும் அமைச்சர் தமது குழுவினருடன் வந்து குறித்த நபரை பலாத்காரமாக பொலிஸ் நிலையத்தில் இருந்து அழைத்து சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக அமைச்சர் மீது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "பொலிஸ் நிலையத்தில் இருந்து கைதியை பலாத்காரமாக அழைத்துச் சென்ற அமைச்சர்"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates