பிரி. நாடாளுமன்ற உறுப்பினர் லியாம் பொக்ஸ் இலங்கை விஜயம்
பிரித்தானிய கன்சவேட்டிவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், நிழல் வெளிவிவகார அமைச்சருமான லியாம் பொக்ஸ் இன்று (27) இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார். இன்று பகல் 12.50க்கு அவர் கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவரே முன்னர் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கும், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவிற்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையை ஏற்படுத்த காரணமாக இருந்தவர்.
பின்னர், அதேபோன்ற உடன்படிக்கையை ரணில் விக்ரமசிங்கவுக்கும், தற்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிற்கும் இடையில் ஏற்படுத்துவதற்கு கடந்த வருடம் அவர் முயற்சிகளை மேற்கொண்டிருந்த போதும் அது பலனளிக்கவில்லை.
அமைச்சர் மிலிந்த மொரகொட பிரித்தானியாவுக்கு சென்று திரும்பியதன் பின்னர், இவர் அரசாங்கத்தின் அழைப்பின் பேரிலேயே இலங்கைக்கு வந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும் உண்மைக் காரணம் எவையும் வெளியாகவில்லை.
இலங்கை அரசாங்கம் தனித்து இயங்குவதில் பல சவால்களை எதிர்நோக்கியுள்ள நிலையில் எதிர்கட்சிகளையும் இணைத்துக் கொண்டு ஆட்சியை கொண்டு செல்வதற்கு முயற்சிக்கும் நிலையிலேயே லியாம் பொக்ஸ் இலங்கை வந்துள்ளதாக கருத்துக்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

0 Response to "பிரி. நாடாளுமன்ற உறுப்பினர் லியாம் பொக்ஸ் இலங்கை விஜயம்"
แสดงความคิดเห็น