jkr

யுத்தத்தில் ஈடுபடாதவர்கள் தடுப்பு முகாமிலிருந்து வெளியேற அனுமதிக்க வேண்டும் : உச்ச நீதிமன்றம்


யுத்தத்தில் ஈடுபடாதவர்களும், தடுப்பு முகாமுக்கு வெளியே தங்குவதற்கு இடமுள்ளவர்களும் அங்கிருந்து வெளியேற அனுமதிக்கப்பட வேண்டும் என சிறிலங்கா உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து வவுனியா தடுப்பு முகாமில் வைக்கப்பட்டுள்ள 5 பேர் கொண்ட குடும்பம் சார்பாக அவர்களின் உறவினர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர். தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு யாழ்ப்பாணம், கொழும்பு ஆகிய இடங்களில் 3 வீடுகள் உள்ளன, எனவே அவர்கள் தடுப்பு முகாமில் தங்க வேண்டிய அவசியமில்லை, அவர்களை விடுவிக்க வேண்டும் என்று கோரியே அந்த வழக்கு தாக்கல் செய்யபப்ட்டது.
இந்த வழக்கின் விசாரணையைக் கவனித்த உச்ச நீதினம்ற நீதிபதி, 13 வயதான சோபிகா சுரேந்திரநாதனும், பெற்றோரும் தங்குவதற்கு இடம் இருக்கும் போதும், இவர்களைக் கவனிப்பதற்கு உறவினர்கள் தயாராக இருக்கும் போதும் மேற்கொண்டு தடுப்பு முகாமில் தடுத்து வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை எனக் கூறியுள்ளார்.
இதேவேளை சிறிலங்காயிலுள்ள மக்கள் அனைவரையும்போல தடுப்பு முகாமிலுள்ளவர்களுக்கும் சம உரிமை, சம பாதுகாப்பு கிடைக்க வேண்டும் என்ற அடிப்படை உரிமை பற்றியும், சிறிலங்கா நாட்டுக்குள் சுதந்திரமாக நடமாட அனுமதிக்க வேண்டும் என்ற உரிமை பற்றியும் வாதாட நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. இது நவம்பர் 12 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "யுத்தத்தில் ஈடுபடாதவர்கள் தடுப்பு முகாமிலிருந்து வெளியேற அனுமதிக்க வேண்டும் : உச்ச நீதிமன்றம்"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates