அம்பாறையில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் தடுக்கப்பட்டது

அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்றில் தமிழ் அரசியல் கட்சியொன்றின் காரியாலயம் திறப்பதற்கு ஒரு குழுவினர் இன்று காலை மேற் கொண்ட எதிர்ப்பு நடவடிக்கை காரணமாக ஓரிரு மணித்தியாலங்கள் பதட்ட நிலை காணப்பட்டது. இருப்பினும் பொலிசார் மேற்கொண்ட உடனடி நடவடிக்கை காரணமாக நிலமை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது.தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் அம்பாறை மாவட்ட காரியாலயம் அடுத்த சில நாட்களில் அக்கரைபற்றில் திறப்பதற்குரிய ஏற்பாடுகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இக்காரியாலயம் அமையவிருக்கும் கட்டிடத்திற்கு முன்பாக இன்று காலை கூடிய ஒரு குழுவினர் குறித்த அரசியல் கட்சிக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.இக்காரியாலயத்தைத் திறக்க பொலிசார் அனுமதிக்கக் கூடாது என்ற கோரிக்கையையும் அவர்கள் முன்வைத்ததாகவும் கூறப்படுகின்றது.இந்த எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் காரியாலயத்திற்குள் நுழைய முற்பட்ட வேளை, பொலிசாரால் ஆகாய வேட்டுக்கள் தீர்த்து அவர்களின் முயற்சியைத் தடுத்து நிறுத்தினர். எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் காரியாலயத்தை நோக்கிக் கற்களை வீசியதால் 3 ஜன்னல் கண்ணாடிகள் சேதமடைந்தன. கடந்த 21ஆம் திகதி இக்காரியாலய கட்டிடத்திற்குள் நுழைந்த ஒரு குழுவினர் பொது மக்கள் தங்குமிடத்திற்குத் தீ வைத்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
0 Response to "அம்பாறையில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் தடுக்கப்பட்டது"
แสดงความคิดเห็น