இந்தியாவுடன் இணைந்து, இடம்பெயர்ந்த மக்களை இலங்கை மீளக்குடியமர்த்தும்: இந்தியாவுக்கான புதிய உயர்ஸ்தானிகர்
அதிகாலை.03.33) இந்தியாவுடன் இணைந்து, இடம்பெயர்ந்த மக்களின் மீள குடியமர்த்தல் நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் மேற்கொள்ளும் என புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இலங்கையின் இந்திய உயர்ஸ்தானிகர் ரொமேஸ் ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
ஐ ஏ என் எஸ் செய்தி சேவைக்கு அவர் வழங்கிய சிறப்பு செவ்வியின் போதே, அவர் இதனை தெரிவித்துள்ளார்.
மக்களை மீள குடியமர்த்துவதற்காக, அரசாங்கம் தற்போது துரித கதியில் நிலக்கண்ணி வெடிகளை அகற்றும் பணிகளை மேற்கொண்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இரண்டு நாடுகளுக்கும் இடையில் முன்பிருந்த சிறந்த உறவுகள் பேணப்பட்டுள்ள நிலையில், இந்தியாவின் ஒத்துழைப்புடன், இலங்கை அரசாங்கத்தின் இலக்குகளை அடைய கூடியதாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.
இதேவேளை வடக்கில் அண்மையில் மீள் குடியேற்றம் செய்யப்பட்ட மக்களுக்கு, இந்திய அரசாங்கம் கூரைத்தகடுகள் உள்ளிட்ட அனர்த்த பாதுகாப்பு பொருட்களை வழங்கியுள்ளதாக பி டி ஐ செய்தி சேவை தெரிவித்துள்ளது.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மீள குடியமர்த்தப்பட்ட குடும்பங்களுக்கு, தலா 12 கூரைத்தகடுகளும், விவசாய பொருட்களும் வழங்கப்பட்டுள்ளன.
அத்துடன் அவர்களுக்காக, 11 ஆயிரம் ரூபா மானியத்துடன், மீன்பிடி உபகரணங்களும் வழங்கப்பட்டுள்ளதாக பி டி ஐ செய்தி சேவை குறிப்பிட்டுள்ளது.
மீள் குடியமர்த்தப்பட்ட மக்களுக்கான ஆரம்ப வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் பொருட்டே இந்தியா இந்த உதவிகளை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Response to "இந்தியாவுடன் இணைந்து, இடம்பெயர்ந்த மக்களை இலங்கை மீளக்குடியமர்த்தும்: இந்தியாவுக்கான புதிய உயர்ஸ்தானிகர்"
แสดงความคิดเห็น