நாகபட்டினம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை திருவிழா நாளை ஆரம்பம்
வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய ஆண்டு திருவிழா நாளை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகின்றது. விழா தொடர்ந்து எதிர்வரும் 8 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இது குறித்து பேராலய தலைவர் மைக்கேல் அடிகள், பங்குத்தந்தைகள் ஆரோக்கியதாஸ், தார்சிஸ்ராஜ், டி.எஸ்.முத்துசாமி, உதவி பங்குத்தந்தைகள் ஜோன்சன் எட்வர்ட், தாஸ் ஆகியோர் நிருபர்களைச் சந்தித்தபோது, நாளை மாலை 6 மணிக்கு புனித ஆரோக்கிய அன்னையின் உருவம் பொறித்த கொடி பேராலய முகப்பில் இருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கடற்கரை வீதி, ஆரியநாட்டுத்தெரு, வழியாக சென்று பேராலயத்தை அடையும். தொடர்ந்து பேராலயத்தில் தஞ்சை ஆயர் எம். தேவதாஸ் அம்புரோஸ் அடிகளார் கொடியை புனிதம் செய்து கொடியேற்றுகிறார். கொடியேற்றப்பட்டு 10 நிமிடங்களுக்குப் பின் மாதா மன்றாட்டு, நற்கருணை ஆசிர், தமிழில் திருப்பலி ஆகியவை நடைபெறும். எதிர்வரும் 7ஆம் திகதி பெரிய தேர் பவனி நடைபெறும். 8ஆம் திகதி அன்னையின் பிறந்தநாள் விழாவும் அன்னையின் கொடி இறக்கப்படுதலும் நடைபெறும் என்றார்கள்.
0 Response to "நாகபட்டினம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை திருவிழா நாளை ஆரம்பம்"
แสดงความคิดเห็น