அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் முயற்சி காரணமாக தென்மராட்சியில் பெரும் போக விவசாய நடவடிக்கைகள் வைபவரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டன.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் முயற்சியின் காரணமாக தென்மராட்சியில் பாதுகாப்புப் படையினரால் அண்மையில் விடுவிக்கப்பட்ட மறவன்புலோ தனங்கிளப்பு ஆகிய பிரதேசங்களிலுள்ள 1100 ஏக்கர் விளை நிலங்களில் பெரும் போகத்திற்கான விவசாய நடவடிக்கைகள் வைபவரீதியாக நேற்றையதினம் ஆரம்பித்து வைக்கப்பட்டன. இந்நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுடன் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பஷில் ராஜபக்ஷ வடமாகாண ஆளுனர் ஜி.ஏ.சந்திரசிறி இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் பீற்றர் ஹெய்ஸ் ஆகியோர் இணைந்து ஏர்பூட்டும் வைபவத்தினை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்ததுடன் நலிந்த விவசாயிகளுக்குக் காசோலைகளையும் உள்ளீடுகளையும் வழங்கினார்கள். மேலும் இந்நிகழ்வில் யாழ்.அரசாங்க அதிபர் கே.கணேஷ் கமநல சேவைத் திணைக்கள உதவி ஆணையாளர் பற்றிக் ரஞ்சன் தென்மராட்சிப் பிரதேச செயலாளர் சிறினிவாசன் மற்றும் கமநலத் திணைக்கள அதிகாரிகளும் அப்பிரதேச விவசாயிகளும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சித் தொண்டர்களும் பெருமளவில் கலந்துகொண்டனர்.
0 Response to "அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் முயற்சி காரணமாக தென்மராட்சியில் பெரும் போக விவசாய நடவடிக்கைகள் வைபவரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டன."
แสดงความคิดเห็น