jkr

கொடூர இளைஞனின் வெறித்தனமான செயல்


புற்றுநோய் பாதித்த பெண்ணை நடுரோட்டில் அடித்து உதைத்த பிறகு, அவருடைய கழுத்தை பிடித்து சாலையில் 60 அடி தூரம் தரதர வென்று காரில் இழுத்து சென்ற கொடூர இளைஞனை போலீசார் கைது செய்தனர்.டெல்லியை சேர்ந்த பெண் கிரண் ஆனந்த் (58). புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இவர் தனது மகள் அனீஷாவுடன் பாஸ்சிம் விகார் பகுதியில் ஸ்கூட்டரில் சென்றார். ஸ்கூட்டரை அனீஷா ஓட்டினார்.
ஒரு சிக்னலில் சிவப்பு விளக்கு எரிந்ததும் ஸ்கூட்டர் நிறுத்தப்பட்டது. அப்போது மின்னல் வேகத்தில் வந்த கார் ஒன்று, ஸ்கூட்டரை உரசுவதுபோல் வந்து நின்றது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த கிரண், “இப்படி வேகமாக வந்தால் விபத்து நடக்காதா? நிதானமாக வந்தால் என்ன?” என்று காரை ஓட்டி வந்த இளைஞரிடம் அமைதியாக சொன்னார்.
ஆனால், இளைஞருக்கு அது ஆத்திரத்தை ஏற்படுத்தியது. காரில் இருந்து ஆவேசமாக இறங்கிய அவர், கிரணை ஸ்கூட்டரில் இருந்து கீழே இழுத்து போட்டு அடித்து உதைத்தார். பிறகு காரில் ஏறிக் கொண்டு, கிரணின் கழுத்தை ஒரு கையால் பிடித்தபடி காரை 60 அடி தூரம் ஓட்டி தரதரவென இழுத்துச் சென்றார். பிறகு கிரணை தள்ளி விட்டு காரில் பறந்து விட்டார். இந்த சம்பவத்தில் கிரணுக்கு தலையிலும் முழங்கையிலும் காயங்கள் ஏற்பட்டன. உடனடியாக மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார். சம்பவத்தை பார்த்த சிலர், கார் எண்ணை குறித்து போலீசிடம் கொடுத்தனர். அதன் அடிப்படையில் விசாரித்த போலீசார், குர்கானை சேர்ந்த ஆஷ¨ என்ற 22 வயது இளைஞனை கைது செய்தனர். காரையும் பறிமுதல் செய்தனர்.
கடும் நடவடிக்கை எடுக்க அன்சாரி வலியுறுத்தல் :
பெண்ணை இளைஞர் அடித்து உதைத்து காரில் இழுத்துச் சென்ற சம்பவம் பற்றி கேள்விப்பட்ட துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி, டெல்லியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் அது பற்றி குறிப்பிட்டார். “இது போன்ற சம்பவங்கள் மனித நேயமற்றவை; கொடூரமானவை. இப்படிப்பட்ட சம்பவங்கள் இனிமேல் நடப்பதை தடுக்க, குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அவர் வலியுறுத்தினார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "கொடூர இளைஞனின் வெறித்தனமான செயல்"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates