வவுனியா அரச விடுதிகள் மீது கல்வீச்சு நடத்தியவர்களைக் கைது செய்வதற்குப் பொலிசார் தீவிர நடவடிக்கை
வவுனியா உள்சுற்று வீதியில் அமைந்துள்ள அரச திணைக்கள அதிகாரிகளின் விடுதிகள் மீது இரவு நேரத்தி்ல் கல்வீச்சு நடத்தியவர்களைக் கைது செய்வதற்குப் பொலிசார் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
நேற்று புதன்கிழமை இரவு 11.16 மணியளவில் இந்தக் கல்வீச்சு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக வவுனியா பொலிசாரிடம் முறையிடப்பட்டிருக்கின்றது.
வவுனியா மாவட்டத்தின் அரச உத்தியோகத்தர்கள் தங்குவதற்கான அரச விடுதிகள் அமைந்துள்ள உள்சுற்று வீதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சர்வதேச தொண்டு நிறுவனத்தின் பெயர்ப்பலகை, கச்சேரி, நீதிமன்றம் உட்பட அரச திணைக்கள அதிகாரிகள் வசிக்கும் வீடுகளை இலக்கு வைத்தே இந்த கல்வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக வவுனியா பொலிசாரிடம் முறையிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சம்பவம் பற்றிக் கேள்விப்பட்டதும், சில நிமிடங்களிலேயே அவ்விடத்திற்குச் சென்ற பொலிசார் அந்தப் பகுதியைச் சுற்றி வளைத்து தேடுதல் நடத்தினர். எனினும், கல்வீச்சு நடத்தியவர்கள் அங்கிருந்து தப்பியோடி விட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இது குறித்து மேலிடத்தி்ன் உத்தரவுக்கமைய வவுனியா பொலிசார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

0 Response to "வவுனியா அரச விடுதிகள் மீது கல்வீச்சு நடத்தியவர்களைக் கைது செய்வதற்குப் பொலிசார் தீவிர நடவடிக்கை"
แสดงความคิดเห็น