ராகுல் காந்தியுடன் விஜய் சந்திப்பு: காங்கிரஸில் இணைகிறார்?
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ராகுல் காந்தியின் அழைப்பின் பேரில், டெல்லி சென்று அவரைச் சந்தித்துப் பேசினார் நடிகர் விஜய்.
இதனால் அவர் காங்கிரசில் இணையக் கூடும் என்று பேச்சு எழுந்துள்ளது.
சில தினங்களுக்கு முன் புதுச்சேரியில் முதல்வர் வைத்தியலிங்கம் முன்னிலையில் தனது மக்கள் இயக்கம் சார்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார் விஜய். அந்த நிகழ்ச்சியில் 50,000 ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டிருந்தனர்.
அரசியலுக்கு வருவதே தனது நோக்கம் என்றும் ஆனால் நிதானமாகவே வர விரும்புவதாகவும் அக்கூட்டத்தில் பேசும்போது விஜய் தெரிவித்தார்.
மேலும் நான் அரசியலுக்கு வரலாமா? என கூடியிருந்தவர்களைப் பார்த்துக் கேட்க, அவர்களும் வாங்க என்று கோஷமெழுப்பினர். உடனே விஜய், ‘கட்டாயம் வருவேன்’, என்று டிபிகல் தமிழ் அரசியல்வாதி ஸ்டைலில் கூறினார்.
ராகுலின் அழைப்பு…
இந்த நிலையில் அவருக்கு ராகுல் காந்தியிடமிருந்து அழைப்பு வந்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை டெல்லி சென்ற விஜய், ராகுல் காந்தியுடன் இரண்டு மணிநேரம் பேச்சு நடத்தியதாக இப்போது தெரியவந்துள்ளது.
இது குறித்து காங்கிரஸ் தரப்பில் கூறும்போது “தமிழகத்தில் காங்கிரசை பலப்படுத்த வேண்டும் என்பதில் ராகுல்காந்தி தீவிரமாக இருக்கிறார். விஜய்யுடன் பேசியது அதில் ஒரு முயற்சி. விரைவில் நல்ல அறிவிப்பு வரும்” என்றனர்.
இந்தச் சந்திப்புக்கு ஏற்பாடு செய்ததே புதுவை முதல்வர் தான் என்றும் கூறப்படுகிறது.
விஜய்க்கு தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் பொறுப்பைத் தர ராகுல் ஆர்வம் காட்டியதாகக் கூறப்படுகிறது.
இமெயில் - போனில் பேசிக் கொள்வார்கள்…
இது குறித்து விஜய்யின் தந்தை- இயக்குனர் சந்திரசேகர் கூறுகையில், நீண்ட நாட்களாகவே விஜய்யும் ராகுலும் இ-மெயிலில் தொடர்பில் உள்ளனர். இருவரும் தொலைபேசியில் பேசிக் கொள்வதும் வழக்கம். இப்போது நடந்தது மரியாதை நிமித்தமான சந்திப்பு தான் என்றார்.
ஒரு பக்கம் காங்கிரசுடன் கூட்டணிக்குத் தயார் என் தேமுதிக தலைவரான நடிகர் விஜய்காந்தின் கூறி வரும் நிலையில், அடுத்த முக்கிய நடிகரும் காங்கிரஸ் பக்கம் சாய ஆரம்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் திமுக கூட்டணியில் ‘கோயிங் ஸ்டெடி’ என்பதைப் போல காட்டிக் கொண்டே, மறுபக்கம் விஜய், விஜய்காந்துடன் அரசியல் பேச ஆரம்பித்துள்ளது காங்கிரஸ் கட்சி

0 Response to "ராகுல் காந்தியுடன் விஜய் சந்திப்பு: காங்கிரஸில் இணைகிறார்?"
แสดงความคิดเห็น