ஜனாதிபதி தேர்தலில் 1 .75 லட்சம் மக்களின் வாக்குகளை பறிப்பதற்காகவே மீள்குடியேற்றத்தை அரசு தாமதிக்கிறது: மனோ கணேசன்
அரசாங்கம் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல்களில் வாக்களிக்கவுள்ள முகாம்களிலுள்ள 175,000 மக்களின் வாக்குகளை வஞ்சகமாக பறிப்பதற்காகவே அவர்களை தொடர்ந்தும் அங்கு தடுத்து வைத்துள்ளதாக ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இடம்பெயர்ந்த மக்களை மீள குடியமர்த்துவதில் ஏற்படுத்தப்படுகின்ற தாமதங்களுக்கு அரசாங்கம் முன்வைத்து வருகின்ற காரணங்களை தாம் நிராகரிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (26) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பு ஒன்றின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது:-
வடக்கில் நிலக்கண்ணி வெடிகள் அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாலும், இடம்பெயர்ந்தோர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களின் மத்தியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் மறைந்துள்ளதாகவும் கூறப்படும் அரசாங்கத்தின் கூற்று பொய்யானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கில் முள்ளிவாய்க்கால் வரையில் சென்ற இராணுவத்தினர், தரைவழியாகவே சென்று தமிழீழ விடுதலைப் புலிகளை வெற்றி கொண்டனர்.
இந்த நிலையில் அவர்கள் அங்கு செல்லும் போது வடக்கு நிலப்பகுதியின் அங்குலங்கள் அனைத்தும் சுத்தப்படுத்தப்பட்ட பின்னரே அங்கு சென்றிருப்பர் என குறிப்பிட்டுள்ளார்.
எனவே, தற்போது வடக்கில் பாரிய அளவிலான நிலக்கண்ணி வெடிகள் இல்லை என தெரிவித்த அவர், அரசாங்கம் சொல்வது போல் அன்றி, வெறும் பத்து சதவீதமான நிலப்பரப்பிலேயே இந்த கண்ணி வெடிகள் காணப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை முகாம்களில் இருந்த பயிற்றப்பட்ட விடுதலைப் புலி போராளிகள் அனைவரும் அரசாங்கத்தினால் அடையாளம் காணப்பட்டு புனர்வாழ்வு அளிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களை அடையாளம் காணும் பணிகள் தற்போது முழுமையாக நிறைவடைந்துள்ள நிலையில், தொடர்ந்தும் இதனை காரணம் காட்டி அரசாங்கம், மக்களை தடுத்து வைத்திருக்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், அரசாங்கம் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல்களில் வாக்களிக்கவுள்ள அங்குள்ள 175,000 மக்களின் வாக்குகளை வஞ்சகமாக பறிப்பதற்காகவே அவர்களை தொடர்ந்தும் அங்கு தடுத்துவைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

0 Response to "ஜனாதிபதி தேர்தலில் 1 .75 லட்சம் மக்களின் வாக்குகளை பறிப்பதற்காகவே மீள்குடியேற்றத்தை அரசு தாமதிக்கிறது: மனோ கணேசன்"
แสดงความคิดเห็น