பெண்கள் அர்ச்சகர்கள் ஆனால் ஆலயம் தீட்டாகுமா?
பெண்களால் அர்ச்சனை செய் யப்படாதவர் யார்? அதீத அன்புக்கு ஆட்பட்டவர்களுக்கு அர்ச்சனையும் ஆசைக்கு உரியது. இந்த ஆசை ஆண்ட வனுக்கும் இருக்காதா என்ன? ஆண்டவனை காதலித்த ஆண்டாள் வகை பக்தியும் ஒருவகை இலக்கியம்தானே? ஆனால், பெண்கள் அர்ச்சனை செய்வ தற்கு எதிர்ப்பு இருக்கத்தான் செய்கிறது. தமிழக அரசு சில மாதங்களுக்கு முன் “தமிழக கோவில்களில் பெண்களும் இனி அர்ச்சகர் ஆகலாம்” என அறிவித்தது. இதனை தமிழகத்தின் பழுத்த ஆர்எஸ்எஸ் பாசிஸ்ட் ராமகோபாலன் போன்றவர்கள் கடு மையாக எதிர்த்துள்ளனர். “கோயிலின் புனி தம் போய்விடும்” என்பன போன்ற காரணங் களைக் கற்பித்துள்ளனர். நேரடியாக எதிர்க்க தைரியம் இல்லாத சிலர், “மதச் சார்பற்ற அரசுக்கு கோயில் நடைமுறைகளில் தலையிட உரிமை கிடையாது. இந்துமத பெரியோர்கள் இதையெல்லாம் முடிவு செய்வார்கள். அரசு முடிவு செய்யக்கூடாது,” என நரிமொழி பேசுகின்றனர். “அதெல்லாம் அடுத்தபடியாக பேசிக் கொள்ளலாம். பெண்கள் கோயில் குருக்கள் ஆகலாமா? என்பதில் உனது கருத்தை சொல்லப்பா” என்று நெருக்கினால். “நாங்கள் எதிர்க்கவில்லையே” என்கிறார்கள். “நீங்கஆதரிக்கவில்லையே ஐயா, நமது தாய், சகோதரி, மனைவி, மகளுக்கு கிடைத்துள்ள புதிய வெற்றி இது என்று ஒரு கொண்டாட்ட உணர்வு வர வேண்டுமே ஐயா. அந்த சந் தோஷத்தையே காணோமே!” என்று கேட் டால், “சமய நடைமுறைகள் எல்லாவற்றையும் சமயப் பெரியோர்களே முடிவு செய்ய விட்டு விட வேண்டும்” என்று கொஞ்சம் குரலை உயர்த்துகிறார்கள். “ஏம்பா!புருஷமேதயாகம் எனும் பெயரில் மனுஷனை வெட்டி நெருப்பில் போடும் இந்து மத நடைமுறை பழைய காலத்தில் இருந்தது. கொலை செய்தவனுடைய சாதியை பொறுத்து தண்டனை வழங்க வேண்டும் எனும் மதநடைமுறையும் முன்பு இருந்தது. இப்பவும் அதே மாதிரிதான் இருக்கணும்னு இந்த மத பெரியவர்கள் எல்லாம் முடிவு செய்தால் மத்தவங்க எப்படிப்பா வேடிக்கை பார்க்க முடியும்,” என்று கேட்டால் முறைக் கிறார்கள். “பெண்கள் கோயில் பூசாரிகளாக கிராமப் பகுதிகளில் ஏற்கெனவே இருக்கிறார்கள். இது ஒன்றும் புதிது இல்லை,” என்றும் கூடவாதம் செய்து பார்க்கிறார்கள். “சரி! ஏற்கெனவே இருக்கிறதே! அப்பறம் ஏன் இவற்றில் அரசு தலையிடக் கூடாது” என் கிறீர்கள் என்று கேட்டால் மவுனமே பதில். “ஆமாப்பா! பெண்கள் கோயில் குருக் களாக ஆனால் கோயிலுக்குத் தீட்டு” என்று சிலர் ஆத்திரத்தில் வெடிக்கின்றனர். வீட்டுக்கு “தூரமான” நாட்களில் பெண் களிடமிருந்து ஏகப்பட்ட பாக்டீரியாக்கள் வெளியாகி கெட்டது செய்கின்றன என்று “தீட்டு” தத்துவத்திற்கு ஆதரவாக அறிவியல் சாயம் பூசவும் சிலர் முயல்கின்றனர். தாய்க்கும், குழந்தைக்குமான இணைப்பாக உள்ள தொப்புள் கொடியை பத்திரப்படுத்தி அதில் இருக்கும் “ஸ்டெம் செல்”லை பயன் படுத்தி மனித உறுப்புகளை ஆய்வகத்தில் வளர்க்கக் கூடிய புதிய அறிவியலை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ள காலம் இது. பெண்களுக்கு வெளியாகும் மாதாந்திர உயிர்க் குழம்பிலும் இத்தகைய வீரியம் உள்ள செல்கள் உள்ளன. இதனை சேகரித்து மருத்துவ சோதனை களுக்கு பயன்படுத்தலாம். ரத்த வங்கியைப் போல “உயிர்க் குழம்பு வங்கியையும்” அமைக்க வேண்டி வரும் என மருத்துவ விஞ்ஞானிகள் பேசுகிற காலம் இது. “தீட்டு” “தீட்டு” என்று நீட்டி முழக்கு பவர்கள் பழைய வரலாறு மறந்தவர்கள். ஒரு குழந்தைக்கான கரு வளரத் தேவையான பாதுகாப்புப் படலத்தை மாதாமாதம் ஒரு பெண்ணின் கருப்பை நெய்கிறது. அந்த மாதத்தில் கரு உருவாகும் வாய்ப்பு இல்லாமல் போனால் அந்தப் படலம் கலைந்து உயிர்க் குழம்பாய் வெளியாகிறது.இன்று இந்த அறிவியல் உண்மையைத் தெரிந்து கொள்ள ஏராளமான வாய்ப்புகள் இருந்தாலும் தெரிந்து கொள்ள மாட்டேன் என்று பிடிவாதத்துடன் பலர் திரிகின்றனர். இனத்தின் தலைவியாகவும் மதகுருவாக வும் தாயே பழங்காலத்தில் இருந்தார். அப் போதைய மக்களுக்கு தாயின் வெளிப்பாடு எல்லாமே புனிதமாக இருந்தது. (இதுவும் மூடநம்பிக்கைதான் என்றாலும் புரிந்து கொள்ளக்கூடியது. மன்னிக்கக் கூடியது.) உயிர் விளையும் தாயின் உடலில் இருந்து வெளி யாகும் உயிர்க்குழம்பு பயிர் விளைச்சலை வேண்டி நடத்தும் மதச்சடங்கில் புனிதப் பொருளாகியது. குங்குமம் ஏன் சிவப்பாய் இருக்கிறது? பழங்கால மக்களின் நெற்றியில் வைக்கப்பட்ட உயிர்க் குழம்புதான் இன்றைய குங்குமத்தின் கொள்ளுப்பாட்டி. குங்குமத்தை பிரதான மாகக் கொண்டு செய்யப்படுகிற மதச் சடங்கு கள் எல்லாம் பழங்காலத்தில் தாயின் “புனித ரத்தத்தால்” செய்யப்பட்டவையே! சமூகத்தின் தலைமையையும், மதத்தின் தலைமையையும் ஆண் கைப்பற்றிக்கொண்ட போது, புனிதமாக உயர்த்திப் பிடிக்கப்பட்ட பெண்ணின் வெளிப்பாடுகளையெல்லாம் இழிவுபடுத்த தொடங்கினான். இன்றைய தீட்டு தத்துவத்தின் ஆணிவேர் அதுவாகத்தான் இருக்க முடியும். மதகுருக்கள் பதவியை பெண்களிட மிருந்துதான் ஆண்கள் பறித்துக் கொண்டார் கள். சங்கராச்சாரிகளின் காவியுடை உண்மை யில் பெண் உடைதான். இந்தியா மட்டுமல்ல, ஐரோப்பா முழுவதும் ஆண் ஆதிக்கம் சமயத்துறையில் தலைவிரித்து ஆடியபோது பெண்கள் சூனியக்காரிகள் என பழிசுமத்தப் பட்டு கொல்லப்பட்டனர். பெண்களிடமிருந்து பறித்துக் கொள்ளப் பட்ட சமயகுரு பதவி பெண்களிடம் திரும்பி வந்து கொண்டிருப்பது என்பது உலகம் தழுவிய நிகழ்ச்சி. போப் ஆண்டவர் பெண் களை மதகுருக்களாக ஆக்க முடியாது என்று ஓங்கி ஓங்கி தலையை ஆட்டிக் கொண்டி ருந்தாலும் அங்கும் இங்குமாக கிறிஸ்துவ மதத்திலும் பெண்கள் மதகுருக்களாக மாறும் நிகழ்ச்சி நடந்து கொண்டுதான் இருக்கிறது. 1853ல் அன்டோனைட் பிரௌன் எனும் பெண் போராடி மதகுரு ஆனார். அந்த போராட்டம் இன்றும் தொடர்கிறது. புத்தமதத்தில் துறவிகளாக ஆண்கள், பெண்கள் இருவரும் தான் இருந்தனர். புத்தரை கடவுளாக ஆக்கிய ‘தேரவாத’ புத்த மதம் தோன்றிய பிறகு புத்தமதமும் ஆணாதிக் கமாகிவிட்டது. ஆனால் சீனாவில் புத்த கோயில்களில் குருக்களாக பெண்கள் உள் ளனர். பெண்கள் மட்டுமே உள்ள ஒரு பிரார்த் தனை கூட்டத்தில் மதகுருவாக ஒரு பெண் இருக்கலாம் என சில இஸ்லாமியப் பிரிவுகள் சொல்கின்றன. அதையும் மறுக்கும் பழமை வாதிகளும் உள்ளனர். அங்கும் போராட்டம் தொடர்கிறது. பூமியைப் பற்றிய உண்மைகளைச் சொன்ன கலிலியோவையும், மனிதனின் பரிணாம வளர்ச்சியின் தத்துவத்தை கண்டு பிடித்த டார்வினையும் கிறித்துவ சமயம் அவ மானப்படுத்தியது. இன்று போப் ஆண்ட வர்கள் அதற்காக வருந்தி பாவமன்னிப்பு கேட்டுக் கொண்டு இருக்கிறார்கள். இதே போல, இந்துமதமும் இந்து மத பெரியவர்கள் என்று தங்களை சொல்லிக் கொள்பவர்களும், இந்துமதக் கருத்துக்களால் இழிவுபடுத்தப்பட்டு வருகிற பெண்களிடமும், தலித்துகளிடமும் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும். பெண்கள், தலித்துகளின் சமவாழ் வுக்கு உழைக்கவும் முன்வரவேண்டும். பெண்கள் கோயில் குருக்களாக மாறுவது என்பது கடவுள் நம்பிக்கையோடு சம்மந்தப் பட்ட வெறும் மதப்பிரச்சனை மட்டும் அல்ல. காலம் காலமாக அடிமைப்படுத்தப்பட்டிருக்கும் பெண்களுக்கு எல்லாத் துறைகளிலும் சமவாய்ப்பு கிடைக்கச் செய்வது என்பது நாக ரிக சமுதாயத்தின் ஜனநாயகத் தேவை. சாதி, மத, அரசியல், ஆண் பெண் வித்தியாசம் கடந்து ஆதரிக்க வேண்டியது இன்றைய கடமை.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
(திருத்தங்களிடையிலான வேறுபாடு)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
(திருத்தங்களிடையிலான வேறுபாடு)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
0 Response to "பெண்கள் அர்ச்சகர்கள் ஆனால் ஆலயம் தீட்டாகுமா?"
แสดงความคิดเห็น