எலிக்காய்ச்சலால் 8 மாதங்களில் 80 பேர் பலி:2100 பேருக்குப் பீடிப்பு
எலிக்காயச்சல காரணமாக இவ்வருட ஜனவரி முதல் ஆகஸ்ட் மாதம் வரையிலான எட்டு மாத காலத்தில் 2100 பேர் பீடிக்கப்பட்டுள்ளதுடன் அவர்களில் 80 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதாரப் பராமரிப்பு, போஷாக்குத் துறை அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவு தெரிவிக்கின்றது.
எலிக்காய்ச்சல் நாட்டில் பரவுவதைக் கட்டுப்படுத்துவது குறித்து சுகாதார அமைச்சு கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றது. இது தொடர்பான பல விசேட திட்டங்களையும் அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது.
அதனடிப்படையில் எலிக்காய்ச்சலைக் கட்டுப்படுத்துவதற்கு கியூபா நாட்டு பக்யரியா நுண்ணங்கியொன்றைப் பாவிப்பது குறித்தும் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
நாட்டில் டெங்கு வைரஸ் காய்ச்சலைப் பரப்பும் நுளம்புகளின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கு கியூபநாட்டு பி.ரி.ஐ பக்யரியாவைப் பாவிப்பதற்குத் தேவையான நிபுணத்துவ ஆலோசனையைப் பெற்றுக்கொடுக்கவென இலங்கைக்கு விஜயம் செய்த கியுபா மருத்துவ நிபுணர்கள கியூபாவில் எலிக்காய்ச்சலும் மற்றொருவகை பக்யரியாவைப் பயன்படுத்தி; கட்டுப்படுத்தப்பட்டிருக்கின்றது என்றும் தேவைப் படும் பட்சத்தில் அப்பக்யரியா நுண்ணங்கி தொடர்பாகவும் நிபுணத்துவ ஆலோசனை பெற்றுத்தர முடியும் என்று கூறியுள்ளனர்.
இதனடிப்படையில் இங்கும் எலிக்காய்ச்சலைக் கட்டுப்படுத்துவதற்கு பக்யரியா நுண்ணங்கியைப் பாவிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டிருக்கின்றது.
மாத்தளை, கொழும்பு, கம்பஹா, குருநாகல், கண்டி, காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களில் எலிக்காய்ச்சலால் பீடிக்கப்பட்டவர்கள் கூடதலாக காணப்படுகின்றனா

0 Response to "எலிக்காய்ச்சலால் 8 மாதங்களில் 80 பேர் பலி:2100 பேருக்குப் பீடிப்பு"
แสดงความคิดเห็น