அங்குலானை இளைஞர் இருவர் படுகொலை விவகாரம். கடும் நடவடிக்கை எடுக்க ஜனாதிபதி பணிப்புரை.
பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்ட மொரட்டுவ அங்குலான பிரதேச இளைஞர் இருவரின் பெற்றோர்களும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவைச் சந்தித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். பொலிஸாரின் பிடியில் இருக்கும் போது இளைஞர்கள் இருவர் கொல்லப்பட்டமை போன்ற சம்பவங்கள் இனியும் இடம்பெறாத வகையில் சட்டத்தை அமுல்படுத்துமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் அதிகரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் தண்டனையானது தவறிழைக்கும் ஏனைய பொலிஸாருக்கும்; பாடமாக அமையும் என ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார். சில பொலிஸார் மேற்கொள்ளும் இவ்வாறான நடவடிக்கைகள் காரணமாக முழு பொலிஸ் திணைக்களத்திற்குமே அபகீர்த்தி ஏற்படுவதாக அவர் குறிப்பிட்டார். இந்த சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் அதிகரிகளுக்கு எதிராக பக்கச்சார்பின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
0 Response to "அங்குலானை இளைஞர் இருவர் படுகொலை விவகாரம். கடும் நடவடிக்கை எடுக்க ஜனாதிபதி பணிப்புரை."
แสดงความคิดเห็น