அணுகுண்டுகள் வாங்க விடுதலைப்புலிகள் முயற்சித்தார்களா? கைதான பத்மநாதன் கூறியதாக இலங்கை பத்திரிகை தகவல்
விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு அணுகுண்டுகளை வாங்குவதற்கு முயற்சி நடந்ததாக இலங்கை பத்திரிகை தகவல் வெளியிட்டு உள்ளது.அணுகுண்டு வாங்க முயற்சிவிடுதலைப்புலிகள் இயக்கத்தின் புதிய தலைவராக அண்மையில் நியமிக்கப்பட்ட குமரன் பத்மநாதனை இலங்கை போலீசார் தெற்காசிய நாடு ஒன்றில் கைது செய்தனர். பின்னர் அவரை இலங்கைக்கு கொண்டு வந்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.இந்த, விசாரணையின்போது மேற்கத்திய நாடுகளிடம் இருந்து அணுகுண்டுகளையும், அவற்றைத் தயாரிப்பதற்கான தொழில் நுட்பங்களையும் வாங்குவதற்கு விடுதலைப்புலிகள் முயற்சித்ததாக பத்மநாதன் கூறியதாக இலங்கை பத்திரிகையான நேஷன் தகவல் வெளியிட்டுள்ளது.மற்ற நாடுகளுக்கும் பரவியிருக்கும்இலங்கை ராணுவ அதிகாரிகளின் விசாரணையை மேற்கோள்காட்டி வெளியிட்டுள்ள அந்த செய்தியில், `விடுதலைப்புலிகள் இயக்கம், தான் அணுஆயுதங்களை வாங்குவதற்கு முயற்சி செய்த முதல் தீவிரவாத இயக்கம். அவ்வாறு அணுகுண்டுகளையோ, அணு ஆயுதங்களையோ வாங்குவதில் அவர்களுக்கு வெற்றி கிடைத்திருந்தால், அந்த ஆயுதங்கள் மற்ற நாடுகளில் உள்ள தீவிரவாத இயக்கங்களின் கைகளுக்கும் சென்றிருக்கும்` என்று கூறப்பட்டுள்ளது.விசாரணையின்போது, `எங்கிருந்து விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு ஆயுதங்கள் வாங்கப்பட்டது, அதற்காக எப்படி பணம் திரட்டப்பட்டது, கப்பல்கள் மூலம் எவ்வாறு ஆயுதங்கள் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டன, என்ற தகவல்களையெல்லாம் பத்மநாதன் தெரிவித்து இருக்கிறார். விமானங்களை தாக்கி அழிக்கும் ஏவுகணைகளை அமெரிக்க ஆயுத வியாபாரிகளிடமிருந்து வாங்கியதையும், பத்மநாதன் வெளியிட்டு இருக்கிறார்' என்றும் அந்த பத்திரிகை தகவல் வெளியிட்டு உள்ளது.
0 Response to "அணுகுண்டுகள் வாங்க விடுதலைப்புலிகள் முயற்சித்தார்களா? கைதான பத்மநாதன் கூறியதாக இலங்கை பத்திரிகை தகவல்"
แสดงความคิดเห็น