பன்றிக் காய்ச்சலைப் போல நாய்க் காய்ச்சலும் வந்து விட்டது
உலகையே ஆட்டிப்படைத்து வரும் பன்றிக் காய்ச்சல் (Swine flu) பற்றிய பீதி அடங்குவதற்கு முதல் பன்றிகளில் இருந்து மனிதருக்கு தொற்றிய (H1N1) வைரஸுக்கள் போன்று நாய்களில் தொற்றைக் காண்பிக்கும் நாய்க் காய்ச்சல் (Dog flu) வைரஸுக்களின் (H3N8) தாக்கம் அமெரிக்காவில் வெர்ஜினியா மாநிலத்தில் நாய்களிடையே அவதானிக்கப்பட்டுள்ளது.இந்த வைரஸுக்களின் தொற்று மனிதர்களிடையே அவதானிக்கப்படாத போதும் தொற்றுள்ள நாய்களில் இருந்து அவற்றுடன் நெருங்கி உறவாடும் மனிதருக்கு தொற்றக் கூடிய வாய்ப்பைக் கொண்டிருக்கின்றன.மேலும் இந்த வைரஸின் தொற்றுக் கண்ட நாய்களில் காய்ச்சல்,பசியின்மை, சுவாசம் சம்பந்தப்பட்ட அல்லது சளி சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் இருக்கக் காணப்படும்.இந்த வைரஸின் தொற்றுக்கண்டு இதுவரை ஒரு நாய் இறந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
0 Response to "பன்றிக் காய்ச்சலைப் போல நாய்க் காய்ச்சலும் வந்து விட்டது"
แสดงความคิดเห็น