அதர்சியை ஏற்படுத்தியிருக்கும் மலையக யுவதிகளின் மர்ம மரணம்
வறுமை, பொருளாதார நெருக்கடி காரணமாக தோட்டப்புறங்களைச் சேர்ந்த இளைஞர், யுவதிகளில் பெரும்பாலானோர் கொழும்பிலும், நாட்டின் இதர பகுதிகளிலும் வீடுகளில் வேலை செய்து தங்கள் குடும்பத்தை காப்பாற்றி வருகின்றனர். இந்நிலையில் அவர்கள் தாங்கள் வேலை செய்யும் இடங்களில் பல்வேறு துன்பங்களுக்கும், இழப்புக்களுக்கும் ஆளாவதுடன் மிகுந்த நெருக்கடிகளையும் சந்தித்து வருகின்றனர். இருந்த போதிலும் தம்மை நம்பியுள்ளவர்களுக்காக எல்லாவற்றையும் சகித்துக் கொண்டு வேலை செய்வதைத் தவிர, ஏனோ அவர்களுக்கு வேறுவழியிருப்பதில்லை. இவ்வாறு வீடுகள் மற்றும் வேலைத்தலங்களில் பணிபுயும் போது யுவதிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் நெருக்கடிகள் குறித்து ஊடகங்கள் அவ்வப்போது சுட்டிக் காட்டி வருகின்ற போதும் அவை குறித்து பெற்றோர் பெரிதாக கவனத்தில் கொள்வதாக தெரியவில்லை. பல்வேறு சந்தர்ப்பங்களில் தோட்டப்பகுதியில் உள்ள முகவர்கள் அங்குள்ள யுவதிகளை கொழும்புக்கும் மற்றும் இதர இடங்களுக்கும் ஆசை வார்த்தை கூறி அனுப்பி வைத்து பணம் சம்பாதித்து வருகின்றனர். பல வேளைகளில் பெற்றோர் இப் பசப்பு வார்த்தைகளில் அதீத நம்பிக்கை கொண்டவர்களாக, வாழாவிருந்து விடுகின்றனர்.
இவ்வாறு வேலைக்காக அழைத்து வரப்படுபவர்கள் மாதா மாதம் தமது குடும்பங்கங்களுக்கு சம்பளப் பணத்தை அனுப்பி வைத்தால் சரி என்ற நிலைமையே காணப்படுகின்றது. மாறாக அவர்கள் வேலை செய்யும் இடங்களில் எவ்வாறான பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்கின்றனர் என்பது குறித்தெல்லாம் அறிந்துகொள்வதற்கு எவரும் முன்வருவதில்லை. அப்படி அப்பிரச்சினைகள் குறித்து அறிந்து கொண்டாலும் அவற்றைப் பெரிதுபடுத்தாது சமாளித்து நடக்குமாறு கூறப்படும் அறிவுரைகளையே அவ்விளைஞர் யுவதிகள் கேட்க வேண்டியதாகவுள்ளது. அவர்களின் பிரச்சினைகளை செவிமடுத்து அதற்கு காத்திரமான நடவடிக்கைகளை யாரேனும் எடுத்திருப்பார்களாயின் இந்த அவலங்கள் இந்தளவுக்கு தொடராதிருந்திருக்கும்.அந்த வகையில் மஸ்கெலியாவிலிருந்து கொழும்புக்கு பிழைப்புத் தேடி வந்த இரு அப்பாவி ஜீவன்கள் சடலங்களாக கால்வாயில் மிதந்த சம்பவமொன்று அனைத்துத் தரப்பினரதும் மனங்களில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. மரண ஓலமாக ஒலித்துக்கொண்டிருக்கின்றது.சுமதி(வயது 17), ஜீவராணி(வயது 16) ஆகிய இருவரும் மஸ்கெலியா, லக்ஷபான தோட்டம் மேல் பிரிவைச் சேர்ந்தவர்கள்.
அப்போதுதான் அவர்களின் தலைவிதியும் அவர்களுடனேயே பின்தொடர ஆரம்பித்தது.கொழும்பு பௌத்தாலோக மாவத்தையில் அமைந்திருந்த அந்த இரு வீடுகளின் எஜமானிகளும் அவர்களை வரவேற்றனர். அவ்விரு வீடுகளும் அருகருகில் அமைந்தவை.அதனால் சுமதியும் ஜீவராணியும் எவ்வித தயக்கமின்றி தைரியமாக பணிகளைச் செய்ய முற்பட்டார்கள். காலையில் சூயன் உதிக்கும் முன் ஆரம்பிக்கப்படும் அவர்களது வேலைகள் இரவு நித்திரைக்குப் போகும் வரை நீடித்தது. உழைத்துக் களைக்கும் வேளையில் இரு நண்பிகளும் சந்தித்துக்கொள்ளும் அந்த நொடிப்பொழுது அவர்களது வேதனைகளையும் சந்தோஷங்களையும் பரிமாறிக்கொள்ள ஆறுதலாக அமைந்தது. இதற்கிடையில் மாதமொரு கடிதம் கிழமைக்கொரு தொலைபேசி அழைப்பென்று அவர்களின் குடும்பங்களுடன் உரையாடுவதற்கான சந்தர்ப்பம் எஜமானிகளால் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டிருந்தது. இருப்பினும் தமது உறவுகளுடன் சுதந்திரமாக உரையாடுவதற்கான வாய்ப்பு மட்டும் கிட்டவில்லை தமது பிள்ளைகளைப் பார்ப்பதற்காக அவர்களது பெற்றோர் அந்த வீடுகளுக்குச் சென்றால் வீட்டு வாயிலைத் தாண்டி உள்ளே செல்வதற்கான வாய்ப்பு கிட்டவில்லை பிள்ளைகளுடன் உரையாடுவதற்கோ அல்லது அவர்களுக்காக கொண்டுவரும் பொருட்களைக் கொடுப்பதற்கோ விதிக்கப்பட்டிருந்த வரையறை அந்த வாயில் வரை மட்டுப்படுத்தப்பட்டது. இதனால் அவர்கள் பட்ட வேதனை வாயற்ற அந்த வாயிற் கதவுகள் அறியும்.இவ்வாறே காலம் கடந்துகொண்டிருந்தது.அன்று வியாழக்கிழமை, இம்மாதம் 13ஆம் திகதி. தன் பிள்ளையைப் பார்ப்பதற்காக மஸ்கெலியாவிலிருந்து மற்றுமொரு உதவியாளுருடன் கொழும்புக்கு வந்து சேர்ந்தார் ஜீவராணியின் தாய் செல்லாயி.கொழும்பு வருவதற்கான பஸ் கட்டணம் மாத்திரமே அவர்களிடம் இருந்தது. தமது ஊருக்குத் திரும்பிச் செல்லக்கூட அவர்களிடம் பணமிருக்கவில்லை. அவர்கள் கொழும்புக்கு வருவதற்கு முன்னரே தாம் அங்கு வரப் போகும் விடயத்தை ஜீவராணி பணியாற்றும் வீட்டு எஜமானியிடம் தெவித்திருந்தனர். தம்மிடம் பணமில்லை எனும் விடயத்தினையும் அவர்களுக்கு அறிவித்திருந்தார்கள்.இதனைக் கேட்ட எஜமானி புறக்கோட்டை பஸ் நிலையத்திலிருந்து ஆட்டோவில் வரும்படியும் அதற்கான பணத்தை தானே கொடுப்பதாகவும் அவர்களிடம் தெவித்துள்ளார். இதன் பிரகாரம் கடந்த 13ஆம் திகதி வியாழக்கிழமை காலை 7 மணியளவில் கொழும்பு புறக்கோட்டையை வந்தடைந்த ஜீவராணியின் தாயும் மற்றைய நபரும் அங்கிருந்த ஆட்டோவொன்றில் ஏறி தனது மகள் பணிபுயும் வீட்டை வந்தடைந்தனர்.இந்நிலையில் வீட்டுக்குள்ளிருந்து வெளியில் வந்த அந்த வீட்டின் எஜமானி அங்கு வந்துசேர்ந்த ஜீவராணியின் தாயையும் மற்றைய நபரையும் வீட்டு வாசலிலேயே அமர்த்திவிட்டு ஆட்டோவுக்கான பணத்தைக் கொடுப்பதற்காக வளாகத்தை விட்டு வெளியில் சென்றார். இதனையடுத்து ஆட்டோசாரதிக்கும் எஜமானிக்கும் இடையே வெளியில் பெயரி வாக்குவாதமொன்றே இடம்பெற்றுள்ளது. காரணம் புறக்கோட்டையிலிருந்து பௌத் தாலோக மாவத்தையை வந்து சேர்வதற்கான கட்டணமாக ஆட்டோசாரதி 200ரூபாவைக் கேட்டுள்ளார். அத்தொகையைக் கொடுக்க மறுத்த எஜமானி 140ரூபா மட்டுமே தருவதாகக் கூறியுள்ளார். இறுதியில் செய்வதறியாத விளித்த ஆட்டோ சாரதி அந்த 140ரூபாவைப் பெற்றுக்கொண்டு எஜமானியையும் திட்டிவிட்டுச் சென்றுள்ளார்.ஆட்டோ சாரதியை அனுப்பிவிட்டு வீட்டுக்குள் நுழைந்துள்ள எஜமானி ஜீவராணியிடம் அவ்விருவருக்கும் தேநீர் கொடுக்குமாறு உத்தரவிட்டு அவர்களிருவருக்கும் இவ்விரு பிஸ்கட்டுக்களையும் வழங்கியுள்ளார் அத்துடன் ஜீவராணியின் சம்பளப்பணமான முவாயிரம் ரூபாவினையும் அவர்களிடம் கொடுத்து ஊருக்கு வழியனுப்பி வைத்துள்ளார். அந்த இடைப்பட்ட நேரத்தில் தனது மகள் ஜீவராணியுடன் உரையாடிய செல்லாயி தீபாவளிப் பண்டிகைக்கு ஊருக்கு அழைத்துச் செல்வதாகக் கூறியுள்ளார்.செல்லாயி வந்துசென்ற அடுத்த நாள் அதாவது 14ஆம் திகதி வெள்ளிக்கிழமை சுமதியும் ஜீவராணியும் பணிபுரிந்து வந்த வீடுகளின் எஜமானர்கள் சுற்றுலாப் பயண மொன்றை மேற்கொண்டு வெளியில் சென்றுள்ளனர். இருப்பினும் சுமதியையும் ஜீவராணியையும் அவர்கள் கூடவே அழைத்துச் செல்லவில்லை. இதனால் அவர்களிருவரும் ஒருவருக்கு ஒருவர் துணையாக ஒரே வீட்டில் தங்கியிருக்கும் நிலை ஏற்பட்டது. அதற்கான ஏற்பாடுகளையும் மேற்கொண்டுவிட்டே அவர்கள் பணிபுரிந்த வீட்டார் சென்றிருந்தனர்.இந்நிலையில் அன்றைய தினம் தன்னுடைய குடும்பத்தாருடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு உரையாடிய சுமதி வீட்டில் யாரும் இல்லாததால் நானும் ஜீவராணியும் ஒன்றாகத்தான் இருக்கின்றோம். எங்களுக்கு எவ்விதமான பிரச்சினையும் இல்லை. தீபாவளி வரை நாங்கள் இங்கு வேலை செய்கின்றோம். அதற்கு பிறகு எங்களை வீட்டுக்கு கூட்டிட்டு போங்கள் என்றுகூறிவிட்டு அழைப்பினைத் துண்டித்துள்ளார்.இப்படியே அன்றை நாள் கடந்தது. மறுநாள் காலை அதாவது சனிக்கிழமை காலை 6.30 மணியளவில் மஸ்கெலியாவிலுள்ள சுமதியினதும் ஜீவராணியினதும் வீடுகளுக்கு தொலைபேசி அழைப்புக்கள் வந்தன. அந்த அழைப்பில் கூறப்பட்ட விடயத்தை அறிந்த இரு வீட்டாரும் அதிர்ச்சிக்குள்ளாகினர். செய்வதறியாது தவித்தனர். யாருடைய உதவியை நாடலாம் என்று அங்கலாய்த்தனர்.சுமதியையும், ஜீவராணியையும் காணவில்லை என்று வீட்டு எஜமானார்கள் தொலைபேசி மூலம் தெவித்திருந்தனர். இதுவே அதிர்ச்சிக்கு காரணமாகும். இவ்வாறிருக்க சில மணிநேரம் கடந்து மீண்டுமொருறை தொலைபேசி அலறியது. மறுனையில் கொழும்பில் தமது பிள்ளைகள் பணிபுயும் வீடுகளின் உரிமையாளர்கள். காணாமல் போயுள்ளதாகக் கூறிய சுமதியினதும் ஜீவராணியினதும் சடலங்கள் கால்வாய் ஒன்றில் கிடப்பதாகவும் அவ்விருவரும் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும் கூறினார்கள்.வாழவேண்டிய இரு ஜீவன்கள் தமது வாழ்க்கையை இழந்து சடலமாகக் கிடப்பதான செய்தி அவர்களின் பெற்றோரது நெஞ்சைப் பிளந்தது. செய்தியைக் கேட்டு கத்தினார்கள், கதறினார்கள். இருந்தும் என்ன பயன்? அவர்கள் மீண்டும் உயிருடனா திரும்பப் போகிறார்கள்? சடலங்களைப் பொறுப் பேற்க வேண்டும். அவர்களுக்கு என்ன நடந்தது என்று அறிந்துகொள்ள வேண்டும்.அவர்களது மரணங்களுக்கு உரியவர்கள் பொறுப்புக்கூற வேண்டும் என்ற தீர்மானத்துடன் இரு வீட்டாரும் கொழும்பு நோக்கிப் புறப்பட்டனர். மறுநாள் காலை அதாவது ஞாயிற்றுக்கிழமை சுமதி மற்றும் ஜீவராணி ஆகிய இருவரதும் உறவினர்கள் கொழும்பை வந்தடைந்தனர். அவர்கள் அவ்வாறு வந்து சேர்வதற்குள் இரு யுவதிகளின் சடலங்களும் கால்வாயிலிருந்து பொலிஸாரால் மீட்கப்பட்டன. அவை மீட்கப்பட்ட போது அவர்களில் ஒருவருடைய பின்மண்டையிலிருந்து இரத்தம் வழிந்தோடியதற்கான அறிகுறிகள் காணப் பட்டதாக தெவிக்கப்படுகிறது. இருப்பினும் இந்தத் தகவல் உறுதிப்படுத்தப்படாத ஒன்றே.இதேவேளை தமிழில் எழுதப்பட்ட கடித மொன்றும் அவர்களது சடலங்கள் காணப்பட்ட கால்வாய்க்கு அருகில் இருந்து பொலிஸாரால் கண்டெடுக்கப்பட்டது. அத்துடன் அவர்கள் அணிந்திருந்த பாதணிகளும் அந்த கடிதத்துக்கு அருகிலேயே காணப்பட்டன. கடிதத்தைப் பிரித்து வாசித்த பொலிஸார் அதில் தங்களது தற்கொலைக்கு எவரும் காரணம் இல்லை என்றும் ஜீவராணிக்கு ஏற்பட்ட பிரச்சினை காரணமாகவே நாம் இந்த முடிவை எடுத்துள்ளோம் என்றும் குறிப்பிடப்பட்டிருந்ததாகக் கூறுகின்றனர். ஆனால் குறித்த யுவதிகளின் பெற்றோர் இதனை மறுக்கின்றனர்.கடிதத்திலுள்ள எழுத்துக்கள் தமது பிள்ளைகளின் எழுத்தல்ல என அவர்கள் கூறுகின்றனர். இவ்வாறிருக்க சடலங்கள் பிரேத பசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டன. அதில் இவ்விருவரும் நீல்ழ்கியே உயிழந்துள்ளனர் என்று அறிவிக்கப்பட்டது. அத்துடன் அவர்களது உடல்களில் எவ்வித காயங்களும் காணப்படவில்லை என்றும் தெவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் கொழும்பு சட்ட வைத்தியதிகாரி அலுவலகத்தில் இடம்பெற்ற யுவதிகளின் மரண விசாரணையின் போது சகமளித்த யுவதிகளின் பெற்றோர் உறவினர்கள் தமது பிள்ளைகளுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கு உய நியாயம் கிடைக்கப்பட வேண்டும் என்றும் அனைத்துத் தரப்பினடம் கோரிக்கை விடுத்தனர்.அங்கு அவர்களது பெற்றோர் கூறிய கருத்துக்கள் சில.சுமதியின் தந்தை எம். லெச்சுமன் சுமதிக்கு தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு எந்த பிரச்சினையும் இருக்கவில்லை எனவே எனது பிள்ளையின் மரணம் தொடர்பாக உண்மை நிலை கண்டறியப்பட வேண்டும். எமது பிள்ளைகள் தற்கொலை செய்வதற்கு முன் தமிழில் கடிதம் எழுதியுள்ளதாக கூறப்படுகிறது. அந்த கடிதத்திலுள்ள கையெழுத்து எமது பிள்ளைகளின் கையெழுத்தில்லை என்றார்.ஜீவராணியின் தாய் செல்லாய் நான் ஜீவராணியை பார்க்க வந்தபோது என்னிடம் போதியளவு பணம் இருக்கவில்லை.கொழும்பு மத்திய பஸ் நிலையத்திலிருந்து ஜீவராணி வேலை செய்யும் இடத்திற்கு செல்லக் கூட பணம் இல்லாததால் ச்சக்கர வண்டியில் வரும்படியும் அதற்கு அவர்களே பணம் கொடுத்தார்கள். ஆனால் நான் அன்று மது போதையில் வந்ததாக வீட்டு உரிமையாளர்கள் பொலிஸாடம் முறையிட்டுள்ளனர். பொய்யான விடயத்தைக் கூறி என்மீது பழிசுமத்துகின்றார்கள். என்னை இவ்வாறு குற்றம் சுமத்துகிறார்கள் என்றால் என் மகளுக்கு என்ன நடந்திருக்கும் என்று என்னால் நினைத்து பார்க்கவே முடியாமல் உள்ளது. எனவே எனது மகளின் மரணம் சந்தேகத்திற்கிடமாக உள்ளது. எனது மகளுக்கு அநியாயம் செய்தவர்கள் ஒரு போதும் நன்றாக இருக்க மாட்டார்கள் என அழுது புலம்பி யபடி கூறினார்.பிள்ளைகளைப் பெற்று வளர்த்து அவர்கள் சந்தோஷமாக வாழ்வதைப் பார்த்து மகிழும் பெற்றோருக்கு மத்தியில் இந்த இரு இளசுகளின் வாழ்க்கை பாதியிலேயே கருகிப்போனதை பார்த்துக் கண்ணீர் விடும் இந்த பெற் றோன் நிலைமைக்கு நீதி நியாயம் கிடைக்க வேண்டும் என்பதே அனைவரதும் பிரார்த்தனையாகும்.எவ்வாறெனினும் அந்த யுவதிகளின் மரணம் தற்கொலையில் முடியவில்லை என்பது மட்டும் உறுதி என்று அவர்களின் பெற்றோர் கூறும் கருத்து எந்தளவில் உண்மை என்பதை உரிய தரப்பு அதிகாரிகளே உறுதிப்படுத்த வேண்டும். இதேவேளை வறுமை மற்றும் பொருளாதார நெருக்கடி எந்த அளவிற்கு தாண்டவமாடினாலும் தோட்டப் பகுதி மக்கள் தமது பிள்ளைகளை வீடுகளுக்கு வேலைக்கு அனுப்பி வைப்பதை முற்றாக தவிர்க்க முற்படுவார்களாயின் இவ்வாறான அவலங்களிலிருந்து தமது பிள்ளைகளைப் பாதுகாத்துக்கொள்ள முடியும். அதனைப் பெற்றார் உணர வேண்டும். மலையக யுவதிகள் இருவன் மரணத்தில் சந்தேகத்தினை பெற்றோர் கிளப்பியுள்ளமையினால் உயரி விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு உண்மை நிலை உணர்த்தப்பட வேண்டும். இரு உயிர்கள் பறிபோனமைக்கு உயரி பதில் விசாரணைகள் மூலம் கிட்ட வேண்டும்.தயவு செய்து எமது தமிழ அரசியல் வாதிகள் இதில் கவனம் செலுத்த வேண்டும்
0 Response to "அதர்சியை ஏற்படுத்தியிருக்கும் மலையக யுவதிகளின் மர்ம மரணம்"
แสดงความคิดเห็น