முகாம்களிலுள்ள மக்களை பார்வையிட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தாக்கல் செய்த மனு மீண்டும் விசாரணைக்கு
மோதல்கள் காரணமாக இடம்பெயர்ந்து நிவாரண கிராமங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை பாராளுமன்ற உறுப்பினர்கள் சென்று பார்வையிட அனுமதி வழங்க வேண்டுமெனக் கோரி எதிர்க்கட்சிகள் தாக்கல் செய்திருந்த மனு இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.இதில் கலந்துகொண்ட எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயலத் ஜயவர்த்தன, கருத்து தெரிவிக்கையில் .இன்று நீதிமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அங்கு சென்று மேற்கொள்ள இருக்கும் நற்பணிகள் தொடர்பில் தமது தரப்பில் ஆஜரான சட்டதணி சி. ஜே வெலியமுன நீதிமன்றத்தில் இன்று விளக்கமளித்தார்.இதனையடுத்து இவ்வழக்கு தொடர்பான விசாரணை மீண்டும் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 29 ஆம் திகதி எடுத்துகொள்ளப்படவுள்ளது. தாக்கல் செய்யப்பட்டிருக்கும் இந்த மனு தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றம் சாதகமான தீர்ப்பை வழங்கும் என தாம் உட்பட எதிக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களான , லக்ஷ்மன் செனவிரத்ன,மங்கள சமரவீர, ஹசன் அலி மற்றும் மனோ கணேசன் ஆகியோர் நம்புவதாகவும் ஜெயலத் ஜயவர்த்தன மேலும் தெரிவித்தார்.மனோகணேஷன் கருத்து தெரிவிக்கையில்மோதல்கள் காரணமாக இடம்பெயர்ந்து நிவாரண கிராமங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை பாராளுமன்ற உறுப்பினர்கள் சென்று பார்வையிட அனுமதி அளிக்கபப்டாமை " ஒரு தனிப்பட்ட பிரச்சினை அல்ல , இது ஒரு அரச பிரச்சினை அல்ல, இது ஒரு தேசிய பிரச்சினை .நாம் இந்த நாட்டின் பங்காளிகள் இதை அரசு புரிந்துகொள்ள வேண்டும். வடக்கில் இடம்பெயர்ந்து உள்ள மக்கள் எமது சகோதர சகோதரிகளே"..மேலும் இந்த பருவ மழையினால் முகாம்களில் உள்ள மக்கள் பல இன்னல்களை சந்தித்து வருகின்றனர். எனவே எமது மக்களை பார்வையிட அரசு அனுமதி அளிக்க வேண்டும். நாம் அங்கு செல்ல விரும்புவது அரசில் நோக்கத்திற்க்காக அல்ல இன்னல் படும் மக்களின் தேவைகளை ஈடுசெய்வதற்காகவே நாம் அனுமதி கேட்கிறோம். எனவே அரசு எமக்கு அனுமதி வழங்க தடையை ஏற்படுத்த கூடாது என நான் அரசிடம் கோரிக்கை விடுப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.
0 Response to "முகாம்களிலுள்ள மக்களை பார்வையிட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தாக்கல் செய்த மனு மீண்டும் விசாரணைக்கு"
แสดงความคิดเห็น