கிழக்கில் அரசாங்க அலுவலர்களுக்குச் சிங்கள தமிழ் மொழியிலும் பயிற்சிகளை அளிக்க அமெரிக்கா நிதி உதவி
கிழக்கு மாகாணத்திலுள்ள, பதினோரு உள்ளூராட்சி மன்றங்களைச் சேர்ந்த, தெரிவு செய்யப்பட்ட அரசாங்க அலுவலர்களுக்கும் பதவியாளர்களுக்கும், சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க ஏஜென்ஸி (USAID)> தமிழ் மொழி, சிங்கள மொழிப் பயிற்சிகளை வழங்குகின்றது. கிழக்கில் நல்லாட்சியையும் மனிதப் பாதுகாப்பையும் உயர்த்துவதற்காக, ஐக்கிய அமெரிக்க அரசாங்கத்தின் அபிவிருத்தி ஏஜென்ஸியான, சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க ஏஜென்ஸி, மூன்று வருடங்களுக்கான நிதியை, வழங்குகின்றது. இந்நிகழ்ச்சித் திட்டம் பிராந்திய ஆட்சிக்கு ஆதரவளித்தல் (SuRG) என அழைக்கப்படுகின்றது.உள்ளூராட்சியை உருவாக்குவதும், பிரதேசச் சமுதாயத் தேவைகளுக்குத் துலங்கும் தன்மையை மேம்படுத்துவதும் இதன் இலக்காகும். ஐந்து நாட்களை உள்ளடக்கிய இந்நிகழ்ச்சி, நவீன மொழிப் பயிற்சி நுட்பங்கள், அரசாங்க மொழிகள் கொள்கை, மொழிக்கும் கலாச்சாரத்திற்கும் இடையிலுள்ள தொடர்பு என்பவற்றைப் பங்குபற்றுநர்களுக்கு அறிமுகப்படுத்தியது. கிழக்கு மாகாணத்தில், பதினோருஉள்ளூ ராட்சி மன்றங்களைச் சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட 149 அரசாங்க அலுவலர்களுக்கும் பதவியாளர்களுக்கும், சிங்கள மொழிப் பயிற்சியையும் தமிழ் மொழிப் பயிற்சியையும் இப்பயிற்றுநர்கள் வழங்கவுள்ளனர்.சிங்கள அலுவலர்கள் தமிழைக் கற்கும்போது, அல்லது தமிழ் அலுவலர்கள் சிங்களத்தைக் கற்கும்போது, அது ஒரு முக்கியமான செய்தியை வழங்குவதுடன் சகல இனக் குழுக்களுக்கும் சேவையாற்றுவதில் அவர்கள் கொண்டுள்ள ஈடுபாட்டையும் அது எடுத்துக்காட்டுகின்றது.என சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க ஏஜென்ஸியின் பணிக்குழுவின் பணிப்பாளர் ரெபேக்கா கோன் தெரிவித்துள்ளார்.சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க ஏஜென்ஸியினூடாக, அமெரிக்க மக்கள், ஏறத்தாழ 50 வருடங்களாக, உலகம் முழுவதிலுமுள்ள, அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளின் அபிவிருத்திக்கான உதவிகளையும் மனிதாபிமான உதவிகளையும் வழங்கி வந்துள்ளார்கள். இலங்கை வாழ் மக்கள் அனைவரினதும் நன்மைக்காக, 1956 ஆம் ஆண்டு முதல், சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க ஏஜென்ஸி இலங்கை, ஏறத்தாழ இரண்டு பில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களை முதலீடு செய்துள்ளது. என்பது குறிப்பிட்டத்தகக்தாகும்.
0 Response to "கிழக்கில் அரசாங்க அலுவலர்களுக்குச் சிங்கள தமிழ் மொழியிலும் பயிற்சிகளை அளிக்க அமெரிக்கா நிதி உதவி"
แสดงความคิดเห็น