கொரியாவில் கள்ளநோட்டு அடித்த இலங்கையர் கைது.
கொரியாவில் சட்டவிரோதமாக பணத்தாள்களை அச்சிட்ட 28 வயதுடைய இலங்கையர் ஒருவர் கைது செய்து தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கொரிய தூதுவராலயம் தெரிவித்துள்ளது. குறித்த இலங்கையர் கைது செய்யப்படும் போது அவரிடம் இருந்து 10 ஆயிரம் வொன்கள் பெறுமதியான 39 போலியாக அச்சிடப்பட்ட கொரிய பணத்தாள்களும் மீட்கப்பட்டுள்ள தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அவர் இந்த சட்ட விரோத நடவடிக்கைக்கு பயன்படுத்திய அச்சு இயந்திரம் மற்றும் கணணியும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கைதானவர் கடந்த 2006ம் ஆண்டு தனியார் வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவரின் ஊடாக தென் கொரியாவிற்கு சென்று ஆலை ஒன்றில் பணியாற்றியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது சேவைக்காலம் எதிர்வரும் 28ம் திகதி நிறைவடையும் நிலையிலேயே அவர் இந்த சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். கைதானவர் தற்போது கொரிய பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக தென்கொரிய பொலிஸ் நலன்புரி அதிகாரி சுஹைர் தெரிவித்துள்ளார்.
0 Response to "கொரியாவில் கள்ளநோட்டு அடித்த இலங்கையர் கைது."
แสดงความคิดเห็น