அதிகாரப்பகிர்வு வழங்கலின் உறுதிப்பாட்டை இந்தியா எதிர்பார்க்கின்றது. இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ் எம் கிருஷ்ணா தெரிவிப்பு.
இலங்கை தமிழர்களுக்கான உரிய அதிகாரப்பகிர்வு வழங்கலின் உறுதிப்பாட்டை இந்தியா எதிர்பார்ப்பதாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ் எம் கிருஷ்ணா தெரிவித்துள்ளார். புலிகள் தற்போது தோற்கடிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த உறுதிப்பாடு அவசியமாக கருதப்படுவதாக அமைச்சர் எஸ் எம் கிருஷ்ணா நேற்று இடம்பெற்ற இந்தியாவின் வெளிநாட்டு கொள்கைகள் மாநாட்டின் போது குறிப்பிட்டுள்ளார். இந்த உறுதிப்பாடு இலங்கைக்கான மிகச்சிறந்த அரசியல் தீர்வாக அமையும் எனவும் இதன் போது அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை சீனாவும் இந்தியாவும் பேச்சுவார்த்தைகள் மூலம் ஒரு இணக்கப்பாட்டை கண்டு, அதன் ஊடாக அண்டைய நாடுகளின் விவகாரங்களை அவதானிக்க வேண்டும் எனவும் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ் எம் கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.
0 Response to "அதிகாரப்பகிர்வு வழங்கலின் உறுதிப்பாட்டை இந்தியா எதிர்பார்க்கின்றது. இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ் எம் கிருஷ்ணா தெரிவிப்பு."
แสดงความคิดเห็น