திரைத்துறையில் கமல் பொன் விழா
கமல்ஹாசனின் திரையுலக பொன் விழாவையொட்டி விஜய் டி.வி. "உலக நாயகன் கமல் ஐம்பது' என்ற பெயரில் விழா எடுக்கிறது.
"களத்தூர் கண்ணம்மா' படம் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகர் கமல்ஹாசனுக்கு திரைத் துறையில் இது 50-வது வருடம். இதையொட்டி சிறப்பு விழா மற்றும் நிகழ்ச்சிகளுக்கு விஜய் டி.வி. ஏற்பாடு செய்துள்ளது. இது குறித்த பத்திரிக்கையாளர் சந்திப்பு ஞாயிற்றுக்கிழமை சென்னையில் நடைபெற்றது. இதில், நடிகர்கள் சரத்குமார், குஷ்பூ, யூகிசேது, இயக்குநர்கள் சேரன், ஏஆர்.முருகதாஸ், மிஷ்கின், எஸ்.பி.பி.சரண், ஒளிப்பதிவாளர் ரவி கே.சந்திரன், விஜய் டி.வி. பொது மேலாளர் ஸ்ரீராம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கமல்ஹாசனின் 50-ம் ஆண்டு சினிமா வாழ்க்கையை விஜய் டி.வி. பிரமாண்டமான விழாவாக நடத்த முன் வந்துள்ளது.
தமிழகம் முழுவதும் விழாக்கள் நடத்தப்படுகிறது. இந்த நிகழ்ச்சிக்காக "கமல் எக்ஸ்பிரஸ்' என்ற பெயரில் பேருந்து தமிழக நகரங்களில் உலா வர இருக்கிறது. இந்த பேருந்தில் அவரின் புகைப்படங்கள், சுவாரஸ்ய தகவல்கள், குறும்படங்கள் ஆகியவை இடம் பெற்றிருக்கும். பேருந்தில் இருக்கும் ஆட்டோகிராப் பேனரில் ரசிகர்கள் கையெழுத்து இட்டு கமல்ஹாசனுக்கு வாழ்த்துக்களை தெரிவிக்கலாம்.
இதையடுத்து கோவையில் "கமலும் தமிழும்' மற்றும் "கமலும் காதலும்' என்ற பெயரில் விழாக்கள் நடக்கிறது. இதில் திரை பிரபலங்கள் பங்கேற்கிறார்கள் இதையடுத்து "கமல் திரைப்பட விழா' ஒன்றும் நடத்த முயற்சிக்கப்பட்டு வருகிறது. இதில் கமல்ஹாசனின் சிறந்த 16 படங்கள் திரையிடப்படுகின்றன. இதன் பிறகு "உலகநாயகனின் பையோகிராஃபி' என்ற பெயரில் ஆகஸ்ட்-31 முதல் விஜய் டி.வி.யில் அவரின் திரைப்பட அனுபவங்கள் திங்கள்கிழமை முதல் வியாழக்கிழமை வரை ஒளிபரப்படுகிறது.
நிறைவாக சென்னையில் இந்திய திரைப் பிரபலங்கள் பங்கேற்கும் "உலக நாயகன் ஐம்பது' விழா நடைபெறுகிறது, என்றார் விஜய் டி.வி.யின் பொது மேலாளர் ஸ்ரீராம்.

0 Response to "திரைத்துறையில் கமல் பொன் விழா"
แสดงความคิดเห็น