jkr

மிதிவெடிகளை அகற்றுவதற்கென ஸ்லொவாக்கியா அரசாங்கத்திடம் 5 இயந்திரங்கள் இலங்கை அரசாங்கம் கொள்வனவு


யுத்தம் நடைபெற்ற பகுதிகளில் மிதிவெடிகளை அகற்றுவதற்கென ஸ்லொவாக்கியா அரசாங்கத்திடம் 250 மில்லியன் ரூபா செலவில் இலங்கை அரசாங்கம் கொள்வனவு செய்த 5 இயந்திரங்களை தேச நிர்மான அபிவிருத்தி மற்றும் உட்கட்டமைப்பு அமைச்சின் செயலாளர் டபிள்யு.கே.கே.குமாரசிறிஇமீள்குடியேற்ற மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் றிசாத் பதியுதீனிடம் இன்று(2009.09.04) கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கையளித்தார். தற்போது வடக்கில் மன்னார் மாவட்டத்தில் முசலிஇமாந்தை.மடு பிரதேச செயலகப் பிரிவில் கண்ணிவெடி அகற்றப்படாத பிரதேசங்களில் இப்ணிகளுக்கென இந்த ஜந்து இயந்திரங்களும் பயன்படுத்தப்படவுள்ளதாக அமைச்ச்ர றிசாத் பதியுதீன் அங்க கூறினார். மக்களை அவர்களது சொந்த இடங்களில் பாதுகாப்பாக குடியமர்த்த அரசாங்கம் பல்வேறுபட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்துவருவதாக தெரிவித்த அமைச்சர் றிசாத் பதியுதீன்இ நலன்புரி கிராமங்களில் தங்க வைக்கபட்டுள்ள மக்களை துரிதமாக மீளக் குடியமர்;த்தும் பணிகளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் முன்னெடுத்துவருவதாகவும் கூறினார். இந்த நிகழ்வில் பிரதி அமைச்சர் சரத் குணதிலகஇஜனாதிபதியின் இணைப்பளார் லலத் அபயகுணவர்தன உட்பட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "மிதிவெடிகளை அகற்றுவதற்கென ஸ்லொவாக்கியா அரசாங்கத்திடம் 5 இயந்திரங்கள் இலங்கை அரசாங்கம் கொள்வனவு"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates