இந்தியாவில் முதல் தடவையாக அரவாணி அழகிப் போட்டி

அரவாணிகளைச் சமுதாயத்தில் ஒருவராக நினைத்துப் பழக வேண்டும் என்ற விழிப்புணர்வை உருவாக்கும் நோக்கில் சென்னையில் எதிர்வரும் டிசம்பரில் முதன் முறையாக மிஸ் இந்தியா அரவாணி அழகிப் போட்டி நடைபெறவுள்ளது. அரவாணிகள் பற்றி இந்திய மக்களின் மனதில் தவறான கருத்துக்கள் பதிந்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.இந்த எண்ணத்தை மாற்றி, அவர்களைச் சமுதாயத்தில் ஒருவராக நினைக்க வேண்டும் என்ற எண்ணத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தவே இந்த அழகுராணிப் போட்டி நடத்தப்பட உள்ளது. இதில் வெற்றி பெறும் அரவாணிக்கு அழகிப் போட்டி பட்டம் வழங்கப்படும்.இந்திய அளவில் இது போன்ற போட்டி நடக்க இருப்பது இதுவே முதல் முறையாகும்.







0 Response to "இந்தியாவில் முதல் தடவையாக அரவாணி அழகிப் போட்டி"
แสดงความคิดเห็น